செய்திகள் :

பூவரசம் பூ பூத்தாச்சு - பெண்களின் நிஜ வாழ்க்கைப் போராட்டச் சித்திரம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த வங்கியிலிருந்து வெளியே வந்த பிரபாவின் முகத்தில்  களைப்பும் கவலையும் விரவிக் கிடந்தன.‌

பார்க்கிங்கில் விட்டிருந்த தன் ஸ்கூட்டியை இயக்கி அலுவலகத்துக்கு விரைந்தாள். மனதில் வங்கி மேலாளர் பேசிய அந்த வார்த்தைகளே  மீண்டும் மீண்டும் எதிரொலித்தன.
இயந்திரங்களே பரவாயில்லை என்னும் அளவுக்கு இயந்திரமயமான  வார்த்தைகள். "எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. அதிகபட்சம் பதினைந்து நாட்கள் டைம் கொடுக்கிறோம் இல்லையானால் பின்விளைவுகள் கடினமாக இருக்கும்".

மேலே பேசுவதற்கு எதுவுமில்லை என்பது மாதிரி முகத்தை இறுக்கமாக வைத்திருந்தார்.

சட்டென்று எழுந்து வெளியே வந்தஅவளுக்கு  அந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. மனதில் ஆயிரம் குமுறல்கள்.

பரசுவுக்கு திடீரென்று வேலை போய் விட்ட வருத்தம், இரண்டு பேர் வேலை பார்த்த இடத்தில் ஒருவர் மட்டுமே பணிச்சுமையுடன் எல்லாச் சுமைகளையும் ஏற்றுக் கொள்ள முடியுமா? பெரிய பெரிய நிறுவனங்களே சமாளிக்க முடியாது ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது மிக மிக சாதாரணமான  குடும்பத்தவர்கள் என்ன செய்ய முடியும்?

அலுவலகத்துக்குள் நுழைந்ததும் வேலை அவளை ஆட்கொண்டது.லஞ்ச் நேரத்தில் பவானியுடன் பேசும் போது கொட்டித் தீர்த்தாள் அவள்.


"எங்கே போனாலும் யாரும் என்ன பிரச்சினை என்று கேட்பதே இல்லை . பள்ளிக்கூடமோ , பாங்க்கோ, மருத்துவமனையோ எதுவானாலும் முதலில் பணத்தைக் கொண்டுவா என்றுதான் வலியுறுத்துகிறார்கள். ஒரு நிமிடம் கூட நம்முடைய சிரமங்களைப் பற்றி நினைப்பது கூட இல்லை!"
பவானி புன்னகைத்தாள்.


"இதுதான் உலகம்.செல்வாக்கு உடையவர்களுக்கு கை கட்டி நிற்கும். நம்மைப் போன்றவர்களை ஆட்டிப் படைக்கும். ஆயிரம் கேள்வி கேட்கும்.அதிகார தோரணையைக் காட்டும்.இத்தனைக்கும் நாம்தான் ஒழுங்காக டாக்ஸ் கட்டுகிறோம்".

"நடுக்கடலில் இறக்கி விட்டு எப்படியோ நீந்திக் கொள் என்று சொல்வது மாதிரி ஏதோ கொஞ்சம் தொகையை கொடுத்து கழட்டி விட்டு விடுகிறார்கள்".


"நான்  தவணையை கட்ட மாட்டேன் என்றா சொன்னேன்.கொஞ்சம் அவகாசம் தான் கேட்டேன்".


"பேசாமல் நடைபாதையில் துண்டு விரித்து  யாசகம் கேட்க உட்கார்ந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது". அவள் பொருமித் தள்ளினாள்.


பவானிக்கு அவள் மனநிலை நன்றாக புரிந்தது.என்ன செய்வது!
பரசு சாதாரணமாகவே பொறுப்பு எடுப்பவன் இல்லை. வேண்டாத பழக்கங்கள் வேறு.


ஏற்கனவே துர்க்குணி , அதிலும் கர்ப்பிணி என்பது மாதிரி வேலை வேறு போய் விட்டது.ஒற்றையாக குடும்ப பாரம் சுமக்கும் அலுப்பு .இன்றைக்கு எத்தனையோ பெண்கள் இப்படித் திண்டாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். வெளியிலும் சொல்லவும் முடியாமல் விழுங்கிக்  கொள்ளவும் முடியாமல் சமாளிக்கவும் முடியாமல் தவிக்கும் அவர்களை உலகம் என்ன சொந்த குடும்பத்தினரே கண்டு கொள்வதில்லை.


