செய்திகள் :

`முதல்வர் அப்படி உத்தரவிட்டிருக்க மாட்டார்..!' - பேராசிரியர் கலையரசன் கைது குறித்து திருமாவளவன்

post image

விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பேராசிரியர் கலையரசன் விடியற்காலை 5 மணிக்குக் கைதுசெய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அது ஏற்புடையதல்ல. தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை குறித்து நடுநிலையோடு நின்று நெடிய கட்டுரையைத் தந்த ஒரு முக்கிய ஆளுமையை காவல்துறை இவ்வாறு நடத்தியிருப்பது ஜனநாயக சக்திகளைக் காயப்படுத்தும் செயல். விசிக சார்பாக இந்த நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவதூறாக எழுதியதாகக் கூறித்தான் கலையரசனை காவல்துறை கைதுசெய்தது.

கலையரசன்

ஆனால், கலையரசனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி யாரோ உருவாக்கிய போலி ஐ.டி மூலமே அந்தப் பதிவு வெளியிடப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த உண்மை வெளிவந்த பிறகு காவல்துறை அவரை விடுவித்துள்ளது. அதிகாலை 5 மணிக்குச் சென்று கைதுசெய்யுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டிருக்க வாய்ப்பில்லை. கைது நடவடிக்கையின்போது கூட்டம் கூடிவிடக் கூடாது என்பதற்காகக் காவல்துறையே தங்களது செயல்பாட்டு முறையின்படி இந்த நேரத்தைத் தேர்வு செய்திருக்கலாம். இருப்பினும் இத்தகைய அதிகாலைக் கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் முன்ஜாமீன் தள்ளுபடியான காரணத்தினால் மட்டுமே விசாரணைக்காக அவரைக் கைதுசெய்ததாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த விவகாரம் தற்போது காவல்துறையின் விசாரணையில் இருக்கும் சூழலில், விசாரணை முழுமையாக முடிவடைவதற்கு முன்பாக கருத்துத் தெரிவிப்பதற்கு எதுவுமில்லை விசாரணை முடியட்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`மின்வெட்டால் மீனாட்சி அம்மனிடம் நிம்மதியாக பிரார்த்தனைகூட செய்ய முடியாது'- எடப்பாடி பழனிசாமி வேதனை

முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு மதுரைக்கு வந்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாலை 5:30 மணிக்கு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்றார். அவர் சென்ற சில நிமிட... மேலும் பார்க்க

``பசும்பொன்னில் சசிகலாவைச் சந்திக்க திட்டமா?" - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``முன்னாள் அமைச்சர்கள் கைது மற்றும் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புச் சோதனை, என்ன வழக... மேலும் பார்க்க

`நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!' - கே.என்.நேரு

முன்னாள் தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பின்னர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித... மேலும் பார்க்க

``அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்" - சீமான் அறிவிப்பு!

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருக்கிறார்.தான் அனைவருக்குமான பொது வேட்பாளர் என்றும் கூறியிருக்கிறார். மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பு டு குடிமைப் பணி; தென்காசியின் முதல் பெண் ஆட்சியர் - யாரிந்த மோனிகா ராணா ஐ.ஏ.எஸ்?

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக டாக்டர் மோனிகா ராணாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்... மேலும் பார்க்க

கே.என்.நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; பரபரக்கும் திருச்சி மாவட்ட திமுக!

தி.மு.க முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி தில்லை நகரில் உள்ள இல்லத்தில், இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 3 பொலிரோ வாக... மேலும் பார்க்க