செய்திகள் :

திருவள்ளூர்: இளைஞர் கொலை; கடற்கரையில் சடலம் புதைப்பு - துப்பு துலங்கியது எப்படி?

post image

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி எழில்செல்வி. இவர் சென்னையில் உள்ள பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்தத் தம்பதியின் மகன் பிரசாந்த் (19). இவரைக் காணவில்லை என பண்ருட்டி புதுப்பேட்டை காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் பிரசாந்த்தை தேடிவந்தனர். அவரின் செல்போன் நம்பரும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் பிரசாந்த் என்ன ஆனார் என்ற தகவல் கிடைக்கவில்லை. இந்தநிலையில்தான் பிரசாந்த் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி கடற்கரை பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக புதுப்பேட்டை போலீஸார், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருப்பாலைவனம் போலீஸார், பொன்னேரி கடற்கரை பகுதிக்குச் சென்று விசாரித்தனர். இதற்கிடையில் புதுப்பேட்டை போலீஸார், இளைஞர் பிரசாந்தை கொலை செய்த குற்றச்சாட்டில் வேதராஜ், தினேஷ் ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்களை அழைத்துக் கொண்டு பொன்னேரி கடற்கரை பகுதிக்குச் சென்று புதைக்கப்பட்ட பிரசாந்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடம் பொன்னேரி கடற்கரை என்பதால் இந்த கொலை வழக்கை திருப்பாலைவனம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை
கொலை

இதுகுறித்து புதுப்பேட்டை, திருப்பாலைவனம் போலீஸாரிடம் பேசினோம்

``கொலை செய்யப்பட்ட பிரசாந்த், டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். அப்போதுதான் வேதராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்திருக்கிறது. வேதராஜின் மனைவிக்கு சென்னை ரெட்டேரி பகுதியாகும். இந்தநிலையில்தான் வேதராஜின் மனைவிக்கும் பிரசாந்த்துக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதை வேதராஜ் கண்டித்திருக்கிறார். இந்தநிலையில்தான் சென்னைக்கு வந்த பிரசாந்த், வேதராஜின் மனைவியுடன் பொன்னேரி கடற்கரை பகுதியில் சந்தித்து பேசியிருக்கிறார். இந்தத் தகவல் தெரிந்ததும் வேதராஜ், தன்னுடைய நண்பர் தினேஷை அழைத்துக் கொண்டு பொன்னேரி கடற்கரைக்கு வந்திருக்கிறார். பிரசாந்த்தை பொன்னேரி கடற்கரையில் பார்த்ததும் அவருடன் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மதுபாட்டிலை உடைத்து பிரசாந்த்தை சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். ஆத்திரம் தீராதவர்கள், பிரசாந்த்தின் கழுத்தையும் மதுபாட்டிலால் அறுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து பொன்னேரி கடற்கரை பகுதியிலேயே பிரசாந்த்தின் சடலத்தை புதைத்திருக்கிறார்கள். வேதராஜ், தினேஷ் அளித்த தகவலின்படி பிரசாந்த்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். கொலை வழக்கில் வேதராஜ், தினேஷை கைது செய்திருக்கிறோம். இந்தச் சம்பவம் தொடர்பாக வேதராஜின் மனைவியிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றனர்.

சிவகங்கையில் மீண்டும் கொலை: மானாமதுரையில் பட்டப்பகலில் காதுகளை அறுத்து 8 பவுன் நகை கொள்ளை!

சுள்ளான் மதன் விவகாரம் மற்றும் ரவுடி கும்பலின் அடுத்தடுத்த தொடர் கொலைகளால் சிவகங்கை மாவட்டமே நிலைகுலைந்து போயுள்ளது. இதன் பரபரப்பும் அச்சமும் பொதுமக்கள் மனதிலிருந்து இன்னும் அகலாத நிலையில், சிவகங்கையி... மேலும் பார்க்க

விழுப்புரம்: மது போதையில் மனைவியுடன் தகராறு - ஆறு வயது மகனை கிணற்றில் வீசி கொலைசெய்த தந்தை கைது!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்திருக்கும் நல்லான் பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் - தேவி தம்பதி. இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். கடைசிக் குழ... மேலும் பார்க்க

விழுப்புரம்: `கழுத்தை நெரித்து போட்டுட்டேன்' - தந்தையால் பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த சோகம்

விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்திருக்கும் வி.பரங்கனி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான சிவசாத்திரிக்கு, இரண்டு மகள்கள். இளைய மகள் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் இருக்கும் தன்னுடைய பாட்டி வீட்டில... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு லிஃப்ட் கொடுத்து பாலியல் தொல்லை அளித்த வழக்கு; த.வெ.க நிர்வாகி சிறையிலடைப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரிமாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்எம்.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடன் பக்கத்து ஊரான மூலச்சல்பகுதியைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரசு வேலை என்று போலி நியமன ஆணை; 4 பேரிடம் ரூ.16 லட்சம் மோசடி - மருத்துவர் உட்பட இருவர் மீது வழக்கு!

நாமக்கல் மாவட்டம், முத்துகாட்டுப்பட்டியில் 28 வயது பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், அவர் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனக... மேலும் பார்க்க

வெள்ளை உடும்பு, 16 மலைப்பாம்பு; பாங்காக் டு திருச்சி; ஏர்போர்ட்டில் சிக்கிய 45 அறிய வகை உயிரினங்கள்!

வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரிய வகை வனவிலங்குகள் மற்றும் ஊர்வன உயிரினங்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்க... மேலும் பார்க்க