நதியே ! நதியே ! நீயும் பெண்தானே! என்னும் பாடல் அவள் நினைவுக்கு வந்தது. 


உண்மைதான்.


தண்ணீர் பாத்திரத்துக்கு தகுந்தபடி மாறுவது மாதிரி பெண்தான் மாறவேண்டும்.

பட்டாம்பூச்சி மாதிரி சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த பெண் இல்லறம் என்ற செப்புக்குள் அடைக்கப்படும் போது அவளுடைய சுய உணர்வுகள், சிந்தனைகள் எதற்குமே மதிப்பு தராது குடும்பத்தின் அத்தனை பேரின் இயல்புக்கும்  தகுந்தபடி மாற நிர்ப்பந்திக்கப்படுகிறாள். சந்தேகப்படும் கணவனோ, சர்ச்சைகள் கிளப்பும் மாமியாரோ  பொறுத்துத்தான் போக வேண்டியிருக்கிறது. போராட்டமான வாழ்க்கை.

இரண்டு நாட்கள் கழித்துத் தான் பிரபாவுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவரவர் வேலை அவரவர் பிரச்சினை என்று நேரம் அதன் கணக்கை சரியாக பார்த்துக் கொண்டிருந்தது.
"என்ன செய்தாய் பிரபா? "


"என்ன செய்வது ! நகைகளை கொண்டு போய் அடகு வைத்தேன். முதலில் போய் அந்த வங்கித் தவணையை செட்டில் பண்ணினேன் . இன்னும் இரண்டு மாதத்துக்கு போதும் என்று யோசித்து வைத்திருக்கிறேன். பார்க்கலாம்! எப்படி போகிறது என்று!"


"இரண்டு மாதத்துக்குள் பரசுவுக்கு வேலை கிடைக்க வேண்டும். பார்ப்போம்".
லஞ்ச் அவர் என்பதால் சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள்.‌ 

"ஒரு விஷயம் பார்த்தாயா பிரபா! நம்மை மாதிரிமக்கள்பணத்துக்குத் திண்டாடுகிறோம்.‌
வேறு பலர்   எத்தனையோ விதங்களில் கஷ்டப்படுகிறார்கள்".
"என்ன சொல்கிறாய் நீ!"


"முன்பெல்லாம் கிராமங்களில் படிக்காதவர்கள் நிறைய இருப்பார்கள். மணி ஆர்டர் கடிதம் வந்தால் கூட படித்துக் காண்பிக்க ஆள் வேண்டும்.சிலர் தானாகவே வந்து உதவி செய்வார்கள்".


"ஆமாம்! சினிமாவில் கூட வடிவேலு கடிதத்தில் எழுதாததை எல்லாம் படித்துக் காண்பிப்பாரே!"


"அதேதான்! அதுமாதிரி இன்னிக்கு டெக்னாலஜி தெரியாமல் திண்டாடும் முதியவர் கூட்டம் இருக்கிறது. மிகவும் படித்தவர்கள் ஆக இருந்தபோதும் பல விஷயங்களை அவர்களால்  எளிதில் கடந்து போக முடிவதில்லை". 


"எங்கள் ஃப்ளாட்டில்  ஒருவர்  இன்று வந்து என்னிடம் சில சந்தேகங்கள் கேட்டார்.சிலவற்றைக் கற்றுக் கொடுத்தேன்.
அப்போது அவர் ஒரு விஷயம் சொன்னார்".

"என்ன சொன்னார்!" பிரபா நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
"அந்த அம்மாவோட சொந்தக்காரங்க புதுசா ஏதோ பிஸினஸ் ஆரம்பிச்சிருக்காங்களாம்".


"ஸ்டார்ட் அப்பா!"


"அப்படித்தான் வைத்துக் கொள்ளேன். 


அவர்களுக்கு நிறைய பேர் உதவிக்கு தேவைப்படுகிறார்களாம்".
"என்ன பிஸினஸ்! என்ன உதவி!"


