பக்கவாத விழிப்புணர்வு முகாம் நடத்திய அப்போலோ மருத்துவமனை: ‘FAST’ மனிதச் சங்கிலி...
கும்பகோணம்: 3 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை; உடலில் கடித்த பைனான்சியர்... பதறவைத்த தாயின் செயல்!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ்(32) பைனான்ஸ் நிறுவனம் மூலம், சுய உதவி குழு நடத்தி வருகிறார். இக்குழுவில், அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் வசூல் முகவராக பணியாற்றி வந்தார். இப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், யோகராஜூம், அந்த பெண்ணும் திருமணம் மீறிய உறவில் இருந்ததாக சொல்கிறார்கள்.

கடந்த அக். 26ம் தேதி பெண்ணின் வீட்டுக்கு சென்ற யோகராஜ், அவரது மூன்று வயது பெண் குழந்தைக்கு, பல்வேறு வகையில் பாலியல் தொல்லை கொடுத்ததுடன் உடலில் பல இடங்களில் கடித்துள்ளார். இதில் அந்த குழந்தையின் உடம்பில் கடித்த காயங்கள் இருந்தன. குழந்தை சோர்வாக இருந்துள்ளது. இந்நிலையில் தெருவாசிகள் குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.
இதையடுத்து, குழந்தையின் உடலில் உள்ள காயங்கள் குறித்து, குழந்தையின் தாயிடம் கேட்டுள்ளனர். ஆனால், குழந்தையின் தாய் முறையாக பதில் அளிக்கவில்லை. இதில் சந்தேகமடைந்த தெருவாசிகள், ஒன்றிணைந்து, குழந்தையை நாச்சியார் கோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு துாக்கி சென்று ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், யோகராஜும், பெண்ணும் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளனர். சமீபத்தில் அந்த பெண் உடலுறவுக்கு மறுத்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, அவரது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த யோகராஜ் குழந்தையை கடித்துள்ளார். இதற்கு அந்த பெண்ணும் உடந்தையாக இருந்தது தான் அதிர்ச்சி ரகம். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் யோகராஜ் மற்றும் உடந்தையாக இருந்த அந்த குழந்தையின் தாய் உட்பட இருவரையும் கைது செய்தனர். இந்த விவகாரம் கும்பகோணம் பகுதியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.















