செய்திகள் :

முதலைகள் நிறைந்த ஆற்றில் 25 கி.மீ நீச்சல் - 75 வயது பாட்டியின் உயிர் தப்பிப்பதற்கானப் போராட்டம்!

post image

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 75 வயதான கேஷி தலாய்.

தன் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர், சனிக்கிழமை இரவு வழக்கம்போல குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், வீட்டின் அருகில் பாயும் பிராஹ்மணி நதிக்கரைப் பகுதிக்கு இயற்கை உபாதைக்காகச் சென்றுள்ளார்.

அப்போது பெய்த கனமழையால் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. எதிர்பாராதவிதமாக பாட்டியின் கால் சறுக்கி, கரைபுரண்டு ஓடிய பிராஹ்மணி நதியின் பெருவெள்ளத்தில் தூக்கி வீசப்பட்டார்.

பிராஹ்மணி நதிப் பகுதி என்பது ஆபத்தான முதலைகள் நிறைந்த பகுதி எனப் பெயர்பெற்றது. கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆற்றில் வலுவான தடுப்புகளை நிறுவும் அளவுக்கு அங்கு முதலைகளின் அச்சுறுத்தல் அதிகம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட மனிதர்களை அங்குள்ள முதலைகள் இரையாக்கியுள்ளன.

இருள் சூழ்ந்த அந்த நள்ளிரவில், ஆற்று வெள்ளத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி மிதந்தபடியே சென்றுள்ளார் கேஷி பாட்டி. மரணத்தின் விளிம்பிலும் தன்னம்பிக்கையைக் கைவிடாமல் நதியின் ஓட்டத்துடனே மிதந்து வந்துள்ளார்.

கேஷி தலாய்.

ஞாயிற்றுக்கிழமை காலை விடிந்தும் பாட்டியைக் காணாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் ஊர்மக்களும் தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்நிலையில், ஜாஜ்பூர் மாவட்டத்திலிருந்து நதிவழியாக சுமார் 25 கி.மீ தொலையிலுள்ள கேந்திரபாரா மாவட்டத்தின் பாலிபட்னா கிராம மக்கள், ஆற்று வெள்ளத்தில் மூதாட்டி ஒருவர் உதவி கேட்டு கைகளை அசைப்பதைக் கண்டு விரைந்து செயல்பட்டு அவரை மீட்டனர்.

இதுகுறித்து பாட்டியின் மருமகன் ஆரண்யா தலாய் கூறுகையில், "காலை முழுவதும் பாட்டியைத் தேடிக் கொண்டிருந்தோம். அப்போது கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பட்டமுண்டை காவல் நிலையத்திலிருந்து எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. பாட்டி உயிருடன் மீட்கப்பட்ட செய்தி எங்களுக்குக் கிடைத்ததும் பேரமைதியும் நிம்மதியும் அடைந்தோம்" என உருக்கத்துடன் தெரிவித்தார்.

கொட்டும் மழையிலும், இருள் சூழ்ந்த நள்ளிரவிலும், முதலைகள் உலாவும் நதியில் 25 கி.மீ தூரம் மிதந்து வந்து உயிர் பிழைத்த கேஷி பாட்டியின் இந்தச் சம்பவம் தற்போது பேசுபொருள் ஆகி உள்ளது.

சாலை விரிவாக்கத்திற்கு மசூதி இடிப்பு: லத்தி சார்ஜ், கண்ணீர் புகைக்குண்டால் கூட்டத்தை கலைத்த போலீஸார்

மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாஹி மசூதியை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த போராட்டத்தில் கல் வீசப்பட்டது. அங்குள்ள் கந்தல் சதுக்கத்தில் இருந்து கோபால் மந்திர்... மேலும் பார்க்க

`குண்டர்களுடன் வந்து கமிஷன் கேட்டார்' - மோசமான சாலையை வீடியோ எடுத்தவரை அடித்த டெல்லி அமைச்சர்

டெல்லியில் நேற்று திலக் நகர் பகுதியில் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா அங்குள்ள திலக் நகர் பகுதியில் பழுதடைந்த சாலையை பார்வையிட வந்தார். அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை மிகவும் மோச... மேலும் பார்க்க

மதுபானக்கடைக்குள் நுழைந்து அரை பாட்டில் மதுவை குடித்து போதையில் உறங்கிய குரங்கு - திகைத்த மக்கள்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் நுழைந்த ஒரு குரங்கு, அங்கிருந்த வோட்கா பாட்டிலை திறந்து அரை பாட்டில் மதுவைச் சாவகாசமாக குடித்துவிட்டு, அங்கேயே மயங்கி விழுந்து தூங்கிவிட்டது.... மேலும் பார்க்க

KBC 18: மும்பைக்கு அமிதாப் பச்சனை பார்க்க வந்ததாக கூறிய அஜ்மல் கசாப்? - வழக்கறிஞர் சொன்ன தகவல்!

பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2008ம் ஆண்டு கடல் மார்க்கமாக மும்பைக்குள் நுழைந்து இரண்டு நாட்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் பிடிபட்டான். அவன் மீதா... மேலும் பார்க்க

“அவங்க விரும்பிய மகன் Gemini தான்”- அம்மாவின் AI உரையாடலைப் பகிர்ந்து நெகிழ்ந்த மகன்! Viral Video

“WhatsApp-ல Status எப்படி வைப்பது?” என்று அம்மா கேட்க... பக்கத்தில் மகன் இருந்திருந்தால், “இதை இப்படிப் பண்ணுங்கம்மா” என்று சொல்லியிருப்பார். ஆனால், இங்கே அம்மாவுக்குக் கற்றுக்கொடுத்தது ஒரு AI!AI chat... மேலும் பார்க்க

`பேய், தற்கொலை, மாயம்'-மாணவி பாலியல் வன்கொடுமை வதந்தி; நள்ளிரவில் சூறையாடப்பட்ட பல்கலைக்கழகம்!

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் (LPU), மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக எழுந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களை தொடர்ந்து மா... மேலும் பார்க்க