செய்திகள் :

ஜிம்மில் ஏற்பட்ட தொடர்பு: பயிற்சியாளர் மூலம் கணவனை குத்திக்கொல்ல முயன்ற மனைவி சிக்கியது எப்படி?

post image

டெல்லியில் உள்ள வசுந்தரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் சஷாங். இவரது மனைவி பிரியா. இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். சஷாங் வீட்டில் தனியாக இருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அந்நேரம் பிரியா உடற்பயிற்சி மையத்திற்கு சென்று இருந்தார். கத்திக்குத்து காயத்தால் உயிருக்கு போராடிய சஷாங்கை பக்கத்து வீட்டுக்காரர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், இக்கத்திக்குத்தில் ஈடுபட்டது பிரதாப் சிங் என்று தெரிய வந்தது. பிரதாப் சிங் அங்குள்ள உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக இருந்தார்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்துக்கு சஷாங்கின் மனைவி பிரியாதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. பிரியா கடந்த சில மாதங்களாக பிரதாப் சிங் பயிற்சியாளராக இருக்கும் உடற்பயிற்சி மையத்திற்கு சென்று வந்தார்.

அவ்வாறு சென்றபோது பிரியாவிற்கும், பிரதாப் சிங்கிற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் திருமணம் தாண்டிய உறவாக மாறியது. இந்த உறவை அறிந்த கணவர் சஷாங் தீபாவளிக்கு பிறகு வேறு இடத்திற்கு வீட்டை மாற்ற திட்டமிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பிரியாவும், பிரதாப் சிங்கும் சேர்ந்து சஷாங்கை கொலை செய்துவிட்டு இருவரும் திருமணம் செய்ய திட்டம் தீட்டியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த 25ம் தேதி காலை பிரதாப்பும் பிரியாவும் சந்தித்து சஷாங்கைக் கொலை செய்வது குறித்து விவாதித்தனர். மறுநாள், பிரதாப் கத்தியுடன் பிரியாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். முன்னதாக ப்ரியா வீட்டு கதவை பூட்டாமல் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கதவு திறந்து இருந்ததால் பிரதாப் வீட்டிற்குள் நுழைந்து சஷாங்கைத் தாக்கிவிட்டு பின்னர் தப்பி ஓடிவிட்டார்.

போலீஸாரின் விசாரணையில், சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு பிரியாவும் பிரதாப்பும் தங்களது திட்டம் குறித்து வாட்ஸ்அப் மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணையில், பிரியா கேட்டுக்கொண்டதால் பிரதாப் கத்தியால் சஷாங்கை தாக்கியதாக பிரதாப் தெரிவித்துள்ளார்.

காதல் விவகாரத்தில் வீடு புகுந்து சிறுமியின் தாய் கொலை; சிகிச்சையிலிருந்த தந்தையும் உயிரிழந்த சோகம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி மேரி விஜிலா. இவர்களுக்கு 15 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்களும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். முத்துக... மேலும் பார்க்க

Bishnoi: 'நிழல் அமைச்சரவை, சைவ உணவு, 24 மணிநேர கண்காணிப்பு...' - குஜராத் சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய்

மும்பையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இத்துப்பாக்கிச்சூட்டுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர்தான் காரணம் என்று தெரி... மேலும் பார்க்க

கொச்சி கார் விபத்து: நீதிபதியை கைதுசெய்ய நடவடிக்கை; மெத்தனமாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கேரள மாநிலம் கொச்சி​சித்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபாலகிருஷ்ணன் என்பவர் சேரானல்லூர் கன்டெய்னர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த நீதிபதியின் மகனின் பென்ஸ் கார் அவர் மீது மோதியது. இதில் ஜெ... மேலும் பார்க்க

சிறைபிடிக்கப்பட்ட 25 தூத்துக்குடி மீனவர்கள்; ரூ.4.80 கோடி அபராதம் விதித்த மாலத்தீவு அரசு

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்த சூசை பாக்கியம் என்பவரது விசைப்படகில் 8 மீனவர்களும், மைக்கேல் ஜான் சங்கர் என்பவரது விசைப்படகில் 8 மீனவர்களும், ரமேஷ்குமார் என்பவரது விசைப்படகில் 9 மீனவர்கள... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: கடத்தப்பட்ட பெண் குழந்தை 35 நாள்களுக்குப் பிறகு ஆந்திராவில் மீட்பு; 5 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டையைச் சேர்ந்த நாடோடி சமூக தம்பதி சேகர் - பிரேமா. இவர்கள் குப்பைகளிலிருந்து பழைய பொருள்கள் மற்றும் பாட்டில்களைச் சேகரித்து காயலான் கடையில் விற்று அதில் கிடைக்கும் வருவாய... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: காணாமல்போன 3 சிறுமிகள் கிளாம்பாக்கத்தில் பத்திரமாக மீட்பு; போலீஸார் துரித நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்துள்ள தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அக்காள் - தங்கை உட்பட 3 பள்ளிச் சிறுமிகள் நேற்று முன்தினம் மாயமாகினர். இந்தச் சிறுமிகளின் பெற்றோர்கள் கேரளாவில் கிணறு வெ... மேலும் பார்க்க