செய்திகள் :

வேலூர் திமுக மாவட்டச் செயலாளர், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் ரெய்டு; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

post image

தி.மு.க வேலூர் தெற்கு மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமாரின் காட்பாடி வீட்டில் இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டி.எஸ்.பி தலைமையிலான 7-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.

அணைக்கட்டு தொகுதியில் தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் நந்தகுமார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் 3-வது முறையாக போட்டியிட்டவர் தோல்வியைத் தழுவினார். காட்பாடி காந்தி நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அவரின் வீட்டில் அதிரடி காட்டியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

சேகர் ரெட்டி வீடு

அதேபோல, பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் காட்பாடி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை சோதனையில் ஈடுபட்டது. அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆட்சிக்காலங்களில் செல்வாக்குமிக்கவராக வலம் வந்தவர் சேகர் ரெட்டி. சமீபத்திலும், அவரது காட்பாடி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும், பணமும் திருடப்பட்டது. இது சம்பந்தமாக, பணிப்பெண்களே கைதுசெய்யப்பட்டார்கள்.

இந்த நிலையில், சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை விரைவாக முடித்துக்கொண்டு வெளியேறிவிட்டார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர். இந்த திடீர் சோதனைக்கான காரணம் என்ன? என்பது பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

'முதலமைச்சர் வந்தா நைட்டு வரை காத்திருக்கணுமா?' - ஆவேசமான மேயர் பிரியா

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, 'முதல்வரின் கூட்டங்கள் குறித்து தனக்கு சொல்லப்படுவதே இல்லை' என ஆவேசமடைந்தார்... மேலும் பார்க்க

“பாசிசத்தில் பா.ஜ.க-வையே தவெக மிஞ்சுகிறது!” - முனைவர் கலையரசன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் பிரபல பொருளாதார நிபுணரும், 'The Dravidian Model' நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான கலையரசன், நேற்று அதிகாலை 5 மணியளவில் போலீசா... மேலும் பார்க்க

இஸ்ரேல் தேர்தல் இழுபறி: பெரும்பான்மை இல்லை! அரபுக் கட்சிகளின் ஆதரவை நிராகரிப்பது ஏன்? |Full Detail

இஸ்ரேலில் நேற்று முன்தினம் (அக்டோபர் 27) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஹமாஸ் தாக்குதல், ஈரான் போருக்குப் பின் நடக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இது.இஸ்ரேலின் தற்... மேலும் பார்க்க

'கோணல் மூஞ்சி முதல்வர்; தூங்கு மூஞ்சி அரசு!' - மாமன்றத்தில் கொந்தளித்த திமுக கவுன்சிலர்!

சென்னை ரிப்பன் பில்டிங்கில் இந்த மாதத்திற்கான மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் அதியமான் முதல்வர் விஜய்யை 'கோணல் மூஞ்சி' முதல்வர் என கடுமையாக விமர்சித்திருக... மேலும் பார்க்க

'அவதூறு, உண்மைக்குப் புறம்பானவை; என் ராஜினாமாவின் ஒரே நோக்கம்.!'- மீண்டும் எல்.முருகன் விளக்கம்

மத்திய இணையமைச்சராக இருந்த எல்.முருகன் சில வாரங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவரது ராஜினாமா குறித்து பல்வேறு கருத்துகள் வெளியான நிலையில் அறிக்கை மூலம் விளக்கம் அளித்திருக்கிறார். ... மேலும் பார்க்க

`திருப்பதியில் அணிந்திருந்த நெக்லஸ்... 3 கோடி ரூபாய் கமிஷன்?' - அமைச்சர் கீர்த்தனா சொல்லும் விளக்கம்

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்க ரூ.3 கோடி வரை கமிஷன் கேட்டு, அமைச்சர் கீர்த்தனாவின் பெயரைச் சொல்லி அவரின் ஆதரவாளர்கள் ஒப்பந்ததாரரை மிரட்டுவதாகத் தகவல... மேலும் பார்க்க