செய்திகள் :

பெரம்பலூர்: வயதான பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு; 15 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள்!

post image

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள புது வேட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. வயதான இவர், ஆடு, மாடுகளை வளர்த்து அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். இந்நிலையில், புது வேட்டக்குடி கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பாப்பாத்தியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பாப்பாத்தி அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் சிலர், பாப்பாத்தியிடம் இருந்து நகையைப் பறித்தவர்களை இருசக்கர வாகனங்களில் விரட்டிச் சென்றனர். 15 கிலோமீட்டர் வரை அவர்களை துரத்திச் சென்றனர்.

பெரம்பலூர்

அப்படி, அரியலூர் அருகே ஒருவரைப் பொதுமக்கள் பிடித்த நிலையில், மற்றொருவர் ஏரியில் மறைந்திருந்தபோது போலீஸாரிடம் சிக்கினார். போலீஸாரின் விசாரணையில் சாரதி என்ற இளைஞரும், 16 வயது சிறுவனும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டியிடம் இருந்து நகையைப் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றவர்களை பொதுமக்கள் சினிமா பாணியில் வாகனங்களில் சேஸிங் செய்து துரத்திச் சென்று பிடித்துள்ள சம்பவம், கவனத்தை ஈர்த்திருக்கிறது.

திருச்சி: 'ரூம் வாடகையோடு, மாதம் ரூ. 30,000 சம்பளம்' - டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய உதவிய இன்ஜினீயர் கைது

சென்னை தொலைத்தொடர்பு துறையிலிருந்து திருச்சியில் குறிப்பிட்ட பகுதியிலிருந்து பிராட்பேண்ட் பயன்பாடு அதீத அளவில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். தினமும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான டேட்டா திருடப்படுவது ... மேலும் பார்க்க

"உன் மனைவியை என்னால் மறக்க முடியல" - காதலியின் கணவருக்கு மெசேஜ் அனுப்பியவருக்கு அரிவாள் வெட்டு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெங்கம்புதூர் அருகேயுள்ள தெற்கு புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் (27). இவர் கட்டடம் கட்டும் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7... மேலும் பார்க்க

காதல் விவகாரத்தில் வீடு புகுந்து சிறுமியின் தாய் கொலை; சிகிச்சையிலிருந்த தந்தையும் உயிரிழந்த சோகம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி மேரி விஜிலா. இவர்களுக்கு 15 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்களும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். முத்துக... மேலும் பார்க்க

ஜிம்மில் ஏற்பட்ட தொடர்பு: பயிற்சியாளர் மூலம் கணவனை குத்திக்கொல்ல முயன்ற மனைவி சிக்கியது எப்படி?

டெல்லியில் உள்ள வசுந்தரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் சஷாங். இவரது மனைவி பிரியா. இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். சஷாங் வீட்டில் தனியாக இருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் அவரை சரமார... மேலும் பார்க்க

Bishnoi: 'நிழல் அமைச்சரவை, சைவ உணவு, 24 மணிநேர கண்காணிப்பு...' - குஜராத் சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய்

மும்பையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இத்துப்பாக்கிச்சூட்டுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர்தான் காரணம் என்று தெரி... மேலும் பார்க்க

கொச்சி கார் விபத்து: நீதிபதியை கைதுசெய்ய நடவடிக்கை; மெத்தனமாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கேரள மாநிலம் கொச்சி​சித்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபாலகிருஷ்ணன் என்பவர் சேரானல்லூர் கன்டெய்னர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த நீதிபதியின் மகனின் பென்ஸ் கார் அவர் மீது மோதியது. இதில் ஜெ... மேலும் பார்க்க