செய்திகள் :

சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய முதியவர்; மருத்துவமனையிலிருந்து தப்பி ஒட்டம்!

post image

தமிழகத்தில் அடுத்தடுத்து கைதிகள் சிறைகளிலிருந்து தப்பிச் செல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சென்னை புழல் சிறையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பி ஓடினர். அதைத் தொடர்ந்து தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடினர். அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவத்தையடுத்து சிறைத்துறை டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் சிறைத்துறை இயக்குநராக சங்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதன்பிறகும் கோவை சிறையிலிருந்து கைதி ஒருவர் தபபி ஓடினார். சென்னை புழல், தேனி ஆகிய சிறைகளிலிருந்து தப்பி ஓடிய கைதிகளை போலீஸார் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்திருக்கிறார்கள். கவனக்குறைவாக இருந்த சிறை வார்டன்கள், கண்காணிப்பாளர்கள் வரை சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை கொளத்தூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் பள்ளி மாணவிகளை ஆட்டோவில் அழைத்துச் செல்லும் டிரைவர் டேவிட் (60) என்பவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர், டிரைவர் டேவிட்டைப் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரைப் பிடித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தப்பி ஓட்டம்!

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், டிரைவர் டேவிட் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர். இந்தநிலையில் டேவிட்டை பொதுமக்களில் சிலர் அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் காயமடைந்த டேவிட், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் பாதுகாப்புக்காக மருத்துவமனைக்கு சில காவலர்கள் சென்றிருந்தனர். சிகிச்சை பெற்று வந்த டேவிட், மருத்துவமனையிலிருந்து தப்பி ஒடிவிட்டார். அவரைக் காணவில்லை என்று போலீஸார், தங்களின் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு டிரைவர் டேவிட்டை போலீஸார் தேடி வருகிறார்கள். போலீஸ் பிடியிலிருந்து முதியவர் தப்பி ஓடிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திரா: பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவிகள் மீது ரம்பத்தால் தாக்குதல்; தப்ப முயன்ற இளைஞர் கைது!

ஆந்திரா மாநிலம், அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ராப்தாடில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது ​​21 வயது இளைஞர் ஒருவர், மின்சாரத்தால் இயங்கும் ரம்பத்துட... மேலும் பார்க்க

கோவை: கைதி தப்பியோடிய விவகாரம் – எஸ். ஐ உட்பட 4 போலீஸார் சஸ்பெண்ட்!

தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற பரபரப்பு அடங்காத நிலையில், கோவை சிறை வளாகத்தில் இருந்து ஒரு கைதி தப்பியோடிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்,... மேலும் பார்க்க

வகுப்பறைக்குள் புகுந்து மாணவி மீது ரம்பத்தால் தாக்குதல்: ஆந்திராவில் அதிர்ச்சி! - என்ன நடந்தது?

ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் கொடூரச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராப்தாடு ஜே.பி. உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைக்குள் ... மேலும் பார்க்க

பெற்றோரிடம் சொல்லாமல் இந்தியா வருகை - லண்டனில் படித்துக்கொண்டிருந்த பெண் புனே வீட்டில் பிணமாக மீட்பு

மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகரை சேர்ந்தவர் முகதா தேஷ்முக்(34), கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்பிஏ படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். அங்கு தனியாக வசித்துக்கொண்டு அவர் பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டு வந்தார்... மேலும் பார்க்க

கோவை சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம் – மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற பரபரப்பு அடங்காத நிலையில், கோவை சிறையில் இருந்து ஒரு கைதி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் க... மேலும் பார்க்க

போதைக்கு அடிமையாகி சிறையில் இருந்த மகன்; ஜாமீனில் கொண்டு வந்த தாயைக் கொன்ற கொடூரம்!

போதைக்கு அடிமையான 20 வயது மகன், பாசம் காட்டிய தாயை கொடூரமாக கொலை செய்த சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. murderதருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே இண்டூரை சேர்ந்த கூலித் தொழ... மேலும் பார்க்க