அரசு வேலை என்று போலி நியமன ஆணை; 4 பேரிடம் ரூ.16 லட்சம் மோசடி - மருத்துவர் உட்பட ...
`மின்வெட்டால் மீனாட்சி அம்மனிடம் நிம்மதியாக பிரார்த்தனைகூட செய்ய முடியாது'- எடப்பாடி பழனிசாமி வேதனை
முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு மதுரைக்கு வந்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாலை 5:30 மணிக்கு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களிலேயே கோயிலில் மின் வெட்டு ஏற்பட்டது. இதையடுத்து உடனே கோயில் நிர்வாகிகள் ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் கொடுத்தனர்.
தொடர்ந்து தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, ``மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதையெல்லாம் மீனாட்சி அம்மன் பார்த்தால் சரி. இந்த ஆட்சியில் நிம்மதியாய் வாழ முடியாது, நிச்சயமாய் பக்தர்கள் வாழ முடியாது. மக்கள் நிம்மதியாக இறைவனை பிரார்த்தனைக்கூட செய்ய முடியாது" எனக் கூறிவிட்டு கிளம்பிச் சென்றார்.

அவர் சென்றதைத் தொடர்ந்து மின்சாரத்திற்காக கொடுக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரை ஆஃப் செய்துவிட்டு, மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்யும்போது மின் தடை ஏற்பட்டது, சலசலப்பை ஏற்படுத்தியது.














