செய்திகள் :

"நிலத்தில் 99% பங்கு இருக்கும் அஜித் பவார் மகனுக்கு நில மோசடியில் தொடர்பு இல்லையா?" - கோர்ட் காட்டம்

post image

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை மலிவு விலைக்கு வாங்கியது தொடர்பாக மறைந்த மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்கு சொந்தமான அமேடியா எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பார்த் பவாருக்கு 99 சதவீத பங்கு இருக்கிறது. ஆனால் இந்நிறுவனம் வாங்கிய 40 ஏக்கர் நில பரிவர்த்தனை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ஒரு சதவீதம் மட்டுமே பங்கு இருக்கும் திக்விஜய் பாட்டீல் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு நிலத்தை சீத்தல் தேஜ்வானி என்பவர் தனது நிலம் என்று கூறி விற்பனை செய்துவிட்டார். இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இவ்விவகாரத்தில் குறிப்பிட்ட நில பதிவுக்கு ஒப்புதல் வழங்கிய தாசில்தார் சூர்யகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை ஐகோர்ட்

அவர் இவ்வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணையின்போது தாசில்தாருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது.

முன் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது துணை முதல்வர் சுனேத்ரா பவாரின் மகனும் மாநிலங்களவை எம்.பி.யுமான பார்த் பவார் 99% பங்குகளை வைத்திருக்கும் அமேடியா எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், பார்த் பவார் அந்த ஒப்பந்தத்தின் பயனாளி இல்லையா என்று வாய்மொழியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பார்த் பவார் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல என்றும், அதேசமயம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஒரு சதவீத பங்குகளை வைத்திருக்கும் இயக்குநர் திக்விஜய் பாட்டீல் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் கூறிய நீதிபதி மாதவ் ஜம்தார், 99% பங்குகளை வைத்திருப்பவர் பொறுப்பல்ல என்பதுதான் அரசின் நிலைப்பாடா என்றும் அரசுத் தரப்பிடம் வினவினார்.

மாநில டிஜிபி சதானந்த் டேட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், விசாரணை ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்ததில், இன்னும் தொழில்முறை சார்ந்த மற்றும் விரிவான விசாரணை தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக கூடுதல் விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் முன்னேற்றத்தை வாரந்தோறும் ஆய்வு செய்யுமாறு புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் கவாந்த் ஆஜராகி, "அமேடியா ஒரு கூட்டு நிறுவனம் அல்ல... அசையாச் சொத்தை வாங்குவதற்கு பார்த் பவார் எந்தத் தீர்மானத்திலும் கையெழுத்திடவில்லை.

திக்விஜய் பாட்டீல் அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்திட்டதால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விற்பனைப் பத்திரம் ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுவிட்டது'' என்று தெரிவித்தார்.

"தளபதி விஜய் வந்து என்னை கட்டிப்பிடிக்க வேண்டும்"- டெல்லி ரோட்டில் படுத்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்

டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே நடுரோட்டில் ஒரு பெண் படுத்துக்கொண்டு தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் தன்னைச் சந்தித்துக் கட்டிப்பிடிக்கும் வரை அங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறி ரகளையில் ஈடுபட்டார... மேலும் பார்க்க

ஐநா: `சர்வதேச உச்சி மாநாட்டில் ஒலித்த தமிழரின் குரல்' - யார் இந்த சதீஷ் குமார்?

ஐக்கிய நாடுகள் சபையில் (UN) நடைபெற்ற சர்வதேச உச்சி மாநாட்டில், தமிழர்களின் தொன்மையான கட்டடக்கலை, பொறியியல் நுணுக்கம் மற்றும் உலகளாவிய மனிதநேயச் சிந்தனைகளை எடுத்துரைத்து உரையாற்றிய சென்னையைச் சேர்ந்த த... மேலும் பார்க்க

குரோர்பதி படப்பிடிப்பில் அமிதாப்பச்சன் கீழே விழுந்து காயம் - `ஓய்வு' குறித்து நச் கமென்ட்!

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் தான் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்த அமிதாப்பச்சன் அதிலிருந்து மீண்ட... மேலும் பார்க்க

"அதிஷ்ட தேவதை ஒருநாள் வாழவைப்பாள் என நம்பினேன்; ஆனால்..."- 5 மூட்டை லாட்டரி வாங்கி ஏழையான ராகவன்!

அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை மாற்றிவிடலாம் என்ற ஒற்றை ஆசையினால், கடின உழைப்பால் ஈட்டிய வருமானம், பூர்வீக நிலம் மற்றும் நகைகள் என சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமான தொகையை லாட்டரி சீட்டுகளுக்காகவே... மேலும் பார்க்க

பெங்களூரு: ஆட்டோ கட்டணம் செலுத்துவதில் தகராறு; டிரைவருடன் மல்லுக்கட்டிய இளம்பெண்கள்; வீடியோ வைரல்

பெங்களூருவில் இரண்டு இளம்பெண்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கியவுடன் ஆட்டோவில் பயணம் செய்ததற்கு பணம் கொடுப்பது தொடர்பாக ஆட்டோ டிரைவருக்கும், அப்பெண்களுக்கும் இடையே ... மேலும் பார்க்க

முதலைகள் நிறைந்த ஆற்றில் 25 கி.மீ நீச்சல் - 75 வயது பாட்டியின் உயிர் தப்பிப்பதற்கானப் போராட்டம்!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 75 வயதான கேஷி தலாய்.தன் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர், சனிக்கிழமை இரவு வழக்கம்போல குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், வீட்டின் அருகி... மேலும் பார்க்க