செய்திகள் :

பேராசிரியர் கலையரசன் கைது விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்த கலையரசன்

post image

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் பிரபல பொருளாதார நிபுணரும், 'The Dravidian Model' நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான கலையரசன், நேற்று அதிகாலை 5 மணியளவில் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது.

தமிழகப் பொருளாதார நிலவரம் குறித்து தொடர்ந்து கருத்துகளை முன்வைத்து வரும் கலையரசன் கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி கனிமொழி, எம்.பி சு. வெங்கடேஷன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருத்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த வழக்கை நடத்திய உள்ளூர் காவல்துறையினர் தவறு இழைத்துவிட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் ஒப்புக்கொண்டார்.

கலையரசன்
கலையரசன்

காவல்துறை தலைமை இயக்குநரின் (DGP) தலையீட்டைக் கோரி அளித்த புகாரில் பேராசிரியர் கலையரசன், "என்னுடைய தரப்பு விளக்கத்தை அளிப்பதற்குக்கூட ஒரு நியாயமான வாய்ப்பு வழங்கப்படாமல், நான் நடத்தப்பட்ட விதம் எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய், பேராசிரியர் கலையரசனைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்" - சீமான் அறிவிப்பு!

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருக்கிறார்.தான் அனைவருக்குமான பொது வேட்பாளர் என்றும் கூறியிருக்கிறார். மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பு டு குடிமைப் பணி; தென்காசியின் முதல் பெண் ஆட்சியர் - யாரிந்த மோனிகா ராணா ஐ.ஏ.எஸ்?

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக டாக்டர் மோனிகா ராணாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்... மேலும் பார்க்க

கே.என்.நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; பரபரக்கும் திருச்சி மாவட்ட திமுக!

தி.மு.க முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி தில்லை நகரில் உள்ள இல்லத்தில், இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 3 பொலிரோ வாக... மேலும் பார்க்க

பிரேசில் தேர்தலில் லுலா வெற்றி! அமெரிக்காவிற்கு தப்பிச்சென்ற போல்சோனாரோ 'நானே அதிபர்' என அறிவிப்பு!

பிரேசிலில் நான்காவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளார் அந்த நாட்டின் அதிபர் லுலா டா சில்வா.தேர்தல் வெற்றிகடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25), பிரேசிலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆரம்பக் கட்ட வா... மேலும் பார்க்க

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்; அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் அட்மிஷன்- பெட்கள் அதிகரிக்கப்படுமா?

தமிழ்நாட்டில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தால் தாய்மார்கள் பலரும் தற்போது பிரசவத்துக்கு அரசு மருத்துவமனைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.இதனால் அரசு மருத்துவமனைகளின் பிரசவ... மேலும் பார்க்க

வேலூர் திமுக மாவட்டச் செயலாளர், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் ரெய்டு; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

தி.மு.க வேலூர் தெற்கு மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமாரின் காட்பாடி வீட்டில் இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன... மேலும் பார்க்க