செய்திகள் :

கணவரின் 2வது திருமணத்துக்கு எதிர்ப்பு; ஒன்றரை ஆண்டுக்குப்பின் எலும்புகள் மீட்பு - சிக்கியது எப்படி?

post image

நெல்லை மாவட்டம், கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரும், கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையைச் சேர்ந்த அமராவதி என்பவரும் கடந்த 2008-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவருமே கங்கைகொண்டான் சிப்காட்டில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், தன் மகளைப் பார்ப்பதற்காக அமராவதியின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்கை கொண்டான் வந்துள்ளனர். ஆனால், அங்கு அமராவதி இல்லை.

சுத்தமல்லி காவல் நிலையம்

அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது அவர்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பே வீட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர். தனது மருமகனான மகாராஜனுக்கு போன் செய்து அமராவதி குறித்து கேட்டபோது அமராவதி தன்னுடன் சண்டையிட்டு கோபித்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும், அவள் எங்கு சென்றார் என்பது குறித்து எனக்குத் தெரியாது எனக் கூறியுள்ளாராம். இதனையடுத்து அமராவதியின் தயார் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அமராவதியின் கணவரது செல்போன் அழைப்பு விவரங்களை சேகரித்து அவரது இருப்பிடத்தை அறிந்து அவரை அழைத்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் விசாரணையில், “எனது அத்தை மகளான அகிலா என்பவரை கடந்த 2024-ம் ஆண்டு 2வது திருமணம் செய்து கொண்டேன். அதற்கு அமராவதி கடும் எதிர்ப்பு தெரிவித்து சண்டை போட்டதால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி தகாராறு ஏற்பட்டது. இதனால் முதல் மனைவி  அமராவதியை கொலை செய்ய முடிவெடுத்தேன்.

சுத்தமல்லி காவல் நிலையம்

கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் நாங்கள் வேலை செய்யும் கங்கை கொண்டன் சிப்காட் அருகிலுள்ள பாப்பாங்குளம் விலக்கு பகுதியிலுள்ள கல்குவாரிக்கு அழைத்துச் சென்று கல்குவாரி பள்ளத்தில் தள்ளிவிட்டேன். அதன் பிறகு வேலைக்குச் சென்றுவிட்டேன்.” எனக் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த கல்குவாரி பள்ளத்தில் கிடந்த மண்டை ஓடு, எலும்புத் துண்டுகள், சேலை ஆகியவற்றை மீட்டனர். இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியை கணவனே கொலை செய்து நாடகமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`ரூ.200 சம்பளம்' - போதைப்பொருள் விற்பனை செய்ய 15 வயது சிறுவனை வேலைக்கு வைத்த மும்பை பெண் | அதிர்ச்சி

மும்பையில் சிறுவர்களைக்கூட போதைப்பொருள் விற்பனை செய்ய பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மும்பை தேவ்னார் பகுதியில் இரவு நேரத்தில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவண்டி பக... மேலும் பார்க்க

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை? பரவிய தகவல்; வெடித்த கலவரம்! - என்ன நடந்தது?

பஞ்சாப்பில் உள்ள பக்வாராவில் இருக்கிறது லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழக மாணவர்களிடையே சமூக வலைதளப் பதிவு ஒன்று அதிகம் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. அதில் அந்தப் பல்கலைக்கழக ஹாஸ்டலில் ப... மேலும் பார்க்க

`எங்களை யாரும் பாலியல் கொடுமை செய்யவில்லை; எல்லாம் கட்டுக்கதை'- பஞ்சாப் பல்கலை., மாணவிகள் விளக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பக்வரா என்ற இடத்தில் இருக்கும் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரு மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அதில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும... மேலும் பார்க்க

எம்.டி.எம்.ஏ வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வந்த ஆசிரியை; காவல் நிலைய வளாகத்தில் கத்தியால் குத்திய நபர்!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் எம்.டி.எம்.ஏ விற்பனை செய்த வழக்கில் பேராம்பிறா பி.ஆர்.சி சிறப்பு பள்ளி ஆசிரியை கீர்த்தனா, செறுவளூர் பள்ளி ஆசிரியை காவ்யா, கீர்த்தனாவுடன் சிறப்புப் பள்ளியில... மேலும் பார்க்க

’சினிமாவை மிஞ்சிய சேஸிங்’-கார் மேற்கூரையில் 40கி.மீ தொங்கியபடி சென்று கடத்தல் கும்பலை பிடித்த போலீஸ்

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்ட காவல் துறையினர், இன்று காலை வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: "15 நாளா மகளைக் காணோம்; சீக்கிரம் கண்டுபுடிச்சு கொடுங்கய்யா" - கதறும் பெற்றோர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வசிக்கும் ராஜூ - நிர்மலா தம்பதியின் 15 வயது மகள் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு அப்பகுதியிலுள்ள அரசு ஐ.டி.ஐ-யில் முதலாமாண்டு படித்து வந்தார். மாணவி மாயம் கடந்த 10 ஆம் ... மேலும் பார்க்க