``என் கணவர் பழி போடுறவறா இருக்கக் கூடாது; அவருக்கு சமைக்கத் தெரிஞ்சிருந்தா... " ...
`சுந்தர் சி நான் தத்தெடுத்த குழந்தை...' - 'மூக்குத்தி அம்மன்- 2 பட நிகழ்வில் நெகிழ்ந்த குஷ்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'மூக்குத்தி அம்மன்- 2' படம் வெளியாக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நவம்பர் 6 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவென்ட் நேற்று (அக்.28) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய குஷ்பு, "நான் பெற்றெடுத்தது இரண்டு குழந்தைகள். ஆனால் தத்தெடுத்தது ஒரு குழந்தை அதுதான்... சுந்தர்.சி. அம்மன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகவே பிறந்தவர் நயன்தாரா. அவ்வளவு அர்ப்பணிப்போடு இருப்பார்.
சுந்தர்.சி படம் என்றால் தியேட்டரில் மல்லிகைப்பூ வாசனை அடிக்கும். 32 வருடங்களாக வெற்றி, தோல்வி என எதைப் பார்த்தாலும் ஒரு துளிகூட மாறாமல் வாழும் நபர் சுந்தர்.சி மட்டுமே.
வேலை என்று வந்துவிட்டால் குடும்பம், மனைவி, குழந்தைகள் யாரையும் பார்க்க மாட்டார். தயாரிப்பாளருக்கு எப்படி லாபம் ஈட்டித் தர முடியும் என்று மட்டுமே நினைப்பார்.

ஊர்வசி ஒரு காட்சியில் நடிக்கிறார் என்றால் எல்லார் பார்வையும் அவர் மேல்தான் இருக்கும். நான் நடிக்கும்போது பயந்து நடுங்கும் ஒரே நடிகை ஊர்வசிதான். எங்களுடைய நட்பு இன்னும் மாறவே இல்லை" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

















