செய்திகள் :

சாலை விரிவாக்கத்திற்கு மசூதி இடிப்பு: லத்தி சார்ஜ், கண்ணீர் புகைக்குண்டால் கூட்டத்தை கலைத்த போலீஸார்

post image

மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாஹி மசூதியை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த போராட்டத்தில் கல் வீசப்பட்டது. அங்குள்ள் கந்தல் சதுக்கத்தில் இருந்து கோபால் மந்திர் வரையிலான சுமார் 900 மீட்டர் நீளத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. சிம்மஸ்த கும்ப மேளாவையொட்டி சாலையை 15 மீட்டருக்கு பாதையை விரிவாக்கம் செய்து வருகின்றனர். இதற்காக சாலையோரம் உள்ள சுமார் 60 வழிபாட்டுத்தலங்கள் அகற்றப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், ஷாஹி மஸ்ஜித் மற்றும் கடே ஹனுமான் மந்திருக்கு அருகில் சாலையை விரிவாக்கம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை மட்டும் இடிக்க நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக மசூதி நிர்வாகத்துடன் மாநகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மசூதியின் ஒரு பகுதியை மட்டும் இடிக்க மசூதி நிவாகமும் சம்மதித்தது. அவர்களே மசூதியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதற்கு மசூதியின் மற்றொரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை நடந்த மசூதி இடிப்பு பணியில் பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் உட்பட 2,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கல் வீசித் தாக்கினர். இதையடுத்து போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். அப்படியும் முடியாததால் போலீஸார் கூட்டத்தில் தடியடி நடத்தினர். இதனால் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து உஜ்ஜயினின் சில பகுதிகளில் பதற்றம் நிலவியது. காங்கிரஸ் எம்.பி இம்ரான் பிரதாப்காரி மசூதி வளாகத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ``மாநில அரசு பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் உஜ்ஜைன் ஷாஹி மசூதியை இடிக்கும் நிர்வாக முயற்சிகள் சற்று உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். 600 ஆண்டுகள் பழமையான புராதன சின்னத்தை சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுக்காக இடிப்பது வெறுப்பின் உச்சம். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது நிர்வாகம் என்ன செய்தியை சொல்ல விரும்புகிறது'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலைகள் நிறைந்த ஆற்றில் 25 கி.மீ நீச்சல் - 75 வயது பாட்டியின் உயிர் தப்பிப்பதற்கானப் போராட்டம்!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 75 வயதான கேஷி தலாய்.தன் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர், சனிக்கிழமை இரவு வழக்கம்போல குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், வீட்டின் அருகி... மேலும் பார்க்க

`குண்டர்களுடன் வந்து கமிஷன் கேட்டார்' - மோசமான சாலையை வீடியோ எடுத்தவரை அடித்த டெல்லி அமைச்சர்

டெல்லியில் நேற்று திலக் நகர் பகுதியில் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா அங்குள்ள திலக் நகர் பகுதியில் பழுதடைந்த சாலையை பார்வையிட வந்தார். அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை மிகவும் மோச... மேலும் பார்க்க

மதுபானக்கடைக்குள் நுழைந்து அரை பாட்டில் மதுவை குடித்து போதையில் உறங்கிய குரங்கு - திகைத்த மக்கள்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் நுழைந்த ஒரு குரங்கு, அங்கிருந்த வோட்கா பாட்டிலை திறந்து அரை பாட்டில் மதுவைச் சாவகாசமாக குடித்துவிட்டு, அங்கேயே மயங்கி விழுந்து தூங்கிவிட்டது.... மேலும் பார்க்க

KBC 18: மும்பைக்கு அமிதாப் பச்சனை பார்க்க வந்ததாக கூறிய அஜ்மல் கசாப்? - வழக்கறிஞர் சொன்ன தகவல்!

பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2008ம் ஆண்டு கடல் மார்க்கமாக மும்பைக்குள் நுழைந்து இரண்டு நாட்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் பிடிபட்டான். அவன் மீதா... மேலும் பார்க்க

“அவங்க விரும்பிய மகன் Gemini தான்”- அம்மாவின் AI உரையாடலைப் பகிர்ந்து நெகிழ்ந்த மகன்! Viral Video

“WhatsApp-ல Status எப்படி வைப்பது?” என்று அம்மா கேட்க... பக்கத்தில் மகன் இருந்திருந்தால், “இதை இப்படிப் பண்ணுங்கம்மா” என்று சொல்லியிருப்பார். ஆனால், இங்கே அம்மாவுக்குக் கற்றுக்கொடுத்தது ஒரு AI!AI chat... மேலும் பார்க்க

`பேய், தற்கொலை, மாயம்'-மாணவி பாலியல் வன்கொடுமை வதந்தி; நள்ளிரவில் சூறையாடப்பட்ட பல்கலைக்கழகம்!

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் (LPU), மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக எழுந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களை தொடர்ந்து மா... மேலும் பார்க்க