செய்திகள் :

KBC 18: மும்பைக்கு அமிதாப் பச்சனை பார்க்க வந்ததாக கூறிய அஜ்மல் கசாப்? - வழக்கறிஞர் சொன்ன தகவல்!

post image

பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2008ம் ஆண்டு கடல் மார்க்கமாக மும்பைக்குள் நுழைந்து இரண்டு நாட்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் பிடிபட்டான். அவன் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு 2012ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் உஜ்வல் நிகம் ஆஜரானார். அவர் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அமிதாப் பச்சன் அவருடன் உரையாடினார். நிகழ்ச்சியில் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நிகாமுடன் கலந்து கொண்டனர்.

மும்பை தாக்குதல் வழக்கைப் பற்றி விவாதிக்கும் போது, ​​கசாப் தூக்கிலிடப்படுவதற்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆனது ஏன் என்று அமிதாப் பச்சன் உஜ்வல் நிக்கமிடம் கேட்டார்.

உஜ்வல் நிகம்

அதற்கு பதிலளித்த உஜ்வல் நிகம், அஜ்மல் கசாப்பை கோர்ட்டிற்கு கொண்டு வந்தபோது அவன் என்னை பார்த்துக்கொண்டிருந்தான். நானும் அவனையே பார்த்தேன்'' என்றார்.

அவனை சுட்டு கொன்று இருப்பேன்

இந்த வழக்கின் போது கசாப் தனது கைது மற்றும் அடையாளம் குறித்து கூறிய பல தகவல்களை உஜ்வல் நிகம் நினைவு கூர்ந்தார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில், ``கசாப் ஆரம்பத்தில் 26/11 தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக நவம்பர் 6 ஆம் தேதி ஜூகு கடற்கரையில் கைது செய்யப்பட்டதாகக் கூறினான். அதோடு அமிதாப் பச்சனை பார்க்க மும்பை வந்ததாக அஜ்மல் என்னிடம் கூறினான்" என்றார். அதற்கு அமிதாப் பச்சன், ``இல்லை, அவன் அப்படி வந்திருந்தால் எனது வீட்டிற்குள் விட்டு இருக்கமாட்டேன், அவனை சுட்டுக் கொன்று இருப்பேன்" என்று தெரிவித்தார்.

விசாரணையில் கசாப் கூறியதாக கூறப்படும் மற்ற கூற்றுகளையும் உஜ்வல் நிகம் நினைவு கூர்ந்தார். அவரது கூற்றுப்படி, கசாப் தான் மைனர் என்று கூறினான். அதோடு தன்னை ரா உளவு அமைப்பு கைது செய்ததாக தெரிவித்தான். அவனது வயதைப் பற்றிய அவனது வாக்குமூலம் வழக்கில் மற்றொரு சட்டப் பிரச்னையாக மாறியது என்றும் தெரிவித்தார். இந்த உரையாடல் உஜ்வல் நிகம் மற்றும் 26/11 விசாரணையை மையமாகக் கொண்ட கோன்பனேகா குரோர்பதியின் சிறப்பு அத்தியாயத்தின் ஒரு பகுதியாகும். உஜ்வல் நிகம் இவ்வழக்கில் ஆஜரானது குறித்து 'தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் உஜ்வல் நிகம்' என்ற பெயரில் படம் தயாரிக்கப்படுகிறது. இப்படத்தில் ராஜ்குமார் ராவ் உஜ்வல் நிகமாக நடிக்கிறார், இப்படத்தில் வாமிகா கபியும் நடிக்கிறார்.

“அவங்க விரும்பிய மகன் Gemini தான்”- அம்மாவின் AI உரையாடலைப் பகிர்ந்து நெகிழ்ந்த மகன்! Viral Video

“WhatsApp-ல Status எப்படி வைப்பது?” என்று அம்மா கேட்க... பக்கத்தில் மகன் இருந்திருந்தால், “இதை இப்படிப் பண்ணுங்கம்மா” என்று சொல்லியிருப்பார். ஆனால், இங்கே அம்மாவுக்குக் கற்றுக்கொடுத்தது ஒரு AI!AI chat... மேலும் பார்க்க

`பேய், தற்கொலை, மாயம்'-மாணவி பாலியல் வன்கொடுமை வதந்தி; நள்ளிரவில் சூறையாடப்பட்ட பல்கலைக்கழகம்!

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் (LPU), மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக எழுந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களை தொடர்ந்து மா... மேலும் பார்க்க

'அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு மீண்டும் போர்?' ஈரானின் 7 நிபந்தனைகளை நிராகரித்த டொனால்டு ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடத்திய தாக்குதல் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் ஈரானுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்க ஈரான் துறைமுகத்திற்குள் எந்த கப்பல... மேலும் பார்க்க

'பெங்களூரு வரும் MLA-க்கள் இருதிருமணம் செய்து கொள்கிறார்கள்' - முதல்வர் சிவ்குமார் சர்ச்சை பேச்சு

பெங்களூருவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்து சட்டப்பேரவையில் கர்நாடகா முதல்வர் சிவக்குமார் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் சட்டமன்றத்தில்,''பெங்களூரு வரும் மக்கள் பெங்கள... மேலும் பார்க்க

ரூ.10 கோடி வாடகை; நடிகர் அஜய் தேவ்கன் வீட்டில் சலூன் கட்டுமான பணி - நிறுத்திய மாநகராட்சி நிர்வாகம்

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மும்பை ஜுகுவில் உள்ள கபோல் ஹவுசிங் சொசைட்டி பங்களாவில் வசித்து வருகிறார். இது 7802 சதுர அடி கொண்டது ஆகும். எனவே தனது பங்களாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாடகைக்கு விட அஜய் ... மேலும் பார்க்க

“First சாக்லேட் ... Next ஐபோன்” - ஊழியர்களுக்கு பரிசளித்து நெகிழ வைத்த UAE நிறுவனம்!

“எனக்கும் அந்த நிறுவனத்தில் வேலை கிடைக்குமா?”... சமூக வலைதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோவைப் பார்த்த பிறகு, பலரும் கேட்கும் கேள்வி இதுதான். காரணம், UAE-யின் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அதன் நிர்வாகம் வழங... மேலும் பார்க்க