செய்திகள் :

'தமிழக எழுச்சிக் கழகம்!' - கட்சி தொடங்குகிறாரா தனுஷ்? - விவரம் என்ன?

post image

நடிகர் தனுஷ் தமிழக எழுச்சிக் கழகம் என புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சில ஊடகங்களில் வெளியான இந்த செய்தி இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

தனுஷ்

இது சம்பந்தமாக தனுஷ் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். ``அப்படி புதிதாக எந்தக் கட்சியையும் எங்கள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை.

தலைவர் இப்படியான முக்கிய முடிவுகளை எடுக்கிறார் எனில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்துப் பேசி ஊடகங்களிடம் சொல்லாமல் செய்யமாட்டார். அதனால் வெளியில் பரவும் இந்தச் செய்தியில் உண்மை இல்லை. எங்களை மக்களுக்கு பயன்பெறும் வகையில் நற்பணியில் ஈடுபடுமாறு தலைவர் கூறியிருக்கிறார். நாங்கள் ரசிகர் மன்ற கட்டமைப்பை வலுப்படுத்தி எங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறோம். தலைவரும் எங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

தனுஷ்
தனுஷ்

சமீபத்தில்கூட ஒரு பிரமாண்ட நற்பணி நிகழ்ச்சியை தலைவர் தலைமையில் நடத்தியிருந்தோம். அந்த நிகழ்ச்சி எங்களுக்கு நல்லப் பெயரை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. இப்போதைக்கு இப்படியான நற்பணி செயல்பாடுகளில்தான் கவனம் செலுத்த சொல்லியிருக்கிறார். நாங்களும் மக்களுக்கு நெருக்கமாக செயல்பட்டு வருகிறோம். வருங்காலங்களில் தலைவர் என்ன முடிவை எடுத்தாலும் அவரின் விருப்பப்படி கடினமாக உழைப்போம். அடுத்ததாக இந்த மாத இறுதியில் 'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடிக்கும் வேலையில் இறங்கியிருக்கோம்" என்றனர்.

இருக்கு... ஆனா இப்போ இல்ல!

`முதல்வர் விஜய் ஏன் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை?' - அமைச்சர் ராஜ் மோகன் அளித்த பதில் இதுதான்!

நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ``இந்தியாவின் பிரதமர் மோடியும், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்யும் ஏன் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை? ஏன் செ... மேலும் பார்க்க

பழனி மட நில மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது; சூடுபிடிக்கும் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரின் முக்கியப் பகுதியான பூங்கா சாலையில் அருள்மிகு தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் மற்றும் நிலங்கள் உள்ளன.இந்நிலையில்,... மேலும் பார்க்க

"துரோக அமைப்புடன் சேர்ந்து செயல்பட முடியாது; திமுக தனித்தே போராடும்" - யாரைச் சொல்கிறார் RS பாரதி?

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்தும், பா.ஜ.க அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்தியா... மேலும் பார்க்க

EVM குற்றச்சாட்டு: ``பிரகாஷ் ராஜ் திரையில் என்ன கேரக்டரோ... நிஜத்திலும் அப்படியே!" - நயினார் சாடல்!

நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் நேற்று செய்தியாளர் சந்திப்பில், 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர... மேலும் பார்க்க

'ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்து, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்!'- சீமான்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்வதோடு, அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து, நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி... மேலும் பார்க்க

'இதுதான் உண்மை; மாத்திரை உறை விவகாரத்தில் மலிவான அரசியல் செய்கிறது திமுக' - அமைச்சர் அருண்ராஜ்

கோவை மற்றும் கரூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரை உறைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுவது சா்ச்சையைய... மேலும் பார்க்க