செய்திகள் :

Asian Games: 44 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கம்… வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!

post image

44 ஆண்டுகளாகக் காத்திருந்த அந்தத் தங்கம்… இப்போது இந்தியாவின் கைகளில்! 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.

போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் விடாமல் மோதிய நிலையில், 10-வது நிமிடத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த வாய்ப்பை லால்ரெம்சியாமி சரியாகப் பயன்படுத்தினார். அவரது அசத்தலான ஷாட் சீனாவின் கோல் வலையைத் துளைக்க, இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பிறகு அந்த ஒரு கோலைக் காப்பாற்றுவதற்கான போராட்டமாகவே போட்டி மாறியது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி!

பதிலடி கொடுக்க சீனா தொடர்ந்து தாக்குதல் நடத்த, இந்திய வீராங்கனைகள் தடுப்பாட்டத்தில் அசராமல் நின்றனர். முக்கியமான தருணத்தில் சீனாவுக்கு கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக்கையும் கோல் கீப்பர் சவிதா புனியா தடுத்து நிறுத்தினார். இறுதி விசில் வரை இந்தியாவின் முன்னிலை மாறாமல் இருந்தது.

இதன்மூலம் 1982-ம் ஆண்டுக்குப் பிறகு 44 ஆண்டுகள் கழித்து இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆசிய விளையாட்டில் மீண்டும் தங்கம் வென்றுள்ளது. 1998 மற்றும் 2018-ல் இறுதிப்போட்டிக்குச் சென்றும் வெள்ளியுடன் திரும்பிய இந்திய அணிக்கு, இந்த முறை தங்கம் வசமாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த வெற்றியின் மூலம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் இந்திய அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி!

இதற்கிடையே, இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் தங்கத்தை நோக்கி முன்னேறியுள்ளது. பாகிஸ்தானை 4-3 என்ற பரபரப்பான ஆட்டத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ள இந்திய அணி, அக்டோபர் 3-ம் தேதி மலேசியாவை எதிர்கொள்கிறது. மகளிர் அணி தங்கத்தை வசமாக்கிய நிலையில், ஆடவர் அணியும் நாளை தங்கத்துக்காக களமிறங்குகிறது.

Asian Games: பிறந்தநாளில் தங்கம் வென்ற தங்க மகள்; வெள்ளியிலிருந்து வாழ்நாள் சாதனை- லவ்லினாவின் பயணம்

5-0 என்ற ஒருமித்த தீர்ப்பில் சீன வீராங்கனை பாவோ ஸீயியை வீழ்த்தி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் தங்கத்தை வென்றார், லவ்லினா. மேரி கோமுக்குப் பிறகு இந்தச் சாதனையைப் படைத்த இரண்டாவது இந்தியப் பெண் கு... மேலும் பார்க்க

CR7: கைமாறிய ரொனால்டோவின் ‘7’ம் எண் ஜெர்சி… இப்போது ரஃபேல் லியோவிடம்! - இதுதான் காரணமா?!

போர்ச்சுகல் அணியில் நடந்த மாற்றம்கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் போர்ச்சுகல் அணி டென்மார்க்கை எதிர்கொண்ட நிலையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது அவரது பிரபலமான ‘7’ம் எண் ஜெர்சி. ரொனால்டோ அணியின் பயிற்சி... மேலும் பார்க்க

Asian Games: பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு | Photo Album

Asian games: ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டியில் இந்தியா; மல்யுத்தத்தில் வெள்ளி Roundup மேலும் பார்க்க

Asian Games: Recurve வில்வித்தையில் முதல் தங்கம்; 44 ஆண்டு கால கொரிய ஆதிக்கத்துக்கு இந்தியா முடிவுரை

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் Recurve வில்வித்தை என்றாலே கடந்த 44 ஆண்டுகளாக தென் கொரியாவின் ஆதிக்கம்தான். உலக சாம்பியனான அந்த அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இந்த முறை களத்தில் இருந்த இ... மேலும் பார்க்க

Asian games: ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டியில் இந்தியா; மல்யுத்தத்தில் வெள்ளி Roundup

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 13-வது நாளில், இந்தியா இரண்டு முக்கிய குழுப் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதுடன், மொத்தம் 6 பதக்கங்களையும் வென்றுள்ளது. ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் பாகிஸ்தானை... மேலும் பார்க்க

Asian Games: `இரட்டை வெண்கலம்' சர்வேதேச அரங்கில் சாதித்து அசத்திய தமிழ்நாட்டின் ஜோஷ்னா சின்னப்பா

இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார். கலப்பு இரட்டையர் பிரிவில் வேலவன் செந்தில்குமாருடன் இணைந்து ஒரு வெண்கலப் ... மேலும் பார்க்க