செய்திகள் :

'தவெகவுடன் நெருக்கம் காட்டும் சினிமா பைனான்சியர் அன்புச் செழியன்?' - பின்னணி என்ன?

post image

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க மதுரை சென்றிருக்கிறார் முதல்வர் விஜய். மதுரையில் முதல்வர் கால் பதித்தவுடனேயே அவரை நேரில் சந்தித்திருக்கிறார் பிரபல சினிமா பைனான்சியரான அன்புச்செழியன். அதிமுக, திமுக என எல்லா கட்சிகளுக்கும் நெருக்கமாக இருந்த அன்புச் செழியன் இப்போது தவெகவையும் நெருங்குகிறாரா?

முதல்வர் விஜய் - அன்புச்செழியன்
முதல்வர் விஜய் - அன்புச்செழியன்

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார். முன்னதாக அவரை தவெக அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது சினிமா பைனான்சியரான அன்புச்செழியனும் முதல்வரை சந்தித்திருந்தார்.

அன்புச்செழியன் அம்மன் சிலை ஒன்றை முதல்வருக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார். அன்புச்செழியன் ஏன் தவெகவுடன் நெருக்கம் காட்ட நினைக்கிறார் என்று மதுரை தவெக வட்டாரத்தில் விசாரித்தோம். 'அன்புச்செழியன் எந்தக் கட்சிக்கும் எதிரானவராக தன்னைக் காட்டிக் கொள்ளமாட்டார். தன்னுடைய சினிமா பைனான்ஸ் தொழிலுக்கு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக ஆளுங்கட்சிகளுடன் இணக்கமாகவே இருப்பார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் அதிமுகவின் மேடைகளிலேயே ஏறியிருக்கிறார். கடந்த திமுக ஆட்சியில் திமுகவின் முக்கியப் புள்ளிகள் அத்தனை பேருடனும் நல்ல தொடர்பில்தான் இருந்தார். விஜய் மதுரையில் மாநாடு போட்டு கூட்டம் காட்டியதை பார்த்தும், பிரசார பயணங்களில் அவருக்கு இருந்த வரவேற்பைப் பார்த்து அன்புச்செழியனின் மகன் விவேக் தவெகவில் இணைய நினைத்தார். கடைசி நேரத்தில் சில தொகுதிகளுக்கு வேட்பாளரை நிறுத்துவதிலேயே சிரமம் இருந்தது. விவேக் அன்புச்செழியன் ஆர்வமாக இருந்ததால் அவருக்கு மதுரை தெற்கில் விசில் சின்னத்தில் நிற்க சீட் கொடுக்க தலைமை தயாராக இருந்தது. அன்புச்செழியனும் மகனுக்காக களத்தில் இறங்க தயாரானார்.

அந்தத் தகவல்களை உளவுத்துறை மூலம் அறிந்த அப்போதைய ஆட்சியின் மேலிடம், அன்புச்செழியன் மகன் தவெகவில் இணைந்து போட்டியிடுவதை விரும்பவில்லை. அந்தச் செய்தி அன்புச்செழியன் தரப்புக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்பிறகு தவெக வேட்பாளர்களை அறிவிப்பதற்கு ஒரு நாளைக்கு முன்புதான் விவேக் அன்புச்செழியன் பின்வாங்கினார். விஜய்யின் சினிமா படங்கள் பலவற்றிற்கும் அன்புச்செழியன் பைனான்ஸ் செய்திருக்கிறார். அதனால் முன்பிருந்தே முதல்வருக்கு நெருக்கமானவர்தான் அன்புச்செழியன். தேர்தல் நேரத்தில் அரசியல்ரீதியாக நெருக்கமாக நினைத்தார். அப்போதைய ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு சிலரால் அது நடக்காமல் போனது. இப்போது தவெக ஆளுங்கட்சியாகியிருக்கும் நிலையில் எந்த அழுத்தமும் இல்லாமல் வெளிப்படையாக நெருக்கம் காட்டுகிறார்' என்கின்றனர்.

``தேர்தல் ஆணையர் மாற்றம் தீர்வாகாது" - அமைச்சர் ராஜ் மோகன்; காங்கிரஸிடமிருந்து முரண்படுகிறதா தவெக?

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்து ... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி: 'விஜய், ஆதவ் , சி.டி.ஆருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்' - டி.ஆர் பாலு புகார்

ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகிய மூவரையும் 'சம்மன்' செ... மேலும் பார்க்க

மதுரை: மும்மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு முதலாவதாக தங்க மோதிரம் வழங்கிய முதல்வர் விஜய்!

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடங்கி இருக்கிறது. திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார் முதலமைச்சர் விஜய்.இதற்கு முன்னதாக மதுரை விமான நிலையத்திலிருந்து, ம... மேலும் பார்க்க

நெல்லை 'அன்புச் சுவர்': அன்பைப் பகிர்கிறோம்... `பொறுப்பை'யும் பகிர்வோமே!

குவியும் ஆடைகளும் தயங்கும் மக்களும்: நெல்லை அன்புச் சுவரின் நிலை“நமக்குத் தேவையில்லாதது, இன்னொருவருக்குத் தேவையாக இருக்கலாம்” என்ற நோக்கில், 2017-ஆம் ஆண்டு அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூர... மேலும் பார்க்க

``தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்குவது முதல்வரின் விருப்பம்"- அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல் குமார், மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் நடைபெறும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்க விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,"மதுர... மேலும் பார்க்க

ஹார்முஸ் ஈரானிடம் இல்லையா? எண்ணெய் விலை சொல்லும் உலக சந்தை, முட்டாளா? - அமெரிக்காவை கலாய்த்த ஈரான்

ஈரான் போர் தொடங்கி ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கப்பட்டதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயேதான் பெரும்பாலும் இருக்கிறது. அவ்வப்போது உச்சத்தை வேறு தொட்டிருக்கிறது. ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு,... மேலும் பார்க்க