செய்திகள் :

`குண்டர்களுடன் வந்து கமிஷன் கேட்டார்' - மோசமான சாலையை வீடியோ எடுத்தவரை அடித்த டெல்லி அமைச்சர்

post image

டெல்லியில் நேற்று திலக் நகர் பகுதியில் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா அங்குள்ள திலக் நகர் பகுதியில் பழுதடைந்த சாலையை பார்வையிட வந்தார். அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை மிகவும் மோசமாக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.ஜர்னைல் சிங் இது குறித்து புகார் செய்து இருந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட சாலையை பார்வையிட வந்தபோது எம்.எல்.ஏ.ஜர்னைல் சிங்கும் தனது ஆதரவாளர்கள் சிலருடன் சம்பவ இடத்திற்கு வந்தார். அங்கு பொதுமக்கள் சாலை மிகவும் மோசமான தரத்துடன் போடப்பட்டு இருப்பதாக புகார் செய்தனர். நிகழ்வுகளை எம்.எல்.ஏ.ஜர்னைல் சிங்குடன் வந்திருந்த ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்துகொண்டிருந்தார்.

இதனை பார்த்து டென்சன் ஆன அமைச்சர் பர்வேஷ் வர்மா மொபைல் போனில் வீடியோ எடுத்த வாலிபரை அடித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சருடன் அங்கிருந்தவர்கள் கடுமையாக வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர். இதனால் அங்கு எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்த நிலையில், பர்வேஷ் வர்மா அங்கிருந்து வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

சாஹிப் சிங்

அமைச்சரின் நிகழ்வுகளை வீடியோ எடுத்து அடிபட்ட நபரின் பெயர் சாஹிப் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து சாஹிப் சிங் கூறுகையில் "எம்.எல்.ஏ. ஜர்னைல் சிங்கின் அறிவுறுத்தலின் பேரில், அமைச்சரின் ஆய்வை நான் நேரலை வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தேன். அமைச்சர் உட்பட யாரையும் நான் ஒருபோதும் தரக்குறைவாகப் பேசவில்லை. ஜர்னைல் சிங்கின் இன்ஸ்டாகிராம் கணக்கில் நான் பதிவு செய்த அந்த நேரலை வீடியோவில் முழு உரையாடலையும் நீங்கள் தெளிவாகக் கேட்கலாம்," என்று அவர் கூறினார்.

அமைச்சரின் இந்த செயலுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.ஜர்னைல் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் அடித்தது குறித்து அமைச்சர் பர்வேஷ் வர்மா எக்ஸ்' (X) தளத்தில் வெளியிட்ட காணொளியில்,'' ஜர்னைல் சிங் முன்னதாகவே தரம் குறைந்த சாலை கட்டுமானம் குறித்துப் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அவர் அந்த இடத்திற்குச் சென்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-வையும் தன்னுடன் வருமாறு கேட்டுக்கொண்டார். இருப்பினும், ஜர்னைல் சிங் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களை அந்த இடத்திற்கு அழைத்து வந்ததாகவும், அவர்கள் தன்னையும் தனது குடும்பத்தினரையும் அவதூறாகப் பேசியதாகவும் வர்மா குற்றம் சாட்டினார்.

ஜர்னைல் சிங்கை மூன்று முறை அழைத்த பிறகு அவர் குண்டர்களை அழைத்து வந்து வாக்குவாதம் செய்தார். அவர் குண்டர்களுடன் சேர்ந்து, அவதூறான மற்றும் அநாகரீகமான வார்த்தைகளை கையாண்டு, வன்முறையில் ஈடுபட்டார். வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதே எனது ஒரே நோக்கம், அதற்கு யாராவது தடுத்தால், நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்," என்று அவர் மேலும் கூறினார்.

அதோடு ஜர்னைல் சிங் பொதுப்பணித்துறை பொறியாளர்களை அணுகி கமிஷன் கேட்டார். இதனை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஒப்பந்ததாரரைச் சந்திக்கவும் அவரிடமிருந்து கமிஷன் பெறவும் பொதுப்பணித் துறை அதிகாரிகளை வற்புறுத்தி வருகிறார். அந்தப் பொறியாளர் சட்டமன்ற உறுப்பினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும்" அவர் கூறினார்.

மதுபானக்கடைக்குள் நுழைந்து அரை பாட்டில் மதுவை குடித்து போதையில் உறங்கிய குரங்கு - திகைத்த மக்கள்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் நுழைந்த ஒரு குரங்கு, அங்கிருந்த வோட்கா பாட்டிலை திறந்து அரை பாட்டில் மதுவைச் சாவகாசமாக குடித்துவிட்டு, அங்கேயே மயங்கி விழுந்து தூங்கிவிட்டது.... மேலும் பார்க்க

KBC 18: மும்பைக்கு அமிதாப் பச்சனை பார்க்க வந்ததாக கூறிய அஜ்மல் கசாப்? - வழக்கறிஞர் சொன்ன தகவல்!

பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2008ம் ஆண்டு கடல் மார்க்கமாக மும்பைக்குள் நுழைந்து இரண்டு நாட்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் பிடிபட்டான். அவன் மீதா... மேலும் பார்க்க

“அவங்க விரும்பிய மகன் Gemini தான்”- அம்மாவின் AI உரையாடலைப் பகிர்ந்து நெகிழ்ந்த மகன்! Viral Video

“WhatsApp-ல Status எப்படி வைப்பது?” என்று அம்மா கேட்க... பக்கத்தில் மகன் இருந்திருந்தால், “இதை இப்படிப் பண்ணுங்கம்மா” என்று சொல்லியிருப்பார். ஆனால், இங்கே அம்மாவுக்குக் கற்றுக்கொடுத்தது ஒரு AI!AI chat... மேலும் பார்க்க

`பேய், தற்கொலை, மாயம்'-மாணவி பாலியல் வன்கொடுமை வதந்தி; நள்ளிரவில் சூறையாடப்பட்ட பல்கலைக்கழகம்!

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் (LPU), மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக எழுந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களை தொடர்ந்து மா... மேலும் பார்க்க

'அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு மீண்டும் போர்?' ஈரானின் 7 நிபந்தனைகளை நிராகரித்த டொனால்டு ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடத்திய தாக்குதல் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் ஈரானுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்க ஈரான் துறைமுகத்திற்குள் எந்த கப்பல... மேலும் பார்க்க

'பெங்களூரு வரும் MLA-க்கள் இருதிருமணம் செய்து கொள்கிறார்கள்' - முதல்வர் சிவ்குமார் சர்ச்சை பேச்சு

பெங்களூருவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்து சட்டப்பேரவையில் கர்நாடகா முதல்வர் சிவக்குமார் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் சட்டமன்றத்தில்,''பெங்களூரு வரும் மக்கள் பெங்கள... மேலும் பார்க்க