செய்திகள் :

'கோணல் மூஞ்சி முதல்வர்; தூங்கு மூஞ்சி அரசு!' - மாமன்றத்தில் கொந்தளித்த திமுக கவுன்சிலர்!

post image

சென்னை ரிப்பன் பில்டிங்கில் இந்த மாதத்திற்கான மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் அதியமான் முதல்வர் விஜய்யை 'கோணல் மூஞ்சி' முதல்வர் என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அதியமான் (கடைசிக்கு முந்தைய வரிசையில் இருப்பவர்)
அதியமான் (கடைசிக்கு முந்தைய வரிசையில் இருப்பவர்)

105 வது வார்டு திமுக கவுன்சிலரான அதியமான தனது வார்டில் மழைக்கால முன்னேற்பாடு பணிகள் நடக்கவில்லை என அரசை குற்றஞ்சாட்டி போஸ்டர் அடித்திருக்கிறார். இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதைக் கண்டித்து திமுக கவுன்சிலர் சிற்றரசு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பேசிய அதியமான், 'ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செய்ய வேண்டிய தூர்வாறு பணிகளை செய்யவே இல்லை. நான் மாமன்றத்திலேயே முறையிட்டு விட்டேன். அப்படியிருந்தும் வேலை நடக்கவில்லை என்பதால்தான் போஸ்டர் அடித்தேன். ஆனால், இந்த மைனாரிட்டி அரசு என் மீது வழக்கு போட்டிருக்கிறது.

உதயசூரியனுக்கு ஓட்டுப் போட வேண்டும் என நினைத்தவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்ததால்தான், இன்றைக்கு அவர்களின் ஆதரவோடு இந்த மைனாரிட்டி அரசு ஓடிக் கொண்டிருக்கிறது.

CM Vijay
CM Vijay

திமுகவின் கூட்டணி கட்சிகளின் ஆதரவால்தான் முதல்வர் அந்த இருக்கையில் இருக்கிறார். நம்மால்தான் இந்த தற்குறி அரசு, தூங்குமூஞ்சி அரசு ஆட்சியில் இருக்கிறது. மாநகராட்சி ஆணையர் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை.

முதல்வர் கோணலாக மூஞ்சை வைத்துக் கொண்டு உட்காந்திருக்கிறார். ஆணையரின் முகம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இவரும் முதல்வர் போல பல கேள்விகளுக்கும் சம்பந்தமில்லாமல்தான் பதில் கூறுகிறார்' எனப் பேசினார்.

வேலூர் திமுக மாவட்டச் செயலாளர், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் ரெய்டு; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

தி.மு.க வேலூர் தெற்கு மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமாரின் காட்பாடி வீட்டில் இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன... மேலும் பார்க்க

'முதலமைச்சர் வந்தா நைட்டு வரை காத்திருக்கணுமா?' - ஆவேசமான மேயர் பிரியா

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, 'முதல்வரின் கூட்டங்கள் குறித்து தனக்கு சொல்லப்படுவதே இல்லை' என ஆவேசமடைந்தார்... மேலும் பார்க்க

“பாசிசத்தில் பா.ஜ.க-வையே தவெக மிஞ்சுகிறது!” - முனைவர் கலையரசன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் பிரபல பொருளாதார நிபுணரும், 'The Dravidian Model' நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான கலையரசன், நேற்று அதிகாலை 5 மணியளவில் போலீசா... மேலும் பார்க்க

இஸ்ரேல் தேர்தல் இழுபறி: பெரும்பான்மை இல்லை! அரபுக் கட்சிகளின் ஆதரவை நிராகரிப்பது ஏன்? |Full Detail

இஸ்ரேலில் நேற்று முன்தினம் (அக்டோபர் 27) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஹமாஸ் தாக்குதல், ஈரான் போருக்குப் பின் நடக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இது.இஸ்ரேலின் தற்... மேலும் பார்க்க

'அவதூறு, உண்மைக்குப் புறம்பானவை; என் ராஜினாமாவின் ஒரே நோக்கம்.!'- மீண்டும் எல்.முருகன் விளக்கம்

மத்திய இணையமைச்சராக இருந்த எல்.முருகன் சில வாரங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவரது ராஜினாமா குறித்து பல்வேறு கருத்துகள் வெளியான நிலையில் அறிக்கை மூலம் விளக்கம் அளித்திருக்கிறார். ... மேலும் பார்க்க

`திருப்பதியில் அணிந்திருந்த நெக்லஸ்... 3 கோடி ரூபாய் கமிஷன்?' - அமைச்சர் கீர்த்தனா சொல்லும் விளக்கம்

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்க ரூ.3 கோடி வரை கமிஷன் கேட்டு, அமைச்சர் கீர்த்தனாவின் பெயரைச் சொல்லி அவரின் ஆதரவாளர்கள் ஒப்பந்ததாரரை மிரட்டுவதாகத் தகவல... மேலும் பார்க்க