செய்திகள் :

பீகார்: அரசு அதிகாரிகளான தம்பதிகள் வீட்டில் ரெய்டு; ரூ.1 கோடி பணம், நகை, சொத்து பறிமுதல்

post image

பீகாரில் பாட்னா கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் ரவீந்திர குமார் திவாகர். அவரது மனைவி குமாரி ஸ்வீட்டி, டானாபூர் மாவட்ட துணைப் பதிவாளராக இருக்கிறார். இரண்டு பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புகார் வந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இரண்டு பேரின் வீடுகளில் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் பணம் மற்றும் நகைகளுடன் சொத்து, வங்கிக் கணக்குகள், முதலீடுகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்குக் கொண்டு வரப்பட்டன. லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பணம், நகைகள் மற்றும் பிற ஆவணங்களைச் சரிபார்த்தனர்.

இதுவரை, பாட்னா மற்றும் பெகுசராய் பகுதியில் உள்ள தம்பதிகளின் வீடுகளில் இருந்து, 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் ஆடம்பர கடிகாரங்கள் மீட்கப்பட்டுள்ளன.

எனினும், மீட்கப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகளின் சரியான அளவு மற்றும் மதிப்பு விசாரணை முடிந்த பின்னரே உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரெய்டில் ரூ.80 லட்சம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 48 ஆடம்பர கைக்கடிகாரங்கள், தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாட்னாவில் ரூ.1.07 கோடி மதிப்புள்ள இரண்டு பிளாட்கள் இரண்டு பேர் பெயரில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தவிர குமாரி மற்றும் அவரது தந்தை பெயரில் ரூ. 1.28 கோடி மதிப்பில் பாட்னாவில் மூன்று மனைகளை வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திவாகர் 2000 ஆம் ஆண்டில் அரசாங்கப் பணியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று அவர் அக்டோபர் 2025ம் ஆண்டு கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக மாறினார். அவரது மனைவி 2013ம் ஆண்டே துணை பதிவாளராகப் பணியில் சேர்ந்தார்.

"எங்களோட இருக்கணும்னு நினைச்சோம்" - இறந்த தந்தை உடலை 4 ஆண்டுகளாக கிளினிக்கில் வைத்திருந்த பெண்

மும்பை மலாடு பகுதியில் மூடப்பட்டு இருந்த கிளினிக் ஒன்றில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வந்து கொண்டிருந்தது. அந்த கிளினிக்கிற்கு வெளியில் கேட்டில் 'டேகேர் சென்டர்' விரைவில் திறக்கப்படும் என்று ஒரு அறி... மேலும் பார்க்க

'வெளியில் சொன்னால் என்ன ஆகுமோ?'- Silicon Valley-யில் மறைக்கப்படும் பாலியல் சம்பவங்கள்; பகீர் பின்னணி

உலகின் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் மையம்தான் சிலிக்கான் பள்ளத்தாக்கு. இது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் அமைந்திருக்கிறது. உலகில் ஐ.டி படித்தவர்களின் கனவு இடம் இது ... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர்: CISF வீரர்களிடையே வாக்குவாதம்; 4 வீரர்களைச் சுட்டுக்கொன்ற தலைமைக் காவலர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்துவா மாவட்டத்தில், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF) வீரர் ஒருவர் சக வீரர்களைச் சுட்டுக்கொன்றுள்ளார். என்ன நடந்தது? ஜம்மு காஷ்மீரில் ஓடும் ரவி நதியின் கிளை ஆறு சேவா நதி.... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: திமுக தொழிற்சங்க நிர்வாகியான அரசு பஸ் கண்டக்டர் வெட்டிக் கொலை; போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை அருகே உள்ள ஆனந்ததாண்டவபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(வயது 45). இவர் அரசு பஸ்ஸில் கண்டக்டராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர... மேலும் பார்க்க

`அடையாளம் காட்டிய ஸ்கூல் பேக்' - யூடியூப்பர் மதுமிதாவின் நகை கொள்ளையில் எஸ்.பி சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வி.ஐ.பி கார்டனில் வசித்துவரும் யூடியூப்பர் மதுமிதா வீட்டில் கடந்த 24-ம் தேதி இரவு வீட்டின் பின் கதவை கட்டர் மெஷின் மூலம் உடைத்து சுமார் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையட... மேலும் பார்க்க

சென்னை: திருமண ஆசையை காட்டி இளம்பெண்ணிடம் நகை, பணம் பறித்த இளைஞர் - சிக்கியது எப்படி?

சென்னை, அயனாவரம், புதுநகர் பகுதியில் வசித்து வரும் 32 வயது பெண் ஒருவர் அழகுக்கலை நிபுணராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய முதல் கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த... மேலும் பார்க்க