பிரபாவின் குரலில் ஆர்வம் தெரிந்தது.


"மேலை நாடுகள் மாதிரி சில மணி நேரம் வேலை பார்த்தாலும் போதுமாம்.


நாம் இரண்டு பேரும் சனி ஞாயிறு போய்ப் பார்ப்போமா?"
"எனக்குத்தான் பணத் தேவை! உனக்கு என்ன!"
"வாழ்க்கையில் பணத்தை தாண்டியும்  நிறைய இருக்கிறது பிரபா!"


பிரபா அசுவாரசியமாக தலையாட்டினாள்.


"அப்புறம் முதியவர்களுக்கு டிஜிட்டல் உலகத்தை அறிமுகப் படுத்தும் உதவி!"


"அதுசரி! அதற்கெல்லாம் நமக்கு நேரம் வேண்டாமா?"
"அதோடு எத்தனையோ சந்தேகங்கள் கேட்பார்கள்.
ஆன்லைன் விண்ணப்பங்கள், மின்கட்டணம் செலுத்துவது என்று எல்லாமே இதில் வரும்!".
யாரை செய்ய சொல்லலாம் என்று நினைக்கிறாய்?"
"சந்தேகமே இல்லாமல் பரசுவைத்தான்!"
"அவனா! இதற்கு ஒப்புக்கொள்வானா?"
பிரபாவின் குரலில் சோர்வு இருந்தது.
"முயற்சி செய்கிறேன் பவானி!"

அவள் எதிர்பார்த்தபடியே அவன் எகிறினான்.

"இதெல்லாம் ஒரு வேலையா!"

"உனக்கு இது பிடிக்காது தான். ஆனால் ஒரு மாற்றமாக ஏன் முயற்சி செய்யக்கூடாது? உன்னுடைய நேரம் யாரோ ஒரு முதியவருக்கு உதவியதாக இருக்கட்டுமே! இதில் உனக்கு பணமும் கிடைக்கும்".

"கடவுள் சித்தமிருந்தால் யாராவது ஒருவருக்கு உனக்கு வேலை வாய்ப்பு கொடுக்க தெரிந்தவர்கள் கூட இருக்கலாம்".

அவள் பொறுமையாக எடுத்துச் சொன்னாள்.

இரண்டு நாட்கள் கழித்து அந்த நிறுவனத்துக்கு அவன் நேர்முகத்தேர்வுக்கு சென்றான்.

அவர்களுடைய செயல்பாடு, நோக்கம் எல்லாமே அவனுக்குப் பிடித்திருந்தது.

முதியவர்களின் அன்றாடத் தேவைகளுக்கு உதவுவதுடன் தனிமையில் வாழ்பவர்களுக்கு

தேவையான சேவைகளைஒருங்கிணைப்பதும் அதன் குறிக்கோளாக இருந்தது.

பரசு சேவையை வேலையாகத்தான் செய்தான்.

குறிப்பிட்ட சில மணி நேரம் என்றதால் அலுப்பாகத் தெரியவில்லை.

அதற்குப் பதிலாகஅவனையும் அறியாமல் மனதில் ஒரு நிறைவு வந்தது.

சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட முதியவர்கள் மகிழ்வதும் நன்றி பாராட்டுவதும் மிகப் பெரிய விஷயமாகத் தோன்றியது.

அவனுக்குள்ளும் உற்சாகப்பூ பூத்தது.முதியவர்களின் உணர்வுகள், அவர்கள் காட்டும் நன்றியுணர்ச்சி எல்லாமே அவனுக்கு புதிதாக , வித்தியாசமாக இருந்தது.

ஏனோதானோ என்று இருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பொறுப்புகளை உணர ஆரம்பித்தான்.

அவர்களுடைய வாழ்க்கையிலும் வசந்தம் மலர்ந்தது.

பிரபாவும் வார இறுதிகளில் தனக்குத் தெரிந்த ஆலோசனைகளை அந்த நிறுவனத்துக்கு வழங்கினாள்.நேரிலும் சென்று தன்னால் இயன்றதை செய்து கொடுத்தாள்.

இயந்திரமயமான மனிதர்களை பார்த்து பழகிய மனது உணர்வு பூர்வமானவர்களை சந்திக்க ஏங்கியது.

