செய்திகள் :

நடிகர் தனுஷ் அரசியல் வருகை? "நாமலே ஏன் படம் வரைஞ்சி கண்ணு மீசை எல்லாம் வைக்கணும்" - கருணாஸ்

post image

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா பசும்பொன்னில் யாக வேள்வியுடன் தொடங்கி நடந்து வருகிறது.

நிறைவு நாளான இன்று (30-ந்தேதி) பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.

இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் முதல்வர் விஜய் பங்கேற்பார் எனத் தகவல் வெளியானது. ஆனால் முதல்வர் பங்கேற்கவில்லை என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த நிலையில், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், நடிகருமான கருணாஸ் பசும்பொன்னில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, ``பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யாவின் குருபூஜை விழாவில், முதன்முறையாக நேரடியாக முதல்வர் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்பட்டது. கடைசி நேரத்தில் அந்தப் பயணம் மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலைக்கு நேரில் சென்று அரசு சார்பில் மரியாதை செலுத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கையை தேவர் அய்யாவின் தொண்டர்களும், பக்தர்களும் மனதார வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வழிமுறையையோ, முக்குலத்தோர் மக்களையோ புறக்கணித்துவிட்டு யாரும் அரசியல் செய்ய முடியாது என்பது வெளிப்படையான உண்மை.

மாநிலம் முழுவதும் பரவலாக வாழும் இந்தச் சமூக மக்களை ஒதுக்கிவிட்டு எவராலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை அனைத்து அரசியல் வல்லுநர்களும் அறிவர். சட்டமன்றத்திலும் இதைப் பலமுறை பேசியிருக்கிறேன். எனவே, வரும் காலங்களில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் நேரடியாக பசும்பொன்னுக்கு வருகைதந்து தேவர் அய்யாவின் அருளைப் பெறுவார் என நம்புகிறேன்.

தனுஷ்
தனுஷ்

கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே, எதிர்க்கட்சிகள் மீது வழக்குத் தொடர்வது, அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவது இந்தியா முழுவதும் தொடர்கதையாக உள்ளது. தற்போது அன்பில் மகேஸ் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவரது முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர் தவறு செய்யவில்லை என்பதையும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்பதையும் சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார். நடிகர் தனுஷ் தன் அரசியல் வருகை குறித்து இன்னும் தனது தெளிவான நிலையை வெளிப்படுத்தாதபோது, நாமாகவே ஏன் யூகங்களின் அடிப்படையில் கற்பனை செய்து, படம் வரைந்து, கண், மீசை எல்லாம் வைக்கவேண்டும். அவர் தனது அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்கும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``என்னை முடக்கப்பாக்குறாங்க; ஜெயலலிதா அம்மாவைப் போல மீண்டு வருவேன்" - அமைச்சர் கீர்த்தனா

சிவகாசியில் நடைபெற்ற ‘வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் கீர்த்தனா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``பெண்கள் தங... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் புதுக்கோட்டை பயணம்: 'தனி விமானம், ரோடு ஷோ, திறப்பு விழா...' - விழா ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக முதலமைச்சர் விஜய், வரும் நவம்பர் 2-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதன்முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக புதுக்கோட்டைக்கு வருகை தரு... மேலும் பார்க்க

`ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்த பிரேம் குமாருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு?' - உதயநிதி கேள்வி!

ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்த பிரேம் குமாருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில... மேலும் பார்க்க

`முதல்வர் அப்படி உத்தரவிட்டிருக்க மாட்டார்..!' - பேராசிரியர் கலையரசன் கைது குறித்து திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பேராசிரியர் கலையரசன் விடியற்காலை 5 மணிக்குக் கைதுசெய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அது ஏற்புடையதல்ல. தமிழ்நாடு அர... மேலும் பார்க்க

`மின்வெட்டால் மீனாட்சி அம்மனிடம் நிம்மதியாக பிரார்த்தனைகூட செய்ய முடியாது'- எடப்பாடி பழனிசாமி வேதனை

முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு மதுரைக்கு வந்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாலை 5:30 மணிக்கு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்றார். அவர் சென்ற சில நிமிட... மேலும் பார்க்க

``பசும்பொன்னில் சசிகலாவைச் சந்திக்க திட்டமா?" - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``முன்னாள் அமைச்சர்கள் கைது மற்றும் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புச் சோதனை, என்ன வழக... மேலும் பார்க்க