செய்திகள் :

மதுபானக்கடைக்குள் நுழைந்து அரை பாட்டில் மதுவை குடித்து போதையில் உறங்கிய குரங்கு - திகைத்த மக்கள்

post image

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் நுழைந்த ஒரு குரங்கு, அங்கிருந்த வோட்கா பாட்டிலை திறந்து அரை பாட்டில் மதுவைச் சாவகாசமாக குடித்துவிட்டு, அங்கேயே மயங்கி விழுந்து தூங்கிவிட்டது. இது போன்று ஒரு திருடன் செய்தால் அடி-உதை கொடுத்து போலீஸில் ஒப்படைத்து இருக்க முடியும். ஆனால், மது மயக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த அந்த குரங்கை கடைக்காரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. குரங்கு போதையில் உறங்குவதை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தார்களே தவிர, வேறு எதுவும் செய்யவில்லை.

இச்சம்பவம் ராஞ்சியில் உள்ள ஓர்மாஞ்சி சௌக் பகுதியில் நடைபெற்றது. மதுபானக்கடையில் ஊழியர்கள் இருந்தபோது, ​​திடீரென ஒரு குரங்கு உள்ளே நுழைந்தது. ஆரம்பத்தில் ஊழியர்கள் அதை விரட்ட முயன்றதுடன், அதன் கவனத்தைத் திசைதிருப்ப பிஸ்கட்டுகளை சாப்பிட கொடுத்தனர்.

ஆனால், அந்தக் குரங்கு ஒரு வோட்கா பாட்டிலை எடுத்து உடைத்து, அதிலிருந்த மதுவை அருந்தியது. குடித்துவிட்டு சிறிது நேரத்தில், அது மது போதையில் கடையின் உள்ளே இருந்த மதுப்பெட்டியின் மீது படுத்து அப்படியே உறங்கி விட்டது.

குரங்கின் இந்த செயலை கண்டு அங்கிருந்தவர்கள் திகைத்துப் போனார்கள். மது அருந்திவிட்டு கடைக்குள் மயங்கி கிடந்த குரங்கை அங்கே இருந்தவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். அங்கு எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது. அவ்வாறு வைரலான காணொளிகளில் வாடிக்கையாளர்கள் கடையில் மது வாங்க வருவதையும், குரங்கு பின்னால் தூங்கிக்கொண்டிருப்பதையும் காணமுடிந்தது. கடைக்காரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, மது போதையில் உறங்கிய குரங்கு கடந்த சில நாட்களாக அப்பகுதியில் வீசியெறியப்பட்ட காலி பாட்டில்களில் எஞ்சியிருக்கும் மதுவை நக்கிக் குடித்து சுவை கண்டதாக தெரிவித்தனர்.

KBC 18: மும்பைக்கு அமிதாப் பச்சனை பார்க்க வந்ததாக கூறிய அஜ்மல் கசாப்? - வழக்கறிஞர் சொன்ன தகவல்!

பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2008ம் ஆண்டு கடல் மார்க்கமாக மும்பைக்குள் நுழைந்து இரண்டு நாட்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் பிடிபட்டான். அவன் மீதா... மேலும் பார்க்க

“அவங்க விரும்பிய மகன் Gemini தான்”- அம்மாவின் AI உரையாடலைப் பகிர்ந்து நெகிழ்ந்த மகன்! Viral Video

“WhatsApp-ல Status எப்படி வைப்பது?” என்று அம்மா கேட்க... பக்கத்தில் மகன் இருந்திருந்தால், “இதை இப்படிப் பண்ணுங்கம்மா” என்று சொல்லியிருப்பார். ஆனால், இங்கே அம்மாவுக்குக் கற்றுக்கொடுத்தது ஒரு AI!AI chat... மேலும் பார்க்க

`பேய், தற்கொலை, மாயம்'-மாணவி பாலியல் வன்கொடுமை வதந்தி; நள்ளிரவில் சூறையாடப்பட்ட பல்கலைக்கழகம்!

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் (LPU), மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக எழுந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களை தொடர்ந்து மா... மேலும் பார்க்க

'அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு மீண்டும் போர்?' ஈரானின் 7 நிபந்தனைகளை நிராகரித்த டொனால்டு ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடத்திய தாக்குதல் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் ஈரானுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்க ஈரான் துறைமுகத்திற்குள் எந்த கப்பல... மேலும் பார்க்க

'பெங்களூரு வரும் MLA-க்கள் இருதிருமணம் செய்து கொள்கிறார்கள்' - முதல்வர் சிவ்குமார் சர்ச்சை பேச்சு

பெங்களூருவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்து சட்டப்பேரவையில் கர்நாடகா முதல்வர் சிவக்குமார் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் சட்டமன்றத்தில்,''பெங்களூரு வரும் மக்கள் பெங்கள... மேலும் பார்க்க

ரூ.10 கோடி வாடகை; நடிகர் அஜய் தேவ்கன் வீட்டில் சலூன் கட்டுமான பணி - நிறுத்திய மாநகராட்சி நிர்வாகம்

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மும்பை ஜுகுவில் உள்ள கபோல் ஹவுசிங் சொசைட்டி பங்களாவில் வசித்து வருகிறார். இது 7802 சதுர அடி கொண்டது ஆகும். எனவே தனது பங்களாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாடகைக்கு விட அஜய் ... மேலும் பார்க்க