செய்திகள் :

தூத்துக்குடியில் 4 நாள்களில் 7 கொலைகள்: "காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்தவரிடம் ஒப்படைங்க" - கனிமொழி

post image

தூத்துக்குடி கந்தன் காலனியில் வசித்த சசிகலா என்பவரை அவரது வீட்டிற்குள்ளேயே கொலை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தொடரும் கொலை சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா எனும் பெண்மணி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்! இதற்கு என்ன விநோத விளக்கத்தை மாவட்டக் காவல்துறையினர் வெளியிடப் போகின்றனர்?

ஸ்டாலின் பதிவு
ஸ்டாலின் பதிவு
கனிமொழி பதிவு
கனிமொழி பதிவு

வெளியில்தான் பாதுகாப்பில்லை, நிம்மதியாக யாரும் நடமாட முடியவில்லை என்று பார்த்தால், வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலைக்கு மக்களைத் தள்ளியதுதான் த.வெ.க.வின் சாதனையா?"

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் கண்டனப் பதிவு:

"நேற்றைய தினம் தூத்துக்குடி கந்தன் காலனியில், வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நான்கு நாட்களில் ஏழு கொலைகள் எனத் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

‘முத்துநகரம்’ என்று அழைக்கப்படும் தூத்துக்குடியை, ‘கொலை நகரம்’ என்று அழைக்கும் நிலைக்குக் கொண்டு செல்கிறது த.வெ.க. அரசு.

மீண்டும் சொல்கிறேன்… முதலமைச்சர் விஜய் அவர்கள் மக்கள் மீது கருணை காட்டி, காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்த ஒருவரிடம் அதன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்!"

`திருப்பதியில் அணிந்திருந்த நெக்லஸ்... 3 கோடி ரூபாய் கமிஷன்?' - அமைச்சர் கீர்த்தனா சொல்லும் விளக்கம்

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்க ரூ.3 கோடி வரை கமிஷன் கேட்டு, அமைச்சர் கீர்த்தனாவின் பெயரைச் சொல்லி அவரின் ஆதரவாளர்கள் ஒப்பந்ததாரரை மிரட்டுவதாகத் தகவல... மேலும் பார்க்க

அன்பில் கைது, ஏக குஷியில் திமுக-வினர் பசும்பொன் பயணம் - 'நோ' சொன்ன முதல்வர் அலுவலகம் | கழுகார்

சிக்கிய தி.மு.க., த.வெ.க புள்ளிகள்!போதைப்பொருள் விற்பனையில் கூட்டணி...நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த முகமது நசீஃப், த.வெ.க‌‌-வின் மாவட்ட மண்டல இணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்திருக்கிறார். அதேபோ... மேலும் பார்க்க

"இடைத்தேர்தலில் பல Modulation-இல் கத்த நடத்தப்படுகின்றன இந்த ரெய்டுகள்" - விஜய்யைச் சாடும் ஸ்டாலின்

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்... மேலும் பார்க்க

நகராட்சி நிர்வாகத் துறையில் மோசடி: KN நேரு வீட்டில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குச் சொந்தமான இடங்களில் இன்று (அக்டோபர் 29) லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த திமுக ஆட்சியின்போது, நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் உத... மேலும் பார்க்க

"இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லை, எல்லாம் ஒப்பந்தப் பணிகள்தானா?" - தவெக அரசிற்கு கனிமொழி கேள்வி

சமீபத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டிருந்தது தமிழக அரசு. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தற்காலிகப் பணிகளை நிரந்தரமாக்குவோம் என்கிற ... மேலும் பார்க்க