செய்திகள் :

"அந்த அவமானம் என் வாழ்நாள் முழுவதும் இருக்கும்!" - 'பெத்தி' பட சர்ச்சை குறித்து ஜான்வி கபூர்

post image

ராம் சரண் நடிப்பில் வெளியான 'பெத்தி' திரைப்படத்திற்காகத் தான் சந்தித்த விமர்சனங்கள் குறித்து நடிகை ஜான்வி கபூர் பேசியிருக்கிறார்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் வருண் தவானுடன் கலந்துகொண்ட ஜான்வி கபூர், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் படப்பிடிப்புத் தளத்தில் தான் உணர்ந்த அசௌகரியங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், "இந்த விஷயத்தைப் பற்றிப் பேசவே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. ஏனென்றால், அந்தப் படத்தில் பலர் கடினமாக உழைத்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த விவகாரத்தில் என் தரப்பில் உள்ள தவறை நான் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஏனெனில், இது போன்ற ஒரு தவறான சித்திரிப்பு நம் சமூகத்தில், குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் என் மனசாட்சியை மிகவும் உறுத்துகிறது.

அந்த அவமானத்தை என் வாழ்நாள் முழுவதும் நான் சுமப்பேன். 'நான் இன்னும் எச்சரிக்கையாக இருந்திருக்கலாமோ?' என்று கேட்டால், நூறு சதவிகிதம் ஆம் என்று சொல்வேன்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

பெண்களைப் புறப்பொருளாக்கும் செயலாக இருந்ததா? என்றால், நிச்சயமாக ஆம் என்றே சொல்வேன். தென்னிந்திய சினிமாவில் முழுமையான திரைக்கதை வடிவம் கொடுக்கப்படுவதில்லை. அத்தோடு கேமரா கோணங்கள் எங்கே வைக்கப்படும் என்ற விவரங்கள் முன்பே வழங்கப்படுவது மிகக் குறைவு.

இருப்பினும், எனக்குக் கிடைத்த தகவல்களை வைத்து அந்த விவகாரத்தைப் பிரச்னை இல்லாமல் எப்படிக் கையாள்வது என்றுதான் யோசித்தேன். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடக்காமல் பார்த்துக்கொள்வது மட்டுமே என்னால் செய்ய முடிந்தது" எனப் பேசியிருக்கிறார்.

``என் கணவர் பழி போடுறவறா இருக்கக் கூடாது; அவருக்கு சமைக்கத் தெரிஞ்சிருந்தா... " - நடிகை சாய் பல்லவி

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக... மேலும் பார்க்க

`சுந்தர் சி நான் தத்தெடுத்த குழந்தை...' - 'மூக்குத்தி அம்மன்- 2 பட நிகழ்வில் நெகிழ்ந்த குஷ்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'மூக்குத்தி அம்மன்- 2' படம் வெளியாக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி... மேலும் பார்க்க

'மூக்குத்தி அம்மன்-2 என் மனதிற்கு நெருக்கமானப் படம்.!'- நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'மூக்குத்தி அம்மன்- 2' படம் வெளியாக இருக்கிறது. சுந்தர். சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புல... மேலும் பார்க்க

Keerthy Suresh: "அப்போது என் பொருளாதார நிலை மோசமாகும் வரை மகிழ்ச்சியாக இருந்தேன்!" - கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'அக்கா' வெப் சீரிஸ் இம்மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.நாக் அஸ்வின் இயக்கத்தில் 2018-ல் வெளியான திரைப்படத்தில், மறைந்த நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தி... மேலும் பார்க்க

Sunainaa: "இந்தச் செயலில் ஈடுபட்டவர் மீது வழக்குத் தொடரவுள்ளேன்!" - சுனைனா

'நீர்ப்பறவை', 'காதலில் விழுந்தேன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை சுனைனா.சுனைனா ஏ.ஐ. பயன்படுத்தித் தன்னை ஆபாசமாகவும் தவறாகவும் சித்தரித்து பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்க... மேலும் பார்க்க

காலா : கருப்பும் வெள்ளையும்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 36

`சினி'ஸ்கோப் 36காலா : கருப்பும் வெள்ளையும்!”குமாரு, யாரு இவரு?”ஒரு அமைச்சரைக் கைநீட்டி, காலா நக்கலாகக் கேட்கும் காட்சி மிக ரசனையான காட்சி. சூப்பர்ஸ்டாரின் தனித்துவமான தருணங்கள் என்று ஒரு பட்டியலிட்டால... மேலும் பார்க்க