செய்திகள் :

`கதை இன்னும் முடியல'- 15,000 ODI ரன்கள்… சதம் அடித்து மாஸ் காட்டிய கோலி; வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்!

post image

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 15,000 ODI ரன்கள் என்ற பிரமாண்ட மைல்கல்லை கடந்ததுடன், சதம் விளாசி ஆட்டத்தையும் இந்தியாவின் வசமாக்கியிருக்கிறார் கோலி. ஒரு பக்கம் அவரது வரலாற்றுச் சாதனை; மறுபக்கம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவின் வெற்றி என, திருவனந்தபுரம் மைதானத்தில் ரசிகர்களுக்கு ஒரே போட்டியில் இரண்டு மாஸ் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜஸ்டின் கிரீவ்ஸ் 101 ரன்களும், ஜான் கேம்ப்பெல் 62 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Shubman Gill

296 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – ஷுப்மன் கில் ஜோடி 74 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தது. ரோகித் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, ஷுப்மன் கில் – விராட் கோலி கூட்டணி ஆட்டத்தை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இந்த இன்னிங்ஸில் கோலி 15,000 ODI ரன்களை கடந்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். ஆனால் சச்சினுக்கு இந்த எண்ணிக்கையை எட்ட 377 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்ட நிலையில், கோலி அதை வெறும் 303 இன்னிங்ஸ்களில் எட்டி, 15,000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

Virat Kohli

அதோடு நின்றுவிடவில்லை. அதிரடியாக விளையாடிய கோலி 88 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 139 ரன்கள் விளாசினார். ஷுப்மன் கில் 108 பந்துகளில் 110 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் இந்திய அணி 41.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

JPN vs IND: கடைசி பந்து வரை ஆட்டம் காட்டிய ஜப்பான்… 2 ரன்களில் `த்ரில்' வெற்றி பெற்ற இந்தியா!

“ஆட்டம் சின்னதா இருக்கலாம்... ஆனா ட்விஸ்ட் பெரியதாக இருக்கணும்!” என்பதற்கு சரியான உதாரணமாக அமைந்திருக்கிறது இந்தியா - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி.வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்த இந்திய அணி... மேலும் பார்க்க

இறுதி கட்டத்தில் வெளியேறிய பதானி; தோனியின் முடிவு! - CSK புதிய கோச் ஆக ஜாகீர் கான் தேர்வானது எப்படி?

ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், தனது நீண்டகால பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்குப் பிறகு புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜா... மேலும் பார்க்க

CSK: "வெற்றிகரமான ஒரு அணியில் அங்கம் வகிப்பது பெருமை!" - தலைமைப் பயிற்சியாளரானது பற்றி ஜாகீர் கான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். Zaheer Khan கடந்த 18 வருடங்களாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சி... மேலும் பார்க்க

CSK: 'Left Arm Taking Over!' - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். Zaheer Khan கடந்த 18 வருடங்களாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சி... மேலும் பார்க்க

"சூர்யவன்ஷி இந்திய அணியில் தனக்கான வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டும்..!"- கவுதம் கம்பீர்

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று (செப்.18) நிறைவடைந்தது. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்... மேலும் பார்க்க

ரோஹித்தின் சாதனைக்கு முற்றுப்புள்ளி...கோலியின் சாதனை சமன்! - டி20-யில் அபிஷேக் சர்மாவின் சாதனை!

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி வியாழக்கிழமை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா படைத்த சாதனை... மேலும் பார்க்க