செய்திகள் :

Gold: தீபாவளி தமாக்கா! பவுனுக்கு ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை; சறுக்கலுக்கு காரணம் என்ன?

post image

தீபாவளிக்கு இன்னும் சரியாக ஒரு வாரம்தான் உள்ளது.

இந்த நேரத்தில் நம் மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.

இன்று சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.310-உம், பவுனுக்கு ரூ.2,480-உம் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,730-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,01,840-க்கும் விற்பனை ஆகி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம், ஒரு பவுனுக்கு ரூ.1.24 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை இப்போது ரூ.1.01 லட்சத்திற்குச் சறுக்கியுள்ளது.

தங்கம்
தங்கம்

சர்வதேச சந்தையில்...

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததே இந்த இறங்குமுகத்துக்குக் காரணம்.

தற்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 டாலருக்குக் கீழ் சறுக்கி 3,884 டாலர் என வர்த்தகமாகி வருகிறது. வெள்ளி ஒரு அவுன்ஸுக்கு 49 டாலர் என வர்த்தகமாகி வருகிறது.

ஏன் இந்தச் சறுக்கல்?

> அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் மீதான தாக்குதல் வருகிற நவம்பர் 3-ம் தேதிக்குப் பின் தொடரும் என்று முன்பு அறிவித்திருந்தார். இப்போது அந்தத் தேதி நெருங்கிவிட்டது.

> ஈரான், அமெரிக்கா இடையே எந்தவொரு சமாதான முயற்சியும் தெரியவில்லை. ஹார்முஸ் நீர்ச்சந்தி இன்னும் மூடிய நிலையில்தான் உள்ளது. நேற்று ஹார்முஸில் பயணித்த கப்பல் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான்.

இந்த நெருக்கடிகளால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

> பணவீக்க எச்சரிக்கைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.

> அமெரிக்காவின் மத்திய வங்கி ஃபெடரல் ரிசர்வ் உள்ளிட்ட உலகின் பல மத்திய வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தை ஏற்றி வருகின்றன.

Gold Rate: தீபாவளி நெருங்குகிறது! தங்கம் விலை அடுத்தடுத்து ஏறுமா, இறங்குமா?

கிட்டத்தட்ட 10 நாள்களில் தீபாவளி பண்டிகை.இந்த நேரத்தில் தங்கம் விலை எப்படி இருக்கிறது... தீபாவளி நெருங்குகையில் தங்கம் விலை எப்படி இருக்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.விலை... கடந்த வாரம் தங்கம் விலை ம... மேலும் பார்க்க

Gold: பண்டிகை சீசன் நெருங்குது! தங்க முதலீட்டிற்கு செபி போடும் பிரேக்; எந்த SIPகளுக்குத் தடை?

தங்க இ.டி.எஃப்களில் முதலீடு செய்யும் ‘கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸ்’ (FoFs) திட்டங்களில் புதிய முதலீடுகளுக்குப் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸ் ... மேலும் பார்க்க

Gold: சென்ற ஆண்டு மாதிரி ஃபீல் பண்ணாமல், இந்த ஆண்டு புத்திசாலித்தனமா தொடங்குங்க!

இப்போது நவராத்திரி சீசனில் இருக்கிறோம். இனி தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என ஜனவரி வரை அடுத்தடுத்துப் பண்டிகைகள்தான். இடையில் பல முகூர்த்த நாள்கள் இருப்பதும் மறப்பதற்கில்லை.இந்திய மக்களுக்... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி விலை குறையுதே; ETF பக்கம் ரூட்டை திருப்பலாமா? எப்படி முதலீடு செய்வது நல்லது?

சென்னையில் தற்போது ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1.10 லட்சத்திற்குக் கீழ் விற்பனையாகி வருகிறது. தற்போது வெள்ளியின் விலை ரூ.245.சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 4,200 டாலருக்குக் கீழ் வர்த்தகமாகி வருகி... மேலும் பார்க்க