செய்திகள் :

'மூக்குத்தி அம்மன்-2 என் மனதிற்கு நெருக்கமானப் படம்.!'- நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'மூக்குத்தி அம்மன்- 2' படம் வெளியாக இருக்கிறது. சுந்தர். சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நவம்பர் 6 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

 'மூக்குத்தி அம்மன்- 2'
'மூக்குத்தி அம்மன்- 2'

அதில், " சில திரைப்படங்கள் நம் இதயத்திற்கு மிக நெருக்கமாகவே இருக்கும். என்னைப் பொறுத்தவரை, 'மூக்குத்தி அம்மன் - 2' அப்படிப்பட்ட ஒரு திரைப்படம். எனது இயக்குநர் சுந்தர்.சிக்கு, உங்களின் தொலைநோக்கு பார்வை, அன்பு, பேரார்வம் அனைத்தையும் இப்படத்துக்குள் கொண்டு வந்ததற்கு நன்றி.

உங்களுடன் பணியாற்றியது உற்சாகமாக இருந்தது. ஒவ்வொரு தருணத்தில் காட்டிய அக்கறைக்கும், இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியதற்காக மிக்க நன்றி. இந்தப் படத்துக்காக நான் உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

என் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் சார், இந்தத் திரைப்படத்தை நம்பியதற்கும் எங்களுக்கு ஆதரவளித்ததற்கும் நன்றி. ரெஜினா, உங்களுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்திலும் அன்பும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகள்.

நயன்தாரா
நயன்தாரா

குஷ்பு மேம் மற்றும் சினேகா மேம், உங்கள் இருவருடனும் இந்தத் திரைப்படத்தில் பங்கேற்றது நான் என்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு விஷயம். உங்கள் இருவருக்கும் என் பேரன்புகள்.

இப்படிப்பட்ட ஒரு அருமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நான் பெரும் பாக்கியம் செய்திருக்கிறேன்.

இப்போது, நாங்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் அனுபவிப்பதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Exclusive: மீண்டும் போலீஸாக சிலம்பரசன்; இயக்குநர் கீர்த்தீஸ்வரன்- சாய் இணையும் படத்தின் பரபர அப்டேட்

'அரசன்' படத்தை அடுத்து சிலம்பரசன் `டியூட்' கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிப்பார் என தகவல்கள் இருந்த நிலையில், இப்போது கோலிவுட் வட்டாரத்தில் புதிதாக ஒரு தகவல் பரபரத்துக் கொண்டிருக்கிறது. ஜேசன் சஞ்சய் ஹீ... மேலும் பார்க்க

'மனம் வலிக்கிறது; விமர்சனங்கள் செய்தால் பரவாயில்லை ஆனால்..!'- சுந்தர்.சி வருத்தம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'மூக்குத்தி அம்மன்- 2' படம் வெளியாக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி... மேலும் பார்க்க

அனிருத் - காவ்யா திருமணம்: `பிரதமர் மோடி முதல் தனுஷ் வரை...' - யாருக்கெல்லாம் அழைப்பு?!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் திருமணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அனிருத் மற்றும் காவ்யா தம்பதி நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ... மேலும் பார்க்க

"காலமானவர்களை அந்த நிலையில் பார்க்க விரும்பவில்லை" - இசைக் கலைஞர் சதானந்தத்திற்கு இளையராஜா இரங்கல்

இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆஸ்தான கிதார் இசைக் கலைஞரான சதானந்தம் (79) சென்னையில் இன்று (அக்.29) காலமானார்.ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆர். சுதர்சனம். அன்றைய காலக்கட்டத்தில் பல... மேலும் பார்க்க

Jafar Panahi: பிரபல இயக்குநர் ஜாஃபர் பனாகிக்கு 5 ஆண்டுகள் சிறை; பின்னணியும் தொடரும் ஒடுக்குமுறைகளும்

ஈரானிய சினிமாவின் முக்கியமான இயக்குநர் ஜாஃபர் பனாகிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஈரானில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை, அவர்கள் மீது சுமத்தப்படும் அரசியல் ரீதிய... மேலும் பார்க்க

``என் கணவர் பழி போடுறவறா இருக்கக் கூடாது; அவருக்கு சமைக்கத் தெரிஞ்சிருந்தா... " - நடிகை சாய் பல்லவி

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக... மேலும் பார்க்க