செய்திகள் :

எம்.டி.எம்.ஏ வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வந்த ஆசிரியை; காவல் நிலைய வளாகத்தில் கத்தியால் குத்திய நபர்!

post image

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் எம்.டி.எம்.ஏ விற்பனை செய்த வழக்கில் பேராம்பிறா பி.ஆர்.சி சிறப்பு பள்ளி ஆசிரியை கீர்த்தனா, செறுவளூர் பள்ளி ஆசிரியை காவ்யா, கீர்த்தனாவுடன் சிறப்புப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த நீஷ்மா (30) ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாகப் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்து, பல லட்சம் ரூபாய் அளவுக்குப் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதை போலீஸார் கண்டறிந்தனர். இந்தக் குழுவுக்கு கீர்த்தனா தலைவியாகச் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, கீர்த்தனாவை ஆசிரியர் பணியில் இருந்து பி.ஆர்.சி நிர்வாகம் அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது. ​இதற்கிடையே கீர்த்தனாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

கத்தியால் குத்திய ஜினீஷ்

இவ்வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்த கீர்த்தனா, நிபந்தனையின்படி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். வழக்கம்போல காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக நேற்று காலை 10 மணியளவில் வடகரா காவல் நிலையத்திற்குச் சென்றார். அப்போது காவல் நிலைய வளாகத்திலேயே வைத்து, பேருந்து ஓட்டுநரான ஜினீஷ் என்பவர் கீர்த்தனாவைத் திடீரென வழிமறித்துக் கத்தியால் சரமாரியாகக் குத்தினார்.

​கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து இடங்களில் பலத்த குத்துக் காயமடைந்த கீர்த்தனா, உடனடியாக மீட்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கீர்த்தனாவை கத்தியால் குத்திய  ஜினீஷை போலீஸார் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.டி.எம்.ஏ வழக்கில் கைதான ஆசிரியை கீர்த்தனா

பேராம்பிறா தண்டோறப்பாறை தானியோட்டும்மல் பகுதியைச் சேர்ந்த ஜினீஷும் கீர்த்தனாவும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். போதைப்பொருள் வழக்கில் கைதாகி கீர்த்தனா சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த பிறகு ஜினீஷுடன் தொடர்பை முற்றிலும் துண்டித்துவிட்டு ஒதுங்கி வாழ்ந்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரைக் கொல்லும் நோக்கத்துடனேயே கத்தியால் குத்தியதாகவும் ஜினீஷ் போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடத்தப்பட்ட இந்தக் கொலைவெறித் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’சினிமாவை மிஞ்சிய சேஸிங்’-கார் மேற்கூரையில் 40கி.மீ தொங்கியபடி சென்று கடத்தல் கும்பலை பிடித்த போலீஸ்

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்ட காவல் துறையினர், இன்று காலை வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: "15 நாளா மகளைக் காணோம்; சீக்கிரம் கண்டுபுடிச்சு கொடுங்கய்யா" - கதறும் பெற்றோர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வசிக்கும் ராஜூ - நிர்மலா தம்பதியின் 15 வயது மகள் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு அப்பகுதியிலுள்ள அரசு ஐ.டி.ஐ-யில் முதலாமாண்டு படித்து வந்தார். மாணவி மாயம் கடந்த 10 ஆம் ... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்; கணித ஆசிரியர் போக்சோ-வில் கைது!

அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணித ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ வழக்குபாப்பாரப்பட்டி ப... மேலும் பார்க்க

சிலிண்டரை மாற்றித்தர சொன்ன பாட்டி; கண்ணில் மிளகாய் பொடித் தூவி இரண்டரை பவுன் செயினை பறித்த நபர்!

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகில் உள்ள காயிதே மில்லத் தெருவில் வசித்து வருகிறார் 80 வயதான முத்தம்மாள். கணவர் முத்துசாமி உயிரிழந்த நிலையில், முத்தம்மாள் தனியாகவே வாழ்ந்து வருகிறார். வீட்டில் சமையலுக்... மேலும் பார்க்க

சிங்கப்பூர் துறைமுகத்தில் விபத்து; பலியான ராணிப்பேட்டை இளைஞரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஸ்திரி மணி. இவரது மகன் வினோத் (வயது 33). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலை... மேலும் பார்க்க

`கிரிப்டோ’ முதலீடு; பேராசையால் ஏமாற்றமடைந்த இன்ஜினீயர்; தூண்டில் போட்ட மோசடிப் பேர்வழி கைது!

வேலூர் மாவட்டம், விருப்பாட்சிபுரம் பலவன்சாத்துக்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 29). பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினீயராக வேலைச் செய்து வரும் பிரதீப்குமாருக்கு வாட்ஸ்-அப் மூலம... மேலும் பார்க்க