செய்திகள் :

'மருத்துவமனையில் 50 நாட்களை கடந்த வி.எஸ்.பாபு!' - அப்டேட் கொடுக்காத அரசு!

post image

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 நாட்களை கடந்துவிட்டது. ஆனால், மருத்துவமனை தரப்பிலோ அரசு தரப்பிலோ அவரின் உடல்நிலை குறித்து முறையான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. இது தொகுதி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

வி.எஸ்.பாபு
வி.எஸ்.பாபு

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூரில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை வி.எஸ்.பாபு தோற்கடித்திருந்தார். இதனால் தமிழகம் முழுவதுமே கவனிக்கப்படக் கூடிய எம்.எல்.ஏவாக வி.எஸ்.பாபு மாறினார்.

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைந்தக்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வி.எஸ்.பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என தகவல்கள் பரவிய நிலையில், மருத்துவமனை தரப்பில் அவருக்கு சுவாசக்கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அறிக்கை வெளியானது. அடுத்த சில நாட்களிலேயே அவரிடன் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அறிக்கை கொடுக்கப்பட்டது.

VS Babu
வி.எஸ்.பாபு - VS Babu

கடைசியாக செப்டம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனை தரப்பிலிருந்து வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியானது. அதன்பிறகு மருத்துவமனை தரப்பில் எந்த அப்டேட்டும் இல்லை. இடையில் முதல்வர் விஜய் ஒரு முறை வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு வந்தார். அமைச்சர்கள் அருண்ராஜ், வெங்கட்ரமணன் போன்றோரும் மருத்துவமனைக்கு சென்று வந்தனர். சமீபத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர், 'நான் வி.எஸ்.பாபுவிடம் போனில் பேசினேன். அவர் நலமாக இருக்கிறார்' என்றார்.

வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து அதிமுக, புதிய தமிழகம் கட்சியினர் போன்றோரும் கேள்வி எழுப்பியிருந்தனர். சென்னையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும் காலத்தில் தங்கள் தொகுதியின் எம்.எல்.ஏ குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் தெரியாமல் கொளத்தூர் மக்களும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

``சதி... முறைகேடு... தொடர் நிதியிழப்பு” - சீர்குலைக்கப்படுகிறதா வட ஆற்காடு வன்னியர் சங்கம்?

வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு 1917-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது வட ஆற்காடு மாவட்ட வன்னிய குல சத்திரிய சங்கம். அரசியல் சார்பில்லாமல், வன்னியர் சமூக மக்கள் மற்றும் மாணவர்களின் நலன்களைக் காப்பதற்... மேலும் பார்க்க

`சிறை சோதனைக்காகக் காத்திருந்த வேளை.!' - கோவை மத்திய சிறையில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி யார்?

கோவை சிறையில் இருந்து ஒரு விசாரணைக் கைதி தப்பி ஓடியுள்ளார்.கோவை அன்னூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு ஒன்றில் நேற்று (அக்டோபர் 30) கைது செய்யப்பட்டவர் ராகவன். இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர்... மேலும் பார்க்க

சிதம்பரம்: `நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கணக்கு காட்டவில்லை!’ - நிர்வாகக் குழு அமைத்த உயர் நீதிமன்றம்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜர் கோயிலில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர... மேலும் பார்க்க

"தற்கொலை செய்யும் விவசாயிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க கூடாது" - சிவசேனா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் அடிக்கடி சர்ச்சையாக எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ... மேலும் பார்க்க

ஏக்நாத் ஷிண்டேயுடன் பிணக்கு: தாக்கரே சகோதரர்களுடன் நெருக்கம் காட்டும் தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்டு சிவசேனா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டாக உடைந்தது. இதற்கு தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்தான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டது. கட்சி இரண்டாக உடைந... மேலும் பார்க்க