செய்திகள் :

’சினிமாவை மிஞ்சிய சேஸிங்’-கார் மேற்கூரையில் 40கி.மீ தொங்கியபடி சென்று கடத்தல் கும்பலை பிடித்த போலீஸ்

post image

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்ட காவல் துறையினர், இன்று காலை வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். காரின் பின்புறத்தில் மூட்டை மூட்டையாக பொருட்கள் இருப்பதைப் பார்த்த உதவி ஆய்வாளர் விக்னேஷ், அவற்றை சோதனையிட முயன்றார். அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், போலீஸாரைத் தள்ளிவிட்டு காரின் கதவுகளை மூடி, திடீரென காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

வேல்முருகன்
வேல்முருகன்

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை காவலர் வேல்முருகன், உடனடியாக ஓடும் காரின் மேற்கூரையில் பாய்ந்து பிடித்துக் கொண்டார். ஆனால், போலீஸ் காரின் மீது இருப்பதையும் பொருட்படுத்தாமல் கடத்தல்காரர்கள் காரை தொடர்ந்து வேகமாக ஓட்டிச் சென்றனர். விளாங்குறிச்சி, காளப்பட்டி, சித்ரா வழியாக கணியூர் சுங்கச்சாவடியை நோக்கி கார் சென்றது. அங்கு ஃபாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்திவிட்டு, தடுப்புகளை கடந்து கார் மீண்டும் வேகமாகச் சென்றுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கணியூர் போலீஸார் மற்றும்  ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் காரைத் துரத்திச் சென்றனர். மேலும், அவிநாசி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவிநாசி போலீஸாரும் காரை எதிர்நோக்கி விரைந்தனர்.

காரில் தொங்கியபடி சென்ற போலீஸ்
காரில் தொங்கியபடி சென்ற போலீஸ்

கடத்தல்காரர்கள் சுமார் 40 கி.மீ. தூரம் சென்ற நிலையில், அவிநாசி அன்னபூர்ணா ஹோட்டல் அருகே ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் காரைச் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த இருவர் தப்பியோடிய நிலையில், ஒருவரை போலீஸார் பிடித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் தப்பியோடிய மற்ற இருவரையும் அவிநாசி போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாபு தாரா, ராஜேஷ், சுரேஷ் என்பதும், பெங்களூருவில் இருந்து சுமார் 300 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையே, காரின் மேற்கூரையில் தலைமை காவலர் வேல்முருகன் ஆபத்தான நிலையில் தொங்கியபடி செல்வதைப் பார்த்த வாகன ஓட்டிகள், தங்களது செல்போன்களில் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஆபத்தான நிலையில் தொங்கியபடி சென்று கடத்தல்காரர்களை பிடிக்க உதவிய தலைமை காவலர் வேல்முருகனின் துணிச்சலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி: "15 நாளா மகளைக் காணோம்; சீக்கிரம் கண்டுபுடிச்சு கொடுங்கய்யா" - கதறும் பெற்றோர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வசிக்கும் ராஜூ - நிர்மலா தம்பதியின் 15 வயது மகள் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு அப்பகுதியிலுள்ள அரசு ஐ.டி.ஐ-யில் முதலாமாண்டு படித்து வந்தார். மாணவி மாயம் கடந்த 10 ஆம் ... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்; கணித ஆசிரியர் போக்சோ-வில் கைது!

அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணித ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ வழக்குபாப்பாரப்பட்டி ப... மேலும் பார்க்க

சிலிண்டரை மாற்றித்தர சொன்ன பாட்டி; கண்ணில் மிளகாய் பொடித் தூவி இரண்டரை பவுன் செயினை பறித்த நபர்!

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகில் உள்ள காயிதே மில்லத் தெருவில் வசித்து வருகிறார் 80 வயதான முத்தம்மாள். கணவர் முத்துசாமி உயிரிழந்த நிலையில், முத்தம்மாள் தனியாகவே வாழ்ந்து வருகிறார். வீட்டில் சமையலுக்... மேலும் பார்க்க

சிங்கப்பூர் துறைமுகத்தில் விபத்து; பலியான ராணிப்பேட்டை இளைஞரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஸ்திரி மணி. இவரது மகன் வினோத் (வயது 33). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலை... மேலும் பார்க்க

`கிரிப்டோ’ முதலீடு; பேராசையால் ஏமாற்றமடைந்த இன்ஜினீயர்; தூண்டில் போட்ட மோசடிப் பேர்வழி கைது!

வேலூர் மாவட்டம், விருப்பாட்சிபுரம் பலவன்சாத்துக்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 29). பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினீயராக வேலைச் செய்து வரும் பிரதீப்குமாருக்கு வாட்ஸ்-அப் மூலம... மேலும் பார்க்க

பீகார்: சுற்றுலா மையத்தில் பெண்ணைக் காலணியால் தாக்கிய கும்பல்; அதிர்ச்சி வீடியோ... போலீஸ் விசாரணை!

பீகாரில் அடிக்கடி பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் அது போன்ற இரண்டு சம்பவங்கள் நடந்தன. தற்போது மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. பீகாரின் சுற்றுலா மையம... மேலும் பார்க்க