செய்திகள் :

'நான் வெள்ளையாக இல்லை, அதனால் எனக்கு வாய்ப்புகள்.!'- தென்னிந்திய சினிமா குறித்து ராதிகா ஆப்தே

post image

தர்மராஜ் ஷெட்டி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே, தன்வி ஆஸ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ள வெப் சீரிஸ் ’அக்கா’.

பெண்கள் ஆளும் கற்பனை கேங்ஸ்டர் உலகை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வெப் சீரிஸ் இன்று (அக்.30) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் புரொமோஷனுக்காக ஆங்கில ஊடகத்தின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ராதிகா ஆப்தேவிடம், 2019-ம் ஆண்டுக்குப் பிறகு தென்னிந்திய திரைப்படங்களில் ஏன் நடிக்கவில்லை? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அக்கா
அக்கா

அதற்கு பதிலளித்த அவர், " எனது பார்வையில், வடஇந்திய நடிகைகள் வெள்ளையாக இருப்பதால்தான் தென்னிந்திய திரைப்படங்களில் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

நான் அதிகம் வெள்ளையாக இல்லை. தென்னிந்திய படங்களில் நடிக்க தென்னிந்திய நடிகைகளையே தேர்வு செய்யலாமே? எதற்காக வடஇந்திய நடிகைகளைத் தேடிச் செல்கிறார்கள்?.

தென்னிந்திய நடிகைகள் அழகானவர்கள், திறமையானவர்கள். அந்தந்த மொழிகளையும் நன்றாக அறிந்தவர்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

வேறு மொழி நடிகைகளை நடிக்க வைத்து, அவர்களுக்குப் பதிலாக மற்றொருவரை டப்பிங் பேச வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதுபோன்ற நடைமுறைகளை நான் ஊக்குவிக்க விரும்பவில்லை.

 ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே

தென்னிந்திய மொழிகள் தெரியாததால் அந்த மொழிகளில் நடிப்பது எனக்கு சவாலாக இருக்கிறது. வசனங்களைப் பேசுவது மட்டுமின்றி காட்சிகளுக்கு ஏற்ப இயல்பாக நடிப்பதற்கும் மொழி அறிவு அவசியம்" என்று பதில் அளித்திருக்கிறார்.

'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'வெற்றி செல்வன்', ரஜினிகாந்தின் 'கபாலி' உள்ளிட்ட படங்களில் நடித்த ராதிகா ஆப்தே கடைசியாக 2019-ம் ஆண்டு வெளியான 'சித்திரம் பேசுதடி 2' என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சாய் பல்லவி எதிர்ப்பு முதல் ரஹ்மான் இசை வரை! - 'ராமாயணா' திரைப்படத்தைத் தொடரும் சர்ச்சைகள்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகயிருக்கும் 'ராமாயணா' திரைப்படம், ஆரம்பக்கட்ட அறிவிப்பிலிருந்தே இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்ப... மேலும் பார்க்க

Akka: "அவர்களுக்கு ஏன் இந்த இன்செக்யூரிட்டி வருகிறது என்று தெரியவில்லை" - கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'அக்கா' வெப் சீரிஸ் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.இந்தப் படத்திற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் இயங்கி வருகிறார்கள்.... மேலும் பார்க்க

"யாருடனும் எனக்கு பகை இல்லை" - துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத டைகர் ஷெராப்

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது கடந்த வாரம் மும்பையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினார். இத்தாக்குதல் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. துப்ப... மேலும் பார்க்க

' இதனால்தான் நடிகர் டைகர் ஷெராப்பை சுட்டோம் ' - வெளியான தகவல்

மும்பையில் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் டைகர் ஷெராப் கார் ஓட்டுனர் காயம் அடைந்தார். இத்துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 3 பேர் மற... மேலும் பார்க்க

Aamir Khan: "அதனால்தான் என் உறவுகளை நான் இழந்துவிட்டேன்" - கண் கலங்கிய ஆமீர் கான்

நடிகர் ஆமிர் கான், சமீபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு 'ஸ்கிரீன் ஐகான்' விருதைப் பெற்றார். Aamir Khanஇந்த நிகழ்வில் மேடையில், தான் இழந்த உறவுகள் குறித்துப் பேசும்போத... மேலும் பார்க்க

Ramayana: ``2014-ல் ஒரு ரசிகரின் கனவு இப்போது நனவாகியிருக்கிறது.!" - மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்வு!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நட... மேலும் பார்க்க