செய்திகள் :

"இனி சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத்தானேதான் செய்துகொள்ள வேண்டும்" - உதயநிதி

post image

இந்த வாரத்தின் தொடக்கத்தில் தேனி தேக்கம்பட்டி துணைச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பி ஓடினர். நேற்று கோவையிலிருந்து ராகவன் என்னும் விசாரணைக் கைதி தப்பி ஓடியுள்ளார். இவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையிலிருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பதிவு
உதயநிதி ஸ்டாலின் பதிவு

அடுத்து பாளையங்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.

தோல்விப் பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார். மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு எனத் தெரிந்துகொண்டு சிறையிலிருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.

இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத்தானேதான் செய்துகொள்ள வேண்டும்.

‘மெத்’ அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

ஈரான் போர்: `ஐரோப்பாவுக்கு மட்டும் 100 பில்லியன் யூரோவுக்கும் அதிகமான செலவு' - இந்தியாவின் நிலை?

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயேதான் இருக்கிறது.தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பா WTI எண்ணெய் 104 டாலருக்கும், Brent கச்சா எண்ணெய் 112 டாலருக்கும் வர்த்தகமாகிக் கொண்ட... மேலும் பார்க்க

'மருத்துவமனையில் 50 நாட்களை கடந்த வி.எஸ்.பாபு!' - அப்டேட் கொடுக்காத அரசு!

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 நாட்களை கடந்துவிட்டது. ஆனால், மருத்துவமனை தரப்பிலோ அரசு தரப்பிலோ அவரின் உடல்நிலை குறித்து முறையான அறிக்க... மேலும் பார்க்க

``சதி... முறைகேடு... தொடர் நிதியிழப்பு” - சீர்குலைக்கப்படுகிறதா வட ஆற்காடு வன்னியர் சங்கம்?

வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு 1917-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது வட ஆற்காடு மாவட்ட வன்னிய குல சத்திரிய சங்கம். அரசியல் சார்பில்லாமல், வன்னியர் சமூக மக்கள் மற்றும் மாணவர்களின் நலன்களைக் காப்பதற்... மேலும் பார்க்க

`சிறை சோதனைக்காகக் காத்திருந்த வேளை.!' - கோவை மத்திய சிறையில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி யார்?

கோவை சிறையில் இருந்து ஒரு விசாரணைக் கைதி தப்பி ஓடியுள்ளார்.கோவை அன்னூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு ஒன்றில் நேற்று (அக்டோபர் 30) கைது செய்யப்பட்டவர் ராகவன். இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர்... மேலும் பார்க்க