மதுரை ஓவியக் கண்காட்சி: பெண் பாதுகாப்பு முதல் விவசாயம் வரை… ஓவியங்களில் சமூகச் ச...
ஜோக்ஸ்..! - 2

“நம் கட்சி, வரலாற்றுல நிச்சயம் இடம்பெறும்னு சொல்றியேய்யா... எந்த வகையில?”
“அவைக்குறிப்பிலிருந்தே அதிகம் நீக்கப்பட்டது நம் கட்சி எம்.எல்.ஏ-க்களோட பேச்சுகள்தான் என்கிற வகையிலதான் தலைவரே!”
- சு.அருண் பிரகாஷ்

“ஒவ்வொரு கட்சியிலும் இருக்கும் நல்ல கொள்கைகளைத் தெரிந்து மக்களுக்குச் சேவை செய்யத்தான் நான் பல கட்சிகளுக்குத் தாவினேனே தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை.”
- பெ.பாலசுப்ரமணி

“மீட்டிங்குக்கு ஜெனரேட்டர் வசதியெல்லாம் செஞ்சிருந்தும் தலைவர் பேசினது மக்கள்கிட்ட ரீச் ஆகலையா ஏன்?!’’
“ஜெனரேட்டர் சத்தத்துல அவர் பேசினது யாருக்கும் கேட்கலையாம்!”
- குரு ஷங்கர்

``ஆஸ்பத்திரிக்கும் மெடிக்கலுக்கும் சுரங்கப்பாதை வெச்சிருக்கீங்களே... எதுக்கு டாக்டர்?’’
``யாரும் வெளியில போய் மருந்து, மாத்திரை வாங்கிடக் கூடாதுன்னுதான்..!’’
- வேம்பார் மு.க.இப்ராஹிம்
















