செய்திகள் :

சிதம்பரம்: `நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கணக்கு காட்டவில்லை!’ - நிர்வாகக் குழு அமைத்த உயர் நீதிமன்றம்

post image

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜர் கோயிலில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

அதேபோல தமிழக அரசின் அரசாணைக்கு ஆதரவு தெரிவித்தும், அந்த அரசாணையை தீட்சிதர்கள் தரப்பு செயல்படுத்தாதது குறித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகர் அமர்வில் நடைபெற்று வந்த அந்த விசாரணையில், தீர்ப்பளிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பில், `கோயிலின் நிர்வாகத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு தீட்சிதர்களிடம் ஒப்படைத்து உத்தரவிடப்பட்டது. ஆனால் அதன்பிறகு தீட்சிதர்கள் கோயிலை முறையாக நிர்வகிக்கவில்லை.

தீட்சிதர்கள்

எனவே கோயில் நிர்வாகத்தை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன் மற்றும் ஆர்.சுரேஷ்குமாரை நியமிக்கிறோம். வி.பாரதிதாசன் தலைவராகவும், துணைத் தலைவராக ஆர்.சுரேஷ்குமாரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேந்திரன் உறுப்பினராகவும் நியமிக்கிறோம்.

அதேபோல பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறைச் செயலாளரை அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் நியமித்து உத்தரவிடுகிறோம். கோயிலுக்குள் பொது தீட்சிதர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான கட்டுமானப் பணிகளால், புராதனக் கட்டிடங்களுக்கு மிகப்பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

அதனால் கோயிலின் புராதனக் கட்டடங்களுக்கு இடையூறாகவும், அனுமதியின்றியும் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக, நீதிபதிகள் தலைமையிலான குழு தமிழ்நாடு புராதனச் சின்ன ஆணையத்துடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோயில் சொத்துக்களை மீட்க இந்தக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சொத்துக்களை கணக்கெடுத்து, மாயமான மதிப்புமிக்க கோயிலுக்குச் சொந்தமான பொருட்களை மீட்கவும், கோயில் சொத்துகளின் வாடகை மற்றும் குத்தகைப் பாக்கிகளை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவற்றுக்கு முறையான கணக்குகளைப் பராமரிப்பதுடன், கோயிலின் வருவாயைப் பெருக்குவதற்கு நிபுணர்களின் ஆலோசனைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக கோயிலுக்கு வந்த வருமானம் குறித்த முழு கணக்கை, பொது தீட்சிதர்கள் சமர்ப்பிக்கவில்லை.

கோயிலை தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்காதது வேதனையளிக்கிறது. புராதனக் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் கோயில் திருப்பணிகளை மேற்கொண்டு, மத சடங்குகள், மரபுகளின்படி குடமுழுக்கு நடத்த வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம்

விரைவில் கோயிலின் பெருமையை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புதிய நிர்வாகக் குழு மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நிர்வாகக் குழுவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் வழங்க வேண்டும்.

அதேபோல கோயிலின் கனகசபை மீது நின்று அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்வதையும், அங்கு தேவாரம் மற்றும் திருவாசகம் பாடுவதையும், அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்குவதையும் நிர்வாகக் குழு உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல அன்றாட பூஜைகள், விழாக்கள் நடத்துவது தீட்சிதர்களின் பிரத்யேக உரிமை என்பதால், நிர்வாகக் குழு அதில் தலையிடாது. அதேசமயம் கோயிலின் அன்றாட வரவு செலவு கணக்குகளை, ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் தீட்சிதர்கள் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டனர்.

'மருத்துவமனையில் 50 நாட்களை கடந்த வி.எஸ்.பாபு!' - அப்டேட் கொடுக்காத அரசு!

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 நாட்களை கடந்துவிட்டது. ஆனால், மருத்துவமனை தரப்பிலோ அரசு தரப்பிலோ அவரின் உடல்நிலை குறித்து முறையான அறிக்க... மேலும் பார்க்க

``சதி... முறைகேடு... தொடர் நிதியிழப்பு” - சீர்குலைக்கப்படுகிறதா வட ஆற்காடு வன்னியர் சங்கம்?

வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு 1917-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது வட ஆற்காடு மாவட்ட வன்னிய குல சத்திரிய சங்கம். அரசியல் சார்பில்லாமல், வன்னியர் சமூக மக்கள் மற்றும் மாணவர்களின் நலன்களைக் காப்பதற்... மேலும் பார்க்க

`சிறை சோதனைக்காகக் காத்திருந்த வேளை.!' - கோவை மத்திய சிறையில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி யார்?

கோவை சிறையில் இருந்து ஒரு விசாரணைக் கைதி தப்பி ஓடியுள்ளார்.கோவை அன்னூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு ஒன்றில் நேற்று (அக்டோபர் 30) கைது செய்யப்பட்டவர் ராகவன். இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர்... மேலும் பார்க்க

"தற்கொலை செய்யும் விவசாயிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க கூடாது" - சிவசேனா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் அடிக்கடி சர்ச்சையாக எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ... மேலும் பார்க்க

ஏக்நாத் ஷிண்டேயுடன் பிணக்கு: தாக்கரே சகோதரர்களுடன் நெருக்கம் காட்டும் தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்டு சிவசேனா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டாக உடைந்தது. இதற்கு தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்தான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டது. கட்சி இரண்டாக உடைந... மேலும் பார்க்க