செய்திகள் :

பெங்களூரு: ஆட்டோ கட்டணம் செலுத்துவதில் தகராறு; டிரைவருடன் மல்லுக்கட்டிய இளம்பெண்கள்; வீடியோ வைரல்

post image

பெங்களூருவில் இரண்டு இளம்பெண்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கியவுடன் ஆட்டோவில் பயணம் செய்ததற்கு பணம் கொடுப்பது தொடர்பாக ஆட்டோ டிரைவருக்கும், அப்பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் அடிதடியில் இறங்கினர். அப்பெண்கள் ஆட்டோ டிரைவரை அடிப்பதும், ஆட்டோ டிரைவர் அப்பெண்களை அடிப்பதுமாக இருந்தனர். சாலையில் சென்ற ஒருவர் அதனைப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில் அந்த இரு பெண்களுக்கும் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறுவது பதிவாகியுள்ளது.

மோதல் தொடரும் நிலையில், அவர்கள் மூவரும் சாலையோரத்தில் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டும் தாக்கிக்கொண்டும் இருப்பது காணப்படுகிறது. இறுதியில் அந்த வழியாக வந்த ஒரு பெண் அங்கு வந்து அவர்களைப் பிரித்துவிட்டதன் மூலம் அந்தச் சண்டை முடிவுக்கு வந்தது. இதனை ரோட்டில் வருபவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஆட்டோ டிரைவருடன் சண்டை
ஆட்டோ டிரைவருடன் சண்டை

இந்த வீடியோவை சமூக வலைத்தளப் பக்கத்தில் பார்த்தவர்களில் ஒருவர், "வாகனத்தில் ஏறுவதற்கு முன்பே அவர்கள் ஏன் கட்டணத்தைப் பற்றி விசாரிக்கவில்லை? வீடியோவை உற்று நோக்கினால், யார் முதலில் உடல்ரீதியாகத் தாக்கினார்கள் என்பது தெரியும்.

அந்தப் பெண்மணிதான் முதலில் முரட்டுத்தனமாக நடத்ததாகத் தெரிகிறது. அது உண்மையில் அவசியமா? உடல்ரீதியான வன்முறை இல்லாமலேயே அந்தச் சூழலைக் கையாண்டிருக்கலாம். வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்த பெண் நிலைமையைச் சமாதானப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்.

ஆனால் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்த பெண்ணோ அதிக ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். ஒரு சேவையைப் பயன்படுத்தும்போது, ​​பயணத்தைத் தொடங்கும் முன்பே கட்டணத்தை முடிவு செய்துகொள்ள வேண்டும் அல்லது கைகலப்பு போன்ற சூழலை உருவாக்காமல் அதற்கான கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தாக்குதலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரின் பெயர் சேதன் என்று தெரிய வந்துள்ளது. அவருடன் சண்டையிட்ட பெண்கள் இரண்டு பேரும் சலூன் ஒன்றில் பணியாற்றி வந்தனர். அவர்கள் சண்டையிட்டுக்கொண்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவரை போலீஸார் அழைத்து விசாரித்தனர்.

இதில் பெண்கள் இரண்டு பேரும் குடிபோதையில் இருந்ததாகவும், அவர்கள் ஆட்டோவில் பயணம் செய்துவிட்டு கட்டணம் கொடுக்க மறுத்ததாகவும், அவர்கள்தான் முதலில் தாக்கியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அப்பெண்களை அழைத்து போலீஸார் விசாரித்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முதலைகள் நிறைந்த ஆற்றில் 25 கி.மீ நீச்சல் - 75 வயது பாட்டியின் உயிர் தப்பிப்பதற்கானப் போராட்டம்!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 75 வயதான கேஷி தலாய்.தன் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர், சனிக்கிழமை இரவு வழக்கம்போல குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், வீட்டின் அருகி... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்திற்கு மசூதி இடிப்பு: லத்தி சார்ஜ், கண்ணீர் புகைக்குண்டால் கூட்டத்தை கலைத்த போலீஸார்

மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாஹி மசூதியை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த போராட்டத்தில் கல் வீசப்பட்டது. அங்குள்ள் கந்தல் சதுக்கத்தில் இருந்து கோபால் மந்திர்... மேலும் பார்க்க

`குண்டர்களுடன் வந்து கமிஷன் கேட்டார்' - மோசமான சாலையை வீடியோ எடுத்தவரை அடித்த டெல்லி அமைச்சர்

டெல்லியில் நேற்று திலக் நகர் பகுதியில் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா அங்குள்ள திலக் நகர் பகுதியில் பழுதடைந்த சாலையை பார்வையிட வந்தார். அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை மிகவும் மோச... மேலும் பார்க்க

மதுபானக்கடைக்குள் நுழைந்து அரை பாட்டில் மதுவை குடித்து போதையில் உறங்கிய குரங்கு - திகைத்த மக்கள்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் நுழைந்த ஒரு குரங்கு, அங்கிருந்த வோட்கா பாட்டிலை திறந்து அரை பாட்டில் மதுவைச் சாவகாசமாக குடித்துவிட்டு, அங்கேயே மயங்கி விழுந்து தூங்கிவிட்டது.... மேலும் பார்க்க

KBC 18: மும்பைக்கு அமிதாப் பச்சனை பார்க்க வந்ததாக கூறிய அஜ்மல் கசாப்? - வழக்கறிஞர் சொன்ன தகவல்!

பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2008ம் ஆண்டு கடல் மார்க்கமாக மும்பைக்குள் நுழைந்து இரண்டு நாட்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் பிடிபட்டான். அவன் மீதா... மேலும் பார்க்க

“அவங்க விரும்பிய மகன் Gemini தான்”- அம்மாவின் AI உரையாடலைப் பகிர்ந்து நெகிழ்ந்த மகன்! Viral Video

“WhatsApp-ல Status எப்படி வைப்பது?” என்று அம்மா கேட்க... பக்கத்தில் மகன் இருந்திருந்தால், “இதை இப்படிப் பண்ணுங்கம்மா” என்று சொல்லியிருப்பார். ஆனால், இங்கே அம்மாவுக்குக் கற்றுக்கொடுத்தது ஒரு AI!AI chat... மேலும் பார்க்க