செய்திகள் :

6 மாதங்களாக ரேஷன் கார்டு பயன்படுத்தவில்லையா? 'முடக்கப்படலாம்' - என்ன செய்வது?

post image

6 மாதங்களுக்கு மேலாக, ரேஷன் கார்டைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களா? நாளை (அக்டோபர் 1) உங்கள் ரேஷன் கார்டு முடக்கப்படலாம்.

இறந்தவர்களின் பெயரில் ரேஷன் கார்டு வைத்திருப்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு வைத்திருப்பது, இடம்பெயர்ந்த பின் இரண்டு பகுதிகளில் ரேஷன் கார்டு வைத்திருப்பது போன்ற தகுதியில்லாத ரேஷன் கார்டுகளை முடக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தாத ரேஷன் கார்டுகள் நாளை முதல் தற்காலிகமாக முடக்கப்பட உள்ளன.

மத்திய அரசு
மத்திய அரசு

இந்தியா முழுவதும் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6 மாதங்களாக ரேஷன் கார்டைப் பயன்படுத்தாத 1.58 கோடி பேர்களின் பெயர்களை முடக்க இந்த முன்னெடுப்பு.

உங்களுடைய ரேஷன் கார்டு முடக்கப்பட்டுவிட்டால்...

ஒருவேளை, நீங்கள் 6 மாதங்களாக ரேஷன் கார்டு பயன்படுத்தாமல் இருந்திருந்தால், பிரச்னை இல்லை. உங்களது ரேஷன் கார்டு தற்காலிகமாக ‘மூன்று மாதங்களுக்கு’ முதலில் முடக்கப்படும்.

இந்த மூன்று மாதக் காலத்தில் உங்களது KYC அப்டேட்டைச் செய்துவிட்டால், மீண்டும் உங்களது ரேஷன் கார்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மூன்று மாதங்களுக்குப் பின்னும், KYC அப்டேட் செய்யப்படாத ரேஷன் கார்டுகள்தான் முற்றிலும் முடக்கப்படும்.

இதனால், மூன்று மாதங்களுக்குள் உங்கள் KYC-ஐப் பக்காவாக அப்டேட் செய்துவிடுங்கள் மக்களே!

'மகனுக்காக தவெகவில் இணையும் செம்மலை?' - பின்னணி என்ன?

சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை, இன்று தாராபுரத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.செம்மலைசெம்மலை தவெகவில் இணை... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை வழக்கு: "அரசு கொடுத்த ஆவணங்கள் குற்றச்சாட்டுக்கு முரணானவை" - நீதிபதி சொன்னது என்ன?

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித் பெற்றோர்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவு.அதே போல் சுர்ஜித்தின் உறவினரான ஜெயபால் மீதான குற்றப் பத்திரிக்க... மேலும் பார்க்க

GPS-ஐ கனிம வளத்துறை இணையதளத்துடன் இணைக்காத வாகனங்களில் கனிமம் ஏற்ற தடை; நாளை முதல் அமல்

ஜி.பிஎ.ஸ் கருவியை நிறுவி அவற்றை கனிம வள மேலாண்மை அமைப்பின் இணையதளத்துடன் இணைக்காத வாகனங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்ல நாளை முதல் அனுமதியில்லை. ஜிபிஎஸ் டேட்டாகனிம வளத்தைச் சட்டவிரோதமாகக் கடத்துவதைத... மேலும் பார்க்க

சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கர் பிரபல யூடியூபரான சவுக்கு சங்கருக்கு எதிராக பெண் ஒருவர் அவதூறா... மேலும் பார்க்க

புதுச்சேரி: புழுக்களுடன் அழுகிய நிலையில் 50 கிலோ இறைச்சி; துணை ஆட்சியருக்கு அதிர்ச்சி கொடுத்த உணவகம்

புதுச்சேரி, காரைக்காலில் செயல்பட்டு வரும் சில ஹோட்டல்களில், இறைச்சிகளைப் பல நாட்கள் பதப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் புகார்கள் சென்றன. அதனடிப்படையில் பெண் த... மேலும் பார்க்க