செய்திகள் :

"நான் ஆவலோடு காத்திருக்கிறேன்"- புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி!

post image

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹர்மன்ப்ரீத் கவுர் நேற்று அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய மகளிர் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

புதிய கேப்டன் பதவி குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஸ்மிருதி மந்தனா, "இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா

இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது எனக்கு எப்போதும் மிக முக்கியமான ஒன்று. இப்போது இந்த அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்திருப்பதை நான் மிகவும் மதிப்பாய் கருதுகிறேன்.

பிசிசிஐ, தேர்வு குழுவினர், எனது சக வீரர்கள் மற்றும் எனது இந்த பயணம் முழுவதும் எனக்கு ஆதரவளித்து, என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக கேப்டனாக ஹர்மன்பிரீத் செய்த பங்களிப்பையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் அணியை வழிநடத்தினார்.

மேலும் இந்தப் பயணத்தில் அவர் ஒரு முக்கியமான அங்கமாக இருந்திருக்கிறார். இந்த பொறுப்பின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்கிறேன்.

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்

மேலும் அணியுடன் இணைந்து செயல்படவும், கற்றுக்கொள்ளவும், இந்திய கிரிக்கெட்டை முன்னேற்றிச் செல்ல எனது சிறந்த பங்களிப்பை வழங்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`தலைமைப் பொறுப்பு புதிதல்ல; எனினும் முன் நிற்கும் சவால்கள்.!' - இறங்கி அடிப்பாரா ஸ்மிருதி மந்தனா?!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக அணியை வழிநடத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, இந்திய அணியின் புத... மேலும் பார்க்க

Asian Games: தோஹாவை நோக்கி அடுத்த பயணம்; 85 பதக்கங்களுடன் இந்தியா... வண்ணமயமான நிறைவு விழா

16 நாட்கள்... 43 விளையாட்டுகள்... ஆயிரக்கணக்கான வீரர்களின் போட்டி என பரபரப்பாக நடந்த 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு நகோயாவில் இன்று கோலாகலமாகத் திரை விழுந்தது. ஜப்பானின் பாலொமா மிசுஹோ (Paloma ... மேலும் பார்க்க

Asian Games: தூக்கமில்லாத இரவு; தடுமாறிய தருணம்… கடைசி புட்டில் வரலாறு படைத்த பிரணவியின் தங்கக் கதை!

மூன்றாவது ஹோலில் முன்னிலை பறிபோனாலும் மனதை இழக்காத 23 வயது பிரணவி உர்ஸ்… ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் கோல்ஃப் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனை!ஒரு தங்கப் பதக்கத்தை வெல்வ... மேலும் பார்க்க

Asian games: கிரிக்கெட் முதல் ஹாக்கி வரை... தங்கப் பதக்கங்களைக் குவித்த இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாளான பதினைந்தாவது நாளில், கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம், வில்வித்தை மற்றும் கோல்ஃப் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்தியா தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது. குறிப... மேலும் பார்க்க

வைபவ் விக்கெட்... சயீம் அயூபின் `குழந்தை' சேட்டை - நொடியில் பாடம் புகட்டிய அபிஷேக் சர்மா!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது. சனிக்கிழமை நடைபெற்ற இந்த பரபரப்பான போட்டியில், பேட... மேலும் பார்க்க

"பி.டி.உஷா சாதனையை முறியடித்தும் முழு மகிழ்ச்சி வரவில்லை" - வித்யா ராம்ராஜ் சொல்லும் காரணம் என்ன?

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களை வென்று அசத்தினார். மேலும் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட... மேலும் பார்க்க