செய்திகள் :

நெல்லை 'அன்புச் சுவர்': அன்பைப் பகிர்கிறோம்... `பொறுப்பை'யும் பகிர்வோமே!

post image

குவியும் ஆடைகளும் தயங்கும் மக்களும்: நெல்லை அன்புச் சுவரின் நிலை

“நமக்குத் தேவையில்லாதது, இன்னொருவருக்குத் தேவையாக இருக்கலாம்” என்ற நோக்கில், 2017-ஆம் ஆண்டு அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியால் தொடங்கப்பட்டதுதான் இந்த ‘அன்புச் சுவர்’.

ஆரம்பத்தில் புத்தகங்கள், ஆடைகள் உள்ளிட்ட பயனுள்ள பொருட்கள் இங்கு வைக்கப்பட்டன. இன்று பெரும்பாலும் ஆடைகள் மட்டுமே வைக்கப்படுகின்றன. இன்றும் பலர் அவற்றை எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது திருநெல்வேலி ஜங்ஷன் பெரியார் பேருந்து நிலையம் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி அருகே என இரண்டு இடங்களில் இந்த அன்புச் சுவர் இயங்கி வருகிறது.

மாவட்ட ஆட்சியரால் தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இத்திட்டத்தில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையில்லாத ஆடைகள் மற்றும் பொருட்களைத் தொடர்ந்து வைத்துச் செல்கின்றனர். ஆனால், அவற்றை ஒழுங்குபடுத்தவும், இடத்தை முறையாகப் பராமரிக்கவும் ஆட்கள் இல்லாததால், பொருட்கள் குவிந்து கிடக்கும் நடைமுறைச் சிக்கல் ஏற்படுகிறது.

சாலையோரம் ஆடைகள் குவிந்து தூசி படிந்து இருப்பதால், அங்கிருந்து தேவையான ஆடைகளை எடுத்துப் பயன்படுத்த மக்கள் தயங்கும் நிலை ஏற்படுகிறது.

பொதுமக்களின் பொறுப்புணர்வும், மாவட்ட நிர்வாகத்தின் சரியான பராமரிப்பும் இணையும்போதுதான் ‘அன்புச் சுவர்’ நோக்கம் முழுமையடையும்.

மதுரை: மும்மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு முதலாவதாக தங்க மோதிரம் வழங்கிய முதல்வர் விஜய்!

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடங்கி இருக்கிறது. திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார் முதலமைச்சர் விஜய்.இதற்கு முன்னதாக மதுரை விமான நிலையத்திலிருந்து, ம... மேலும் பார்க்க

``தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்குவது முதல்வரின் விருப்பம்"- அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல் குமார், மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் நடைபெறும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்க விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,"மதுர... மேலும் பார்க்க

ஹார்முஸ் ஈரானிடம் இல்லையா? எண்ணெய் விலை சொல்லும் உலக சந்தை, முட்டாளா? - அமெரிக்காவை கலாய்த்த ஈரான்

ஈரான் போர் தொடங்கி ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கப்பட்டதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயேதான் பெரும்பாலும் இருக்கிறது. அவ்வப்போது உச்சத்தை வேறு தொட்டிருக்கிறது. ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு,... மேலும் பார்க்க

BB TAMIL 10: அடாவடியாக அசரடித்த முனி; பாலின சமத்துவத்துடன் க்ரூப்பிஸம் - நடந்தது என்ன?|சுரேஷ் கண்ணன்

BB TAMIL 10: 3rd WEEKபிக் பாஸ் சீசன் பத்து இன்னமும் கூட சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் மாறவில்லை. ஆகவே என்னவாவது அதிரடியான மாற்றங்களைச் செய்து பிக்அப் ஆக வைக்கும் முயற்சியில் பிக் பாஸ் டீம் இருக்கிறது.... மேலும் பார்க்க

டெல்லியில் இளைஞரை அறைந்த பாஜக அமைச்சர்: "வாக்களர்களுக்கு அஞ்சாத அதிகார முகம் இது" - ராகுல் காந்தி

டெல்லியைச் சேர்ந்த அமைச்சர் பர்வேஷ் வர்மா. இவரிடம் இளைஞர் ஒருவர் மோசமான சாலைகள் குறித்துக் கேள்வி கேட்டபோது, அந்த இளைஞரை பர்வேஷ் கன்னத்தில் அறைந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.அமைச... மேலும் பார்க்க

"தங்கத்தை விட தரமான பால் தான் தேவை.!"- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து தமிழிசை

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் சுமார் 1.28 லட்சம் குழந்தைகளுக்கு இன்று (செப். 28) தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. ஜூன் 22 முதல் செப்.27வரை பிறந்த குழந்தைகளுக்கு 102 மையங்கள் மூலம் தங்க மோதிரம்... மேலும் பார்க்க