செய்திகள் :

போதைக்கு அடிமையாகி சிறையில் இருந்த மகன்; ஜாமீனில் கொண்டு வந்த தாயைக் கொன்ற கொடூரம்!

post image

போதைக்கு அடிமையான 20 வயது மகன், பாசம் காட்டிய தாயை கொடூரமாக கொலை செய்த சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே இண்டூரை சேர்ந்த கூலித் தொழிலாளியான சித்தன்- சின்னப்பாப்பா தம்பதிக்கு சித்துராஜ் (25), தேவராஜ் (19) என இரு மகன்கள். சித்துராஜ் பெங்களூரூவில் கட்டட வேலை செய்து வரும் நிலையில் இளைய மகன் தேவராஜ் வேலைக்கு செல்லாமல் போதை பழக்கத்துக்கு அடிமையாகி ஊரிலுள்ளவர்களிடம் வம்பு வளர்ப்பது என்று அட்ராசிட்டி செய்து வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் இண்டூர் பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு ரீல்ஸ் எடுத்த தேவராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சில நாட்களுக்கு முன்புதான் தாய் சின்னப்பாப்பாவும், அண்ணன் சித்துராஜும், தேவராஜை ஜாமீன் எடுத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

கடந்த 29 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த சின்னப்பாப்பாவிடம் தேவராஜ் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் வெறி பிடித்ததுபோல் ஆன தேவராஜ், வீட்டில் இருந்த இரும்பு ராடால் சின்னப்பாப்பா தலையில் பலமாக தாக்க அலறியபடி ரத்த வெள்ளத்தோடு விழுந்து இறந்தார்.

தேவராஜ்

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வர, கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால் தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை. இது குறித்து இண்டூர் போலீசுக்கு உடனே தகவல் தெரிவிக்க, போலீசார் வந்து கதவை திறந்து உள்ளே சென்றபோது கையில் ராடுடன் நின்றிருந்த தேவராஜை கைது செய்தனர்.

பின்னர் சின்னப்பாப்பாவின் உடல் உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்ற வழக்கினால் சிறைக்கு சென்ற மகனை, பெற்ற பாசத்தினால் செலவு செய்து ஜாமீனில் வீட்டுக்கு அழைத்து வந்த தாயை, மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கஞ்சா போதையில் இக்கொலையை தேவராஜ் செய்ததாக ஊடகங்களில் செய்தி பரவிய நிலையில், அதை மறுத்து போலீசார் விடுத்துள்ள அறிக்கையில், 'குடிப்பழக்கத்திற்கு அடிமையான தேவராஜ், தன்னை எதிர்த்து யாரும் பேசக்கூடாது என்ற ஆத்திரத்தில் தன் தாயை கொலை செய்துள்ளார். கஞ்சா போதையில் கொலை செய்யவில்லை' என்று தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ...

சின்னப்பாப்பாவின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்த வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து கதவு துவாரத்தின் வழியாக பார்த்தபோது, சின்னப்பாப்பா சடலமாக கிடக்க, அருகில் சட்டை அணியாமல் கையில் ரத்தக்கறையுடன் இரும்பு ராடை வைத்தபடி தேவராஜ் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போது அந்த துவாரத்தின் வழியாக தேவராஜ் ராடுடன் நிற்பதை மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது மக்களை பீதி அடைய வைத்துள்ளது.

கும்பகோணம்: 3 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை; உடலில் கடித்த பைனான்சியர்... பதறவைத்த தாயின் செயல்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ்(32) பைனான்ஸ் நிறுவனம் மூலம், சுய உதவி குழு நடத்தி வருகிறார். இக்குழுவில், அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் வச... மேலும் பார்க்க

சென்னை: குழந்தையை கொலை செய்த அம்மா கைது; காதலன் சிக்கிய பின்னணி!

சென்னையை அடுத்த எண்ணூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த 24-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் அந்தப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்றார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு திட... மேலும் பார்க்க

அரியலூர்: நள்ளிரவில் மது அருந்திய போதை ஆசாமிகள் - எச்சரித்த போலீஸாரை கடுமையாக தாக்கியதால் அதிர்ச்சி!

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் காவல் நிலையத்தில், ராஜாகண்ணு போலீஸாகவும், வெங்கடேசன் (47) ஊர்க்காவல் படை வீரராகவும் பணி புரிகின்றனர். இருவரும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக... மேலும் பார்க்க

திருவள்ளூர்: இளைஞர் கொலை; கடற்கரையில் சடலம் புதைப்பு - துப்பு துலங்கியது எப்படி?

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி எழில்செல்வி. இவர் சென்னையில் உள்ள பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்தத் தம்பதியின் மகன... மேலும் பார்க்க

சிவகங்கையில் மீண்டும் கொலை: மானாமதுரையில் பட்டப்பகலில் காதுகளை அறுத்து 8 பவுன் நகை கொள்ளை!

சுள்ளான் மதன் விவகாரம் மற்றும் ரவுடி கும்பலின் அடுத்தடுத்த தொடர் கொலைகளால் சிவகங்கை மாவட்டமே நிலைகுலைந்து போயுள்ளது. இதன் பரபரப்பும் அச்சமும் பொதுமக்கள் மனதிலிருந்து இன்னும் அகலாத நிலையில், சிவகங்கையி... மேலும் பார்க்க

விழுப்புரம்: மது போதையில் மனைவியுடன் தகராறு - ஆறு வயது மகனை கிணற்றில் வீசி கொலைசெய்த தந்தை கைது!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்திருக்கும் நல்லான் பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் - தேவி தம்பதி. இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். கடைசிக் குழ... மேலும் பார்க்க