செய்திகள் :

``தேர்தல் ஆணையர் மாற்றம் தீர்வாகாது" - அமைச்சர் ராஜ் மோகன்; காங்கிரஸிடமிருந்து முரண்படுகிறதா தவெக?

post image

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்து தீவிரமாகப் பேசிவருகிறார். தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூட, ``தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நிழலாகவே செயல்படுகிறார். அவரை பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்." எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ் மோகன், ``தேர்தல் ஆணையர் மாற்றம் தொடர்பான விவகாரத்தில், வெறும் தனிநபர் ஒருவரை மாற்றுவதால் மட்டும் எந்தப் பயனும் விளையாது என்பதே தமிழக வெற்றித் கழகத்தின் நிலைப்பாடாகும். இதுபோன்ற தனிநபர் மாற்றப் போராட்டங்கள் மூலம் உண்மையான பிரச்னையிலிருந்து மக்களைத் திசைதிருப்பவே ஆளும்கட்சியினர் முயல்கின்றனர். இத்தகைய திசைதிருப்பல் அரசியலுக்குத் தவெக ஒருபோதும் இணங்காது.

நாட்டின் தேர்தல் முறையில் நியாயமான மற்றும் சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெற வேண்டுமெனில், SIR என்ற தேர்தல் நடைமுறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஏனெனில், தற்போதைய ஒட்டுமொத்த எஸ்.ஐ.ஆர் செயல்முறையுமே ஒரு மிகப்பெரிய மோசடியாகவே அமைந்திருக்கிறது.
ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பாகவே தவெக தலைவர் இதுகுறித்துத் தெளிவான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அன்றும் சரி, இன்றும் சரி, என்றும் சரி SIR நடைமுறையைத் தமிழக வெற்றித் கழகம் தீவிரமாக எதிர்க்கிறது. தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை." என்றார்.

'தவெகவுடன் நெருக்கம் காட்டும் சினிமா பைனான்சியர் அன்புச் செழியன்?' - பின்னணி என்ன?

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க மதுரை சென்றிருக்கிறார் முதல்வர் விஜய். மதுரையில் முதல்வர் கால் பதித்தவுடனேயே அவரை நேரில் சந்தித்திருக்கிறார் பிரபல சினிமா பைனான்சியரான அன்புச்செழியன். அத... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி: 'விஜய், ஆதவ் , சி.டி.ஆருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்' - டி.ஆர் பாலு புகார்

ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகிய மூவரையும் 'சம்மன்' செ... மேலும் பார்க்க

மதுரை: மும்மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு முதலாவதாக தங்க மோதிரம் வழங்கிய முதல்வர் விஜய்!

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடங்கி இருக்கிறது. திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார் முதலமைச்சர் விஜய்.இதற்கு முன்னதாக மதுரை விமான நிலையத்திலிருந்து, ம... மேலும் பார்க்க

நெல்லை 'அன்புச் சுவர்': அன்பைப் பகிர்கிறோம்... `பொறுப்பை'யும் பகிர்வோமே!

குவியும் ஆடைகளும் தயங்கும் மக்களும்: நெல்லை அன்புச் சுவரின் நிலை“நமக்குத் தேவையில்லாதது, இன்னொருவருக்குத் தேவையாக இருக்கலாம்” என்ற நோக்கில், 2017-ஆம் ஆண்டு அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூர... மேலும் பார்க்க

``தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்குவது முதல்வரின் விருப்பம்"- அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல் குமார், மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் நடைபெறும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்க விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,"மதுர... மேலும் பார்க்க

ஹார்முஸ் ஈரானிடம் இல்லையா? எண்ணெய் விலை சொல்லும் உலக சந்தை, முட்டாளா? - அமெரிக்காவை கலாய்த்த ஈரான்

ஈரான் போர் தொடங்கி ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கப்பட்டதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயேதான் பெரும்பாலும் இருக்கிறது. அவ்வப்போது உச்சத்தை வேறு தொட்டிருக்கிறது. ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு,... மேலும் பார்க்க