செய்திகள் :

ஜோக்ஸ்..! - 1

post image
ஜோக்ஸ்..!

“என்னய்யா... நான் பேசலாம்னு இருந்த பாயின்ட்ஸையெல்லாம், எனக்கு முன்னாடி நம்ம கட்சிக்காரங்களே பேசிட்டாங்க?!“

“நீங்க பாயின்ட்ஸ் எடுத்த அதே ‘சாட்ஜிபிடி’லதான், அவங்களும் எடுத்திருக்காங்க தலைவரே!“

- திருப்பூர் சாரதி

“எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ, அதுவும் நடந்துடுச்சு!”

“அப்படி என்ன நடந்துடுச்சு!?”

“சட்டசபைக்கு உள்ளே ஐஸ்க்ரீம், பாப்கார்ன் விற்க ஆரம்பிச்சிட்டாங்க!”

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

“என்னய்யா.. ‘80ஸ் டிரெண்ட் போட்டோ’ன்னு சொன்னீங்க... ஜெயில்ல களி சாப்பிடுற மாதிரி கிரியேட் பண்ணிக் குடுக்குது?”

“உங்களுக்கு மட்டும் உண்மையைச் சொல்லிடுச்சு தலைவரே...”

- மலர்சூர்யா

‘‘அமலாக்கத்துறையே ஆடிப்போற அளவுக்குத் தலைவர் அப்படி என்ன கேள்வி கேட்டுட்டார்?’’

‘‘கேள்விகளுக்கு சாய்ஸ் உண்டான்னு கேட்டிருக்கார்.’’

– வி.மோகன்

ஜோக்ஸ்..! - 2

ஜோக்ஸ்..!“கொஞ்ச நாளா தூக்கமே இல்லை!”“டாக்டரைப் பார்க்க வேண்டியதுதானே?”“பார்த்தேன்... ‘கரன்ட் பிரச்னைக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது’ன்னு சொல்லிட்டார்!”- சு.அருண் பிரகாஷ்ஜோக்ஸ்..!“டாக்டர் கொஞ்ச நாளா என... மேலும் பார்க்க