செய்திகள் :

`எங்களை யாரும் பாலியல் கொடுமை செய்யவில்லை; எல்லாம் கட்டுக்கதை'- பஞ்சாப் பல்கலை., மாணவிகள் விளக்கம்

post image

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பக்வரா என்ற இடத்தில் இருக்கும் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரு மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அதில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்தி வெளியானது. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பல்கலைக்கழகத்தில் தீவைக்கப்பட்டது. பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டது. இதனால் அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்கள் தங்களுக்கு அது போன்ற எதுவும் நடக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் மோனிகா குலாட்டி மாணவிகளிடம் பேசும் வீடியோவை வெளியிட்டார்.

டாக்டர் குலாட்டி, மறுப்பு தெரிவித்த மாணவிகள்

அந்த வீடியோவில், பெண்கள் விடுதி 3-ன் அறை எண். 504 இல் வசிக்கும் மூன்று மாணவிகளைக் குறிப்பிட்டார். அவர்கள்தான் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த அறையில் வசிக்கும் மாணவிகள் அத்தகைய சம்பவம் எதுவும் அங்கு நடக்கவில்லை என்று மறுத்தனர்.

வீடியோவில், டாக்டர் குலாட்டி, ``விடுதி 3ல் உள்ள அறை எண் 504 இல் வசிக்கும் பெண்கள் எங்களிடம் கூறியதை நீங்கள் கேட்க விரும்புகிறேன்" என்று கூறினார். முதல் மாணவி, "நாங்கள் அறை எண் 504 இல் வசிப்பவர்கள். எங்கள் அறையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. நாங்கள் கடந்த இரண்டு மாதங்களாக இங்கு வசிக்கிறோம், தயவுசெய்து, போலீஸார் மற்றும் மாணவர்களே, எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். எங்கள் அறையில் அப்படி எதுவும் நடக்கவில்லை, எங்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாம் கட்டுக்கதை" என்று கூறினார்.

இரண்டாவது மாணவி கூறுகையில், "இன்று நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம், மேலும் சிக்கலை எதிர்கொண்டால், நாங்கள் எங்கள் பெற்றோரிடம் இதனை தெரிவிக்க வேண்டிவரும். தயவுசெய்து எங்களை துன்புறுத்தாதீர்கள்." என்று தெரிவித்தார். மூன்றாமவர், "போலீஸார் எங்கள் அறைக்கு திரும்பத் திரும்ப வருவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், நாங்கள் எங்கள் பெற்றோரை அழைப்போம்." என்று தெரிவித்தார். டாக்டர் குலாட்டி மேலும் கூறுகையில்,''நடந்துகொண்டிருக்கும் போராட்டங்கள் மற்றும் அமைதியின்மை மற்றும் இட்டுக்கட்டப்பட்ட வதந்திகள் மூலம் பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த சதி நடக்கிறது. இதில் சமூக விரோத சக்திகள் மற்றும் தனிப்பட்ட நலன்களைக் கொண்ட நபர்கள் இதன் பின்னணியில் உள்ளனர்," என்று அவர் கூறினார்.

அதேசமயம் ஒரு தனி வீடியோவை மூன்று மாணவிகளும் வெளியிட்டுள்ளனர். அதில் மூன்று மாணவிகளும் என்ன சொல்ல வேண்டும் என்பது குறித்து தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், அவர்களின் வாக்குமூலம் தங்களுக்குத் தெரியாமலோ அல்லது ஒப்புதல் இல்லாமலோ பயன்படுத்தப்பட்டதாகக் கூறினர். பல்கலைக்கழகத்தில் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட தொழிலாளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும், அந்த மாணவியை பல்கலைக்கழக நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பியதாகவும், அம்மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும் செய்தி வெளியானது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே இது வதந்தி என்று பல்கலைக்கழகம் கூறிக்கொண்டிருக்கிறது.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை? பரவிய தகவல்; வெடித்த கலவரம்! - என்ன நடந்தது?

பஞ்சாப்பில் உள்ள பக்வாராவில் இருக்கிறது லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழக மாணவர்களிடையே சமூக வலைதளப் பதிவு ஒன்று அதிகம் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. அதில் அந்தப் பல்கலைக்கழக ஹாஸ்டலில் ப... மேலும் பார்க்க

எம்.டி.எம்.ஏ வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வந்த ஆசிரியை; காவல் நிலைய வளாகத்தில் கத்தியால் குத்திய நபர்!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் எம்.டி.எம்.ஏ விற்பனை செய்த வழக்கில் பேராம்பிறா பி.ஆர்.சி சிறப்பு பள்ளி ஆசிரியை கீர்த்தனா, செறுவளூர் பள்ளி ஆசிரியை காவ்யா, கீர்த்தனாவுடன் சிறப்புப் பள்ளியில... மேலும் பார்க்க

’சினிமாவை மிஞ்சிய சேஸிங்’-கார் மேற்கூரையில் 40கி.மீ தொங்கியபடி சென்று கடத்தல் கும்பலை பிடித்த போலீஸ்

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்ட காவல் துறையினர், இன்று காலை வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: "15 நாளா மகளைக் காணோம்; சீக்கிரம் கண்டுபுடிச்சு கொடுங்கய்யா" - கதறும் பெற்றோர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வசிக்கும் ராஜூ - நிர்மலா தம்பதியின் 15 வயது மகள் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு அப்பகுதியிலுள்ள அரசு ஐ.டி.ஐ-யில் முதலாமாண்டு படித்து வந்தார். மாணவி மாயம் கடந்த 10 ஆம் ... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்; கணித ஆசிரியர் போக்சோ-வில் கைது!

அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணித ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ வழக்குபாப்பாரப்பட்டி ப... மேலும் பார்க்க

சிலிண்டரை மாற்றித்தர சொன்ன பாட்டி; கண்ணில் மிளகாய் பொடித் தூவி இரண்டரை பவுன் செயினை பறித்த நபர்!

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகில் உள்ள காயிதே மில்லத் தெருவில் வசித்து வருகிறார் 80 வயதான முத்தம்மாள். கணவர் முத்துசாமி உயிரிழந்த நிலையில், முத்தம்மாள் தனியாகவே வாழ்ந்து வருகிறார். வீட்டில் சமையலுக்... மேலும் பார்க்க