செய்திகள் :

ஃபின்ஃபுளூயன்சர்கள்: விழிப்புணர்வோடு பொறுப்புணர்வும் தேவை!

post image

ஹலோ வாசகர்களே..!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்களிடம் நிதி விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஃபின்ஃபுளூயன்சர்கள் (Finfluencers) முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஆனால், அனுபவமின்மையும் பக்குவமின்மையும் சில நேரங்களில் அவர்களையும், அவர்களைப் பின்பற்றுபவர்களையும் தவறான பாதைக்குக் கொண்டு சென்று விடுகின்றன.

‘Finance with Harish’ சோஷியல் மீடியா பக்கங்கள் மூலம் பிரபலமான ஹரிஷ், சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டது, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘இதில் யார் மீது தவறு’ என்ற கேள்வி ஒரு பக்கம்... ஆனால், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பது பற்றி யோசிப்பது மிகவும் முக்கியம்.

இன்ஃபுளூயன்ஸர் எகானமி என்று ஒரு பிரிவே சமீபத்தில் உருவாகியிருக் கிறது. தினம் தினம் ஏராளம் பேர் இந்தப் பிரிவை நோக்கி வந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த இன்ஃபுளூயன்சர்களை முறைப்படுத்தும் நடவடிக்கை களை மத்திய அரசு இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. அரசின் ஒழுங்கு முறை அமைப்புகள் இன்ஃபுளூயன்சர்களுக்கான வழிகாட்டுதலை தெளிவாக உருவாக்க வேண்டும். இன்ஃபுளூயன்சர்களின் தவறுகளைக் கேள்விக்கு உட்படுத்தலாம், சுட்டிக்காட்டலாம். ஆனால், அதன்மூலம் அவர்களை நெறிப்படுத்துவதுதான் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட தாக்குதலாகவும், வெறுப்பு உமிழ்வாகவும் ஆகிவிடக் கூடாது.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தில், சேமிப்பு முதல் மியூச்சுவல் ஃபண்டுகள் வரை நிதி விழிப்புணர்வு இன்னும் ஏராளமான பேருக்குச் சென்று சேர வேண்டியிருக்கிறது. இவற்றை எளிமையாக எடுத்துச் சொல்வதில் ஃபின்ஃபுளூயன்சர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

அதேசமயம் மக்களுக்கும் இதில் பொறுப்பு உண்டு. ஃபின்ஃபுளூயன்சர்ளைப் பின்புலத்தை அலசாமல் அவர்கள் சொல்வதையெல்லாம் நம்பக்கூடாது. மேலும் ஒவ்வொரு தனி நபரின் வருமானம், குடும்பச் சூழல் உள்ளிட்டவற்றைப் பொறுத்து ஆலோசனைகள் வேறுபடும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மிக முக்கியமாக, ஒருவரிடம் பணம் கொடுத்து முதலீட்டு ஆலோசனை பெறுவதற்கு முன்பு, அவர் செபி (SEBI) பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள், முதலீட்டு ஆலோசகர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவினருக்கும் விதிமுறைகள் வேறுபடுகின்றன. அவற்றுக்கு உட்பட்டே அவர்கள் செயல்பட வேண்டும். நிதி சார்ந்த கருத்துகளைப் பகிர்வது என்பது வெறும் பார்வையாளர்களை அதிகரிப்பதற்கான செயலல்ல; அது பலருடைய பணம், எதிர்காலம், குடும்பப் பாதுகாப்பு ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்தப் பொறுப்பையும் எல்லையையும் ஃபின்ஃபுளூயன்சர்கள் உணர வேண்டும்.

சமூக வலைதளத்தில் விரிந்துகிடக்கும் இந்தப் பொருளாதாரப் பாதையை நெறிப்படுத்துவதில் அரசு, ஒழுங்குமுறை அமைப்புகள், ஃபின்ஃபுளூயன்சர்கள், மக்கள் என அனைவருக்குமே பங்கு உண்டு. விழிப்புணர்வுடன் செயல்படுவோம்.

- ஆசிரியர்

பணக் கஷ்டத்தை நோக்கித் தள்ளும் ஷாப்பிங் மைண்ட்செட்... ஜாக்கிரதை மக்களே!

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால்தான் துணிக்கடைகளிலும், மால்களிலும் கூட்ட நெரிசல் இருக்கும். ஆனால், இன்றைக்கு எப்போது பார்த்தாலும் கடைகளில் பரவலாகக் கூட்டம் இருக்கவே செய்கிறது. காரணம், ஷாப்பிங் செ... மேலும் பார்க்க

பி.எஃப் பணத்தை அடிக்கடி எடுப்பவரா நீங்கள்? 60 வயதில் உங்களுக்குக் காத்திருக்கும் ஆபத்து!

குமரேசனுக்கு இப்போது 60 வயது. மூன்று நாள்களாக உடம்பு படுத்தி எடுக்க, ஆஸ்பத்திக்குப் போக பணம் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார். வேலைக்குச் சென்ற காலத்தில் மாதச் சம்பளம் வந்துகொண்டிருந்தது. தாராளமாகப... மேலும் பார்க்க

இந்த மைண்ட்செட் இருக்கிறவங்க கிரெடிட் கார்டு வச்சுக்கிட்டா, கடனாளி ஆவது கன்ஃபார்ம்!

“நான் அஞ்சு கிரெடிட் கார்டு யூஸ் பண்றேன். சரியா டியூ கட்டாம விட்டதால வட்டிக்கு வட்டி சேர்ந்து ஆறு லட்சத்துக்கு மேல கடன் சேர்ந்துடுச்சு. எல்லா பேங்குல இருந்தும் போன் பண்ணிக்கிட்டே இருக்காங்க. ஒரே மன உள... மேலும் பார்க்க

ஆஃபர், அவசரம், பதற்றம்... ஆன்லைன் பர்ச்சேஸில் பணம் பத்திரம் மக்களே.!

பண்டிகைக் காலம் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. பெரிய இ-காமர்ஸ் தளங்கள் முதல் யூடியூப், இன்ஸ்டா வரை வியாபாரம் பட்டையைக் கிளப்பத் தொடங்கிவிட்டது. அதிரடி ஆஃபர் வலைகள் வீசப்படுகின்றன. எது நிஜமான ஆஃபர், எது ஏம... மேலும் பார்க்க