'மருத்துவமனையில் 50 நாட்களை கடந்த வி.எஸ்.பாபு!' - அப்டேட் கொடுக்காத அரசு!
`சிறை சோதனைக்காகக் காத்திருந்த வேளை.!' - கோவை மத்திய சிறையில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி யார்?
கோவை சிறையில் இருந்து ஒரு விசாரணைக் கைதி தப்பி ஓடியுள்ளார்.
கோவை அன்னூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு ஒன்றில் நேற்று (அக்டோபர் 30) கைது செய்யப்பட்டவர் ராகவன். இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மீது பல திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக் கோவை மத்திய சிறையில் அடைக்க இவரை நேற்று அழைத்துச் சென்றிருக்கின்றனர் போலீசார்.
அங்கே சிறையில் சோதனைக்காகக் காத்திருக்க வைத்திருந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார் ராகவன்.

நேற்று இரவு முதல் ராகவனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் தான், தேனி தேக்கம்பட்டி துணைச் சிறையில் இருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பி ஓடினர்.
அந்த 17 பேரையும் இப்போது போலீசார் பிடித்துவிட்டனர்.
சிறையில் இருந்து 17 பேர் எப்படித் தப்பிச் சென்றனர் என்கிற அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், இன்று கோவை சிறையில் இருந்து ஒரு கைதி தப்பி ஓடியுள்ளார்.














