மதுரை: மும்மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு முதலாவதாக தங்க மோதிரம் வழங்கிய முதல்வர் வ...
டெல்லியில் இளைஞரை அறைந்த பாஜக அமைச்சர்: "வாக்களர்களுக்கு அஞ்சாத அதிகார முகம் இது" - ராகுல் காந்தி
டெல்லியைச் சேர்ந்த அமைச்சர் பர்வேஷ் வர்மா. இவரிடம் இளைஞர் ஒருவர் மோசமான சாலைகள் குறித்துக் கேள்வி கேட்டபோது, அந்த இளைஞரை பர்வேஷ் கன்னத்தில் அறைந்திருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அமைச்சரின் இந்தச் செயலுக்கு எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,
“டெல்லி அரசைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர் இளைஞர் ஒருவரை அறையும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
दिल्ली की BJP सरकार के एक मंत्री वीडियो में एक नौजवान को थप्पड़ मारते दिख रहे हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) September 27, 2026
उसका गुनाह? वो वीडियो बना रहा था।
मंत्री के सामने सड़क खोदकर दिखाई जा रही थी, और उसके हाथ में कैमरा था।
ये उस सत्ता का चेहरा है जिसे अब वोटर से डर लगना बंद हो गया है।
सड़क पर सवाल पूछो - थप्पड़।…
அவர் செய்த குற்றம் என்ன? அவர் வீடியோ எடுத்தார். அவ்வளவு தான்.
அமைச்சருக்கு முன்னால் சாலை தோண்டப்பட்டுக் கொண்டிருந்ததைத்தான் அவர் தன் கேமராவில் பதிவு செய்தார்.
வாக்காளர்களுக்கு அஞ்சாத அதிகாரத்தின் முகம் இது.
தெருவில் கேள்வி கேட்டால் – அறை.
வினாத்தாள் கசிவு பற்றிக் கேள்வி கேட்டால் – தடியடி.
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் – மைக் அணைப்பு.
தேர்தல் மூலம் தங்களை மாற்ற முடியாது என்ற பயம் இல்லாததால்தான் இவர்கள் இதைச் செய்கிறார்கள்.
வாக்குத் திருட்டு தேர்தல் முடிவை மட்டுமல்ல, அதன்பின் வரும் தலைக்கனத்தையும் தான் சேர்த்து தருகிறது.
வெற்றியைத் தானே நிச்சயித்துக் கொள்ளும் அரசாங்கத்திற்கு மக்களின் சம்மதம் தேவைப்படுவதில்லை. அது மக்களின் மௌனத்தையும் குருட்டுத்தனமான பக்திப்பற்றை மட்டுமே கேட்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.













