செய்திகள் :

"தென்னிந்தியத் திரைப்படங்களை உலகளவில் சந்தைப்படுத்துவோம்"- திரைப்பட அகாடமி தலைவர் டிஸ்கோ ரவீந்திரன்!

post image

பிரபல நடிகரும் சர்வதேசத் திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளருமான ரவீந்திரனை, மாநிலத் திரைப்பட அகாடமியின் புதிய தலைவராக கேரள அரசு நியமித்துள்ளது. 1980-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் ரவீந்திரன். 1980-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஒரு தலை ராகம்’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தனது தனித்துவமான நடன அசைவுகளால் 'டிஸ்கோ ரவீந்திரன்' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவர், பின்னர் திரைத்துறை சார்ந்த ஆய்வுகள் மற்றும் சர்வதேசத் திரைப்பட விழாக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். இது குறித்து ரவீந்திரன் கூறுகையில், "​பப்பயுடே சொந்தம் அப்பூஸ் திரைப்படத்திற்குப் பிறகு, சினிமா துறையில் அடுத்தகட்டமாக வேறு என்ன செய்யலாம் என்று சிந்தித்தேன். சினிமா தொடர்பான கல்வியைப் பயிற்றுவிக்கத் தொடங்கினேன். பின்னர் திரைப்பட விழாக்களையே ஏன் நாம் பரவலாக நடத்தக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அதன்படி, கல்லூரி வளாகங்கள் தோறும் நேரில் சென்று மாணவர்களுக்குத் தரமான உலகத் திரைப்படங்களைத் திரையிட்டுக் காட்டினோம். கேரளாவில் மட்டுமே சுமார் 250 கல்லூரிகளுக்குச் சென்று சினிமாக்களைத் திரையிட்டிருக்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகளில் தங்கி, அனைத்து வளைகுடா நாடுகளிலும் திரைப்பட விழாக்களை ஒருங்கிணைத்து நடத்தினேன். இதற்கிடையில், ‘இடுக்கி கோல்ட்’ போன்ற குறிப்பிட்ட சில திரைப்படங்களிலும் நடித்தேன்.

மலையாள திரைப்பட அகாடமி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரவீந்திரன்

மாநிலத் திரைப்பட அகாடமியின் தலைவர் பதவியை எதிர்பார்த்தேன் என்பதை விட, அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று மனதார விரும்பினேன். திரைப்பட அகாடமி என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒரு களம். 2016-ம் ஆண்டுக்கு முன்பு அகாடமியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. அப்போது காட்சி ஊடகக் கல்வி மற்றும் திரைப்பட எழுத்தறிவுக்கான கமிட்டியின் தலைவராகவும், பிலிம் மார்க்கெட் பொறுப்பாளராகவும் செயல்பட்டேன். அப்போது திரைப்படத்துறை சார்ந்த பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்த நினைத்திருந்தும், எதிர்பார்த்தபடி முழுமையாகச் செய்ய முடியவில்லை. அதனால் இப்பதவியை ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

டிஸ்கோ ரவீந்திரன்

புதிய கமிட்டி பொறுப்பேற்பதற்கு முன்பே குறும்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கான திரைப்பட விழா வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டது. திரைப்பட அகாடமிக்குக்கு எனச் சிறந்ததொரு குழு செயல்பட்டு வருகிறது. தலைவர் என்ற முறையில் நான் சிறப்பாக வழிநடத்துவேன். அதேபோல், ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் உறுதியான நம்பிக்கை கொண்ட அரசுதான் இங்குள்ளது. அரசின் கொள்கைகளுடன் முழுமையாக இணைந்து செயல்படுவேன். மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் சினிமாவை முறையாகக் கொண்டு சேர்க்கும் வகையிலான சிறந்த திரைப்பட எழுத்தறிவுத் திட்டத்தை உருவாக்குவேன். மலையாளத் திரைப்படங்களை அதிகளவில் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்குக் கொண்டு செல்ல தீவிர முயற்சி எடுக்கப்படும். இதற்காகப் புதியதொரு மார்க்கெட்டிங் கட்டமைப்பைக் கண்டறிய வேண்டும். வெளிநாட்டுத் திரைப்படங்களை இங்கு கொண்டு வந்து காட்சிப்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல், தென்னிந்தியத் திரைப்படங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து நமது படங்களை உலகளவில் சந்தைப்படுத்துவதற்கான சர்வதேசத் தளத்தை உருவாக்குவதே எனது முக்கிய இலக்கு" என்றார்.

``அம்பிகா இப்படியெல்லாம் பொறாமைப்பட்டால் நான் என்ன செய்வது?" - வெடித்து பேசும் நடிகை ராதா

1980-களில் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த அம்பிகா - ராதா சகோதரிகள், அண்மைக்காலமாக சொத்து விவகாரத்தில், ஒருவரையொருவர் குற்றம்சாட்டி மாறி மாறி புகார் அளித்துவருவது திரையுலகைத் தாண்டி... மேலும் பார்க்க

₹2,500 கீபோர்டில் முளைத்த `இசை' கனவு... ஹிப் ஹாப் ஆதியின் பாராட்டு - சினிமாவை நோக்கி நகரும் விக்கி!

2015-ல் தொடங்கிய இசைப் பயணம்... ‘என் உயிர் அன்பே’, ‘மனசை ஏன்டி நொறுக்குற’, ‘மை லைஃப் ஃபுல் டேமேஜ்’ எனத் தொடர்ந்து, இன்று சினிமாவை நோக்கி நகரும் விக்கி (Vicky).₹2,500-க்கு நண்பர் வாங்கிக் கொடுத்த ஒரு க... மேலும் பார்க்க

What To Watch: 'என்ன விலை', 'மொத ராத்திரி', 'சண்டைக்காரி' - இந்த வாரம் ரிலீஸ்கள் | முழு லிஸ்ட்

வீக் எண்ட் வந்தாச்சு. ஷாப்பிங், அவுட்டிங், தியேட்டர், டின்னர் என இந்நேரத்திற்குப் பிளான் செய்யத் தொடங்கியிருப்பீர்கள்.உங்கள் பிளானிங்கில் கொஞ்சம் உதவி செய்யலாம் என்று இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி... மேலும் பார்க்க

``பாலிவுட் போல மலையாள சினிமாவுக்கு கார்ப்பரேட் இடைத்தரகர்கள் தேவையில்லை!" - பிரித்விராஜ்

இந்தியத் திரையுலகில் மலையாள சினிமா தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்துவருகிறது. மிகக் குறைந்த செலவில் எடுக்கப்படும் கலைப் படங்கள் என்ற பிம்பத்தைத் தாண்டி, பிரமாண்ட பட்ஜெட்டுகளிலும் தரமான படங்... மேலும் பார்க்க

Ramayana: ரன்பீர், சாய் பல்லவி நடிப்பில் ரஹ்மான் இசையில் `ஜெய் ஜெய் ராம்' பாடல் எப்படி இருக்கிறது?

இந்தியத் திரையுலகின் வரலாற்றிலேயே மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் `ராமாயணம்'. `தங்கல்' படப் புகழ் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம் ... மேலும் பார்க்க

வரலாற்றில் முதல்முறை: `தேசிய திரைப்பட விருது விழா' - டெல்லியில் இருந்து குஜராத்திற்கு மாற்றம்?

திரைப்படங்களுக்கான நாட்டின் மிக உயரிய விருது, `தேசிய திரைப்பட விருது'. 2024-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரை... மேலும் பார்க்க