செய்திகள் :

நகராட்சி நிர்வாகத் துறையில் மோசடி: KN நேரு வீட்டில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு

post image

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குச் சொந்தமான இடங்களில் இன்று (அக்டோபர் 29) லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த திமுக ஆட்சியின்போது, நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அரசுப் பணியிட நியமனங்களில் ரூ.634 கோடி வரை லஞ்ச முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில்தான் இன்று நேரு வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு, கடந்த செப்டம்பர் 5-ம் தேதி, இந்தப் புகாரின் பெயரில் முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டது.

KN நேரு வீட்டில் ரெய்ட்
KN நேரு வீட்டில் ரெய்ட்

கடந்த அக்டோபர் 26-ம் தேதி, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தற்போது சிறையில் உள்ளார்.

இப்போது நேரு வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. நேரு, அன்பில் மகேஸ் இருவருமே திருச்சியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அடுத்து திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் வர உள்ளதால், அதைக் கணக்கில் வைத்துச் சோதனைகள், கைது ஆகியவற்றைத் த.வெ.க. அரசு நடத்துகிறதா என்கிற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் அடிபடுகின்றன.

தூத்துக்குடியில் 4 நாள்களில் 7 கொலைகள்: "காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்தவரிடம் ஒப்படைங்க" - கனிமொழி

தூத்துக்குடி கந்தன் காலனியில் வசித்த சசிகலா என்பவரை அவரது வீட்டிற்குள்ளேயே கொலை செய்துள்ளனர்.தமிழ்நாட்டில் தொடரும் கொலை சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

"இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லை, எல்லாம் ஒப்பந்தப் பணிகள்தானா?" - தவெக அரசிற்கு கனிமொழி கேள்வி

சமீபத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டிருந்தது தமிழக அரசு. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தற்காலிகப் பணிகளை நிரந்தரமாக்குவோம் என்கிற ... மேலும் பார்க்க

டாடா பிரச்னை: 'அமித்ஷா வீட்டில் டாடா நிர்வாகிகளுக்கு விருந்து?' - ராகுல் vs நிர்மலா சீதாராமன்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமையிலும், அந்த நிறுவனத்தைப் பட்டியலிடுவதிலும் தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது.டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் நீடிக்க வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தை... மேலும் பார்க்க

``தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன்

அமைச்சர் மரிய வில்சன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``அன்பில் மகேஸ் மீதான வழக்கு தமிழ்நாடு மட்டுமன்றி, இந்தியா முழுவதுமே உன்னிப்பாகக் கவனிக்கும் ஒரு வழக்காக உருவெடுத்துள்ளது. இதில்... மேலும் பார்க்க