செய்திகள் :

"பி.டி.உஷா சாதனையை முறியடித்தும் முழு மகிழ்ச்சி வரவில்லை" - வித்யா ராம்ராஜ் சொல்லும் காரணம் என்ன?

post image

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களை வென்று அசத்தினார்.

மேலும் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 42 ஆண்டு கால பி.டி. உஷாவின் தேசிய சாதனையையும் வித்யா ராமராஜ் முறியடித்தார். இதையடுத்து இன்று கோவை திரும்பிய வித்யா ராம்ராஜ்க்கு, கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வித்யா ராம்ராஜ், ”செண்ட்ரல் கவர்மெண்ட், ஸ்டேட் கவர்மெண்ட் ரெண்டு பேரும் சப்போர்ட் பண்ணுறாங்க. அதனாலதான் நான் இங்க இருக்கேன். என் கோச் நேபாள்சிங்க்கு நன்றி. கோச் இல்லாமல் இலக்கு நோக்கி செல்வது கஷ்டமாக இருந்தது. அவரது அர்ப்பணிப்பு மிக்க பயிற்சி எனக்கு உதவிகரமாக இருந்தது.

ஆசியன் கேம்ஸில் நாங்கள் சாதித்தது ரொம்ப ஹேப்பியா இருக்கு. எங்க கோச் கூட இருந்து சப்போர்ட் பண்ணினார். கடைசி சீசனை விட இந்த சீசனில் நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம். அதன் பலன்தான் எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது.

வித்யா ராம்ராஜ்
வித்யா ராம்ராஜ்

பி.டி.உஷாவின் சாதனையை நான் முறியடித்தது ரொம்ப ஹேப்பி. 43 ஆண்டுகளாக உடைக்கப்படாமல் இருந்த சாதனையை முறியடித்து, இந்திய மக்கள் இன்னும் மேலே செல்ல முடியும் என்பதை காட்டியுள்ளோம். 2023-யிலேயே அவரது சாதனையைச் சமன் செய்தேன். அது அவரது சாதனையை முறியடிக்க முடியுமென்ற நம்பிக்கையைத் தந்தது.

இந்த சீசனில் அந்தச் சாதனையை முறியடிக்க வேண்டுமென நினைத்தேன். நாங்க மெடலை ஏய்ம் செய்யவில்லை. ரெக்கார்டை பிரேக் பண்ண வேண்டுமென ஏய்ம் செய்யவில்லை. எங்க டார்க்கெட்டே டைமிங். கோச்சும், நானும் மெடல், ரெக்காட் பற்றி யோசிக்காமல், டைமிங்கில் கவனம் செலுத்தினோம்.

இந்திய அளவில் கூட ஃபைட் பண்ண போட்டியாளர்கள் யாரும் கிடையாது. இண்டர்நேசனல் லெவல் போனால்தான், நம்மகூட ஃபைட் பண்ணும் அளவிற்கு இருப்பார்கள். அதனால் இது உனக்காக ஸ்டேஜ், இதை நீதான் பார்க்க வேண்டுமென எனக் கோச் சொன்னார். அதற்காகத்தான் நாங்க அங்க போனோம். டைமிங்காக மட்டும்தான் ஓடினோம். அது மெடலைத் தந்தது, ரெக்கார்டை பிரேக் பண்ண வைத்தது.

வித்யா ராமராஜ்
வித்யா ராம்ராஜ்

ஒலிம்பிக் ரெக்கார்ட் 50 செகண்ட்ஸ் ஆக உள்ளது. நான் இப்போது 54 செகண்ட்ஸ் வந்துள்ளேன். இந்தியா இன்னும் கீழேதான் உள்ளது. நாம் உலகத்தரத்தில் ஃபெர்பாமன்ஸ் பண்ணணும். இந்த ஆசியன் கேம்ஸ் எங்களுக்கு என்னதான் அச்சிவ் கொடுத்தாலும், அது இன்னும் முழுமையான மகிழ்ச்சி தரவில்லை. இன்னும் உலகத்தரத்திற்கு நாம் செல்லவில்லை. ஆசியன் கேம்ஸ் அளவிற்குத்தான் போயுள்ளோம்.