மூன்று மாதங்கள் கழித்து ஒரு நாள் பவானி கேட்டாள்.

"என்ன பிரபா! எப்படி இருக்கிறாய்! பரசுவுக்கு பிடித்ததா! சமாளிக்கிறாரா!"

பிரபா அவளைப் பார்த்து முறுவலித்தாள்.

"எல்லாம் சரியாகிவிட்டது என்று சொல்லமாட்டேன். ஆனால் சமாளிக்க முடியும் என்ற தெம்பு வந்திருக்கிறது".

அவள் பிரபுவின் மாற்றத்தை சொன்னாள்.

கடன்கள் கட்டுக்கு அடங்கி வருவதை சொன்னாள்.

"உனக்கு நான் நன்றி சொல்லணும் பவா!

நீ சுட்டி காட்டிய ஒரு வழி எத்தனையோ கதவுகளை திறந்து விட்டது. எல்லாக் கதவுகளுமே மூடிவிட்டன என்று நினைத்து மன அழுத்தத்தில் இருந்தேன். இப்போது ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்று தெரிந்துவிட்டது. அதுவும் உன்னைப் போல ஒரு தோழி இருக்கும்போது".

அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு சந்தோஷமாக சிரித்தாள் பிரபா.

"இதுதான் வாழ்க்கை பிரபா!நம்முடைய பிரச்சினையை உலகம் தீர்த்துவைக்கும் என்று நினைக்கக்கூடாது.ஆனால் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்தால் கடந்து போக வேண்டிய தூரம் மலைப்பாகத் தெரியாது .கஷ்டப் படுபவர்களுக்கு தோள் கொடுக்க கற்றுக் கொள்வோம்".

அவளிடமிருந்து விடைபெற்று வெளியே வந்து தன் ஸ்கூட்டியை இயக்கிய பிரபா வழக்கமான அந்த சாலையைக் கடந்தாள்.

அதே சாலை , அதே போக்குவரத்து, அதே வங்கிக் கட்டிடம்.

ஆனால் அன்றிருந்த மனோநிலை முழுவதும் மாறியிருந்தது.

நட்பு, மனிதநேயம் என்ற இரு பெரும் சக்திகள் தன்னைப் பாதுகாப்பதை பரிபூரணமாக உணர்ந்தாள். கசப்புடன் வாழ்ந்த வாழ்க்கை இனிமையாகிவிட்டது. பிரபுவின் மனப் போக்கும் அவள் விரும்பியபடியே மாறிவிட்டது.

பெரிய மாற்றங்கள் எப்போதும் பெரிய நிகழ்வுகளில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்பது இல்லை.

சில நேரங்களில் ஒரு சின்ன புரிதல் போதும்.வாழ்க்கை மீண்டும் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்துவிடும் பிரபாவுடையதைப் போல!!

Kanthimathi Ulaganathan,

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

படிப்பது எப்படி? - மதிப்பெண் இயந்திரங்களாகாமல் மாணவர்களை மிளிரச் செய்யும் பொன்னான வழிகள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

"எங்கள் குழந்தைகள் மதிப்பெண் இயந்திரங்கள் அல்ல!" – பொள்ளாச்சி பெற்றோர்களின் கொந்தளிப்பு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சீனாவை இந்தியா எப்படி எதிர்கொள்ள வேண்டும்? - 100 பில்லியன் டாலர் பற்றாக்குறை உணர்த்தும் பாடம்

ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை அதன் மக்கள் தொகையைக் கொண்டோ, சந்தையின் அளவைக் கொண்டோ மட்டும் மதிப்பிட முடியாது. உலகிற்குத் தேவையான பொருட்களை எவ்வளவு திறமையாக உற்பத்தி செய்கிறது, அவற்றை எவ்வளவு போட்டித்... மேலும் பார்க்க

எளிய மக்களின் உணர்வுகளுக்கு இசையால் மகுடம் சூட்டிய தேவா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஏன் தேவாவின் இசை காலத்தைக் கடந்து வாழ்கிறது? – நமது இளமைப் பருவத்தை அழகாக்கிய பாடல்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தேவாவின் மறைவும் அழியாத இசை மரபும்! – மக்களிடம் நேரடியாகப் பேசிய எளிய இசையின் கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க