அடுத்த ஆண்டு வேர்ல்ட் சாம்பியன்ஷிப், அதற்கு அடுத்த ஆண்டு ஒலிம்பிக்ஸ் வருகிறது. நான் 54 செகண்டில் இருந்து 53, 52 செல்ல வேண்டும். அதைச் செய்தால்தான் நான் ஒலிம்பிக்கில் பைனலுக்குச் செல்ல முடியும். ஸ்டேட் கவர்மெண்ட் சப்போர்ட் பண்ண தயாராக இருக்கிறார்கள். எனக்கு எல்லா சப்போர்ட்டும் கிடைக்கிறது.

ஒரு அத்லெட் டீச்சர், கோச் இல்லாமல் ஃபெர்பமான்ஸ் பண்ண முடியாது. இப்போ எங்கு பார்த்தாலும் மெடல் வாங்கிய எங்க பெயர்தான் உள்ளது. ஆனால் கோச் பெயர் எங்கும் தெரியவில்லை. எங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை கோச்களுக்கும் தர வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கூறினேன். இதை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று, சி.எம். அவார்ட்ஸ் தரும்போது, கோச்களுக்கும் மெடல் தருவோம் என்றார்” என்றார்.

INDvPAK: அபிஷேக் ஷர்மா அதிரடி; திலக் வர்மாவின் ஃபினிஷிங் - பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை... மேலும் பார்க்க

Asian Games: `குறி வைச்சா..!' - 17 வயதில் கும்கும் மோஹோத் `தங்க' வெற்றி; ஒலிம்பிக் வரை பேசும் கதை!

சில வெற்றிகள் வெறும் பதக்கங்களாக மட்டும் இருப்பதில்லை. அவை ஒரு தலைமுறைக்கான நம்பிக்கையாக மாறுகின்றன. சில அம்புகள் இலக்கை மட்டும் துளைப்பதில்லை; வரலாற்றின் பக்கங்களையும் துளைத்து எழுதுகின்றன. அப்படியொர... மேலும் பார்க்க

Asian Games: குத்துச் சண்டையில் ஆதிக்கம், ஹாக்கியில் வரலாற்றுத் தங்கம் - இந்தியாவின் பதக்க வேட்டை!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 14-வது நாளில் குத்துச்சண்டை, மல்யுத்தம், ஆர்ச்சரி மற்றும் ஹாக்கிப் போட்டிகளில் இந்தியா முக்கிய வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. குத்துச்சண்டையில் மூன்று தங்கப் பதக்கங்கள் க... மேலும் பார்க்க

Asian Games: 44 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கம்… வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!

44 ஆண்டுகளாகக் காத்திருந்த அந்தத் தங்கம்… இப்போது இந்தியாவின் கைகளில்! 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய அணி தங்கப் பதக்க... மேலும் பார்க்க

Asian Games: பிறந்தநாளில் தங்கம் வென்ற தங்க மகள்; வெள்ளியிலிருந்து வாழ்நாள் சாதனை- லவ்லினாவின் பயணம்

5-0 என்ற ஒருமித்த தீர்ப்பில் சீன வீராங்கனை பாவோ ஸீயியை வீழ்த்தி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் தங்கத்தை வென்றார், லவ்லினா. மேரி கோமுக்குப் பிறகு இந்தச் சாதனையைப் படைத்த இரண்டாவது இந்தியப் பெண் கு... மேலும் பார்க்க

CR7: கைமாறிய ரொனால்டோவின் ‘7’ம் எண் ஜெர்சி… இப்போது ரஃபேல் லியோவிடம்! - இதுதான் காரணமா?!

போர்ச்சுகல் அணியில் நடந்த மாற்றம்கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் போர்ச்சுகல் அணி டென்மார்க்கை எதிர்கொண்ட நிலையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது அவரது பிரபலமான ‘7’ம் எண் ஜெர்சி. ரொனால்டோ அணியின் பயிற்சி... மேலும் பார்